Wednesday, 8 October 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் முதல்படியாக முத்துப்பேட்டையில் பிறமத சகோதரர்களுக்கான மாபெரும் கேள்விபதில் நிகழ்ச்சி இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்


ஆநே பள்ளிகூடம் அருகே அநீதிக்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்

நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் எப்போதுமே தவ்ஹித்ஜமாத் முன்னிலை வகிக்கும் 
ஜாக் பெருநாளை முன்னிட்டு சனிக்கிழமை 04.10.2014 அன்று முரீது பைஜி குரூப் ஒரு மாபெரும் இஸ்லாமிய!! இசை நிகழ்ச்சி நடத்தியது 
இதை சிலர் ஆதரித்தாலும் பலர் இதை கண்டிக்காமல் நமக்கேன் வம்பு என் ஒதுங்கிகொண்டனர்
தவறை சுட்டி காட்டுவதில் யாருக்கும் வளைந்து கொடுக்காத தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அதே இடத்தில் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்தது.
இது தாயி ராஜித்தின் அவர்கள் இசை எந்த அளவுக்கு இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதரத்தோடு சுட்டிக்காட்டி நேற்று நடந்த அந்த இசை நிகழ்ச்சியை கடுமையாக கண்டித்தார்கள்
இன்று அரபாநோன்பு இப்தார் ஏற்பாடு நாளை காலை திடலில் பெருநாள் தொழுகை ஏற்பாடு குர்பானி ஆயத்த வேலைகள் இவ்வளவு வேலை பளுவுக்கு மத்தியிலும் இந்த அவசியமான பனியை செய்த தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகளுக்கு அல்லாஹ் நன்மையை கொடுக்க துவா செய்வோம்



Monday, 6 October 2014

புதுதெரு தவ்ஹித்திடலில் நடைபெற்ற ஹஜ்பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை புதுதெரு தவ்ஹித்திடலில் சரியாக 7.30 மனியளவில் நடைபெற்றது

நபிவழியில் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழுகவேண்டும் என்பதை  அதிகமான மக்கள் விளங்கிவருவதால் மக்கள் கூட்டம் வருடா வருடம் அதிகரித்து வருகிரது

சுன்னத்தான முறையில் வனக்க வழிபாடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மிக தெளிவாக புரிந்து கொண்டதால் பக்கத்தில் ஏசி வசதியோடு பள்ளிவாசல்கள் இருந்தும் காலையில் இருந்தே மைக் மூலம் அழைத்தும் மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தவ்ஹித்ஜமாத் நடத்தும் திடல் தொழுகைக்கு சாரைசாரையாக வந்து குவிந்தனர்

தாயி ராஜிதீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் தெளிவாகவும் சுருக்கமாகவும் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்