Thursday 29 August 2013

ஏழை சகோதரிக்கு இலவசமாக தையல்மிஷின் வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.08.2013 அன்று முத்துப்பேட்டை மஜீதியா தெருவை சேர்ந்த ஏழை சகோதரி ஒருவருக்கு இலவசமாக தையல்மிசின் வழங்கப்பட்டது

Sunday 25 August 2013

முதல்முறையாக பென்களுக்கான மபெரும் ஒருநாள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.08.2013 அன்று காலை 9 மனிமுதல் மாலை 6 மனிவரை அகாஷ் தொட்டவளாகத்தில் குவைத் சர்புதீன் அவர்கள் இல்லத்தில் மாபெரும் ஒருநாள் பென்கள் தர்பியா மிக சிறப்பாக நடைபெற்றது

இதில் கலந்து கொண்டவர்களுக்கு , குர் ஆன் ஓதும் பயிற்ச்சி தொழுகை பயிற்ச்சி, மற்றும் பெண்கள் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் குரான் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமும் பயிற்ச்சியும் அளிக்கப்பட்டது

சகோதரி  முத்துப்பேட்டை ஜசீரா ஆலிமா அவர்களும், சகோதரி முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்களும் இந்த தர்பியா நிகழ்சியை குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் மிகவும் சிறப்பாக நடத்தினார்கள்

கலந்துகொண்ட மக்கள் இது மிகவும் பலனுள்ளதாக இருந்தது நிறைய இஸ்லாமிய சட்டங்களை இன்றுதான் தெளிவாக தெறிந்து கொண்டோம் மாதம் ஒரு தடவை இதே போல தர்பியா நிகழ்ச்சிகள் நடத்தினால் மிகவும் பலனுள்ளதாக இருக்கும் என்று கருத்து தெறிவித்தார்கள்

 முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகளோடு விடுமுறையில் தாயகம் வந்து இருந்த துபாய்,கத்தார்,சவுதி வாழ் முத்துப்பேட்டை தவ்ஹித் சகோதரர்களும் இனைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ்.


Saturday 24 August 2013

பெண்வீட்டு விருந்தும் புலனாய்வு ரிப்போட்டும்

தவ்ஹித்ஜமாத்தில் பெண்வீட்டு விருந்து சாப்பிடகூடாது என்கிறார்கள் பென் வீட்டில் கூச்சப்படாமல் விருந்து சாப்பிடும் எங்களை மானங்கெட்டவர்வர்கள் என்கிறார்கள் ஆனால் முத்துப்பேட்டையில் தவ்ஹித்ஜமாத்தின் முன்னாள் நிர்வாகி பென்வீட்டில் விருந்து சாப்பிட்டுள்ளார் இதோ போட்டோ ஆதாரம்

இது எப்படி இருக்கிரது என்றால் ஒரு காவி சிந்தனை உள்ளவன் முஸ்லிம்களை பார்த்து  இஸ்லாத்தில் சாராயம் குடிப்பது கூடாது அது பாவமான செயல் என்கிறீர்கள் எங்களை போன்ற குடிமகன்களையல்லாம் திட்டுகிறீர்கள் ஆனால் இதோ ஒரு முஸ்லிமே சாராயம் குடிக்கிரான் இதோ போட்டோ ஆதாரம் என்று சொன்னால் அவனுக்கு நாம் என்ன பதில் சொல்வோமோ அதேதான் இதற்க்கும் பதில்

தவ்ஹித்ஜமாத்தை பொருத்தவரை தவறு யார் செய்து அது நிறுபிக்கப்பட்டாலும்உடனே நடவடிக்கை எடுக்கப்படும் தவறு செய்தவர்மீது அவர் எவ்வளவு பெறிய பொருப்பில் இருந்தாலும் தயவுதாட்சனை இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் ஒரே அமைப்பு தவ்ஹித்ஜமாத்தான்

தவ்ஹித்ஜமாத்தி உள்ளவர்களின் தவறை கண்டுபிடிக்க என்று சங்கமல்லாம் ஆரம்பித்து அதற்க்கு உறுப்பினரல்லாம் சேர்த்து ஊர் ஊராக திரிந்தும் ஒரே ஒரு முன்னாள் நிர்வாகி பென் வீட்டில் சாப்பிட்டார் என்பதை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்துள்ளது என்றால் உன்மையிலேயே நாம் தவ்ஹித்ஜமாத்தில் இருப்பதற்க்கு பெருமைபடனும்.

குற்றம் சுமத்துவதற்க்கு கூட ஒருதராதரம் வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிரது. இப்போது பொருப்பில் உள்ள நிர்வாகி ஒரு தவறு செய்து அது தவ்ஹித்ஜமாத் நிர்வாகத்திற்க்கு தெறியப்படுத்தி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிர்வாகம் மௌனம் காத்தால் குற்றம் சுமத்தலாம்.

குற்றம் சுமத்துபவரே சொல்கிறார் அவர் முன்னாள் நிர்வாகி என்கிறார் அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் அறிவாளிகளே சொல்லுங்களேன் வேண்டுமானால் தமிழ்நாட்டை விட்டு நீக்கிவிடலாமா?

தவ்ஹித்ஜமாத்தின் குற்ரங்களை கண்டுபிடிக்க அமைத்துள்ள சங்கத்திற்க்கு எங்களுடைய வாழ்த்துக்கள். இப்படி கேனத்தனமாக முன்னால் நிர்வாகி முன்னால் உறுப்பினர் என செய்தி கொண்டுவராமல் இப்போது பொருப்பில் உள்ள நிர்வாகி தவறு செய்யும்போது கண்டுபிடித்து ஆதாரத்தோடு தந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு உங்களுக்கும் சன்மானம் தருகிறோம்


Friday 23 August 2013

மோடியின் தகிடுதத்தமும் மீடியாவின் இரட்டை வேடமும்

உலகிலேயே மோடிதான் சிறந்தவர் என்பதை காட்டுவதற்க்காக பனத்தை வாரி இறைத்து தகிடுதத்தம் வேலைகள் செய்வதும் அது காற்று இறங்கிய பலூன் போல புஸ்ஸ்ஸ் என்று போவதும் தினமும் நடக்கும் வாடிக்கையாகிவிட்டது

ஒரு சின்ன பிரச்சனையை கூட ஊதி ஊதி பெறிதாக்கும் இந்த மீடியாக்கள் மோடி வகையராக்கள் செய்யும் இந்த தில்லு முல்லு வேலைகளை ஏதோ உப்புசப்பு இல்லாத செய்தி போல பிரசுரிக்காமல் விடுவதும் அல்லது போகிற போக்கில் சாதரனமாக சொல்லிவிட்டு போவதுமாக வாங்கிய காசுக்கு கூடுதல் விசுவாசமாக நடக்கிரார்கள்

இதில் சமீபத்திய புருடாதான் அமிதாப்பாச்சன் அவர்கள் மோடி பிரதமராக விருப்பம் தெறிவித்தார் என ஒரு வீடியோவை வெளியிட்டார்கள்

இதை பார்த்த அமிதாப்பாச்சன் அவர்கள் ஆடி போய்விட்டார்கள் நாமே நடிகன் நம்மிடமே இந்த வேலை காட்டுகிறார்களே என கோபப்பட்டு பிரசை கூப்பிட்டு கிழிகிழி என கிழித்து காயப்போட்டுவிட்டார்

2007ம் ஆண்டு அமிதாப் பேசிய வீடியோவில் ஆடியோவை எடிட் செய்து மோடிக்கு ஆதரவாக அமிதாப் பேசியதாக வீடியோவை மாற்றி செய்தி வெளியிட்டுள்ளார்கள்

இதில் நம் ஆதங்கம் என்ன என்றால் தமிழ் செய்திதாள்கள் எதுவும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை நியூஸ் சேனல்களும் இதை திரும்ப திரும்ப சொல்லி மோடியை காட்டிகொடுக்கவில்லை அயோக்கியதனம் செய்வதில் எவ்வளவு ஒற்றுமை ?




நாம் என்ன பரிசோதனை எலிகளா?பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டுகம்பளம் விரிக்கும் அரசாங்கம்


பல நேரங்களில் ஒரு மருந்தை எதற்காக தடை செய்கிறோம் என்பதிலும் தெளிவில்லை. மீண்டும் அத்தடையை எதற்காக நீக்குகிறோம் என்பதற்கும் வலுசேர்க்கும் காரணங்கள் சொல்லப்படுவதில்லை. அண்மையில் தடை செய்யப்பட்டு பின்னர் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட "பியோகிளைடசோன்' மருந்து இதற்கு ஒரு உதாரணம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டுவந்த மாத்திரை "பியோகிளைடசோன்'. இதனை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என 18.6.2013 அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணை மூலம் தடைவிதித்தது மத்திய அரசு. இதற்கு சொல்லப்பட்ட காரணம், சில மருத்துவ இதழ்களில் இந்த மருந்தினால் பக்கவிளைவுகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதாகவும் கூறப்பட்டிருப்பதால் இதனை தடை செய்வதாக அரசு கூறியது.
தடை செய்து உத்தரவு வழங்கிய பின்னர், தடை செய்யப்பட்டுள்ள மருந்து தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றுதானா என்பதைக் கண்டறிய ஒரு வல்லுநர் குழுவை நியமிக்கிறார்கள். மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் இந்த வல்லுநர் குழுவை அமைத்து அவர்களிடம் அறிக்கை கோருகிறது. "இந்தத் தடையை
நீக்கிவிடலாம்' என்று அவர்கள் பரிந்துரை செய்தவுடன், மத்திய அரசு 31.7.2013 அரசிதழில் "பியோகிளைடசோன்' மாத்திரை மீதான தடை விலக்கப்படுவதாக ஆணை வெளியிடுகிறது.
மருத்துவ இதழ்களில் வெளியான பின்விளைவுகள் பற்றிய செய்திகள் உண்மையாக இருந்தால், இந்தியாவில் அது குறித்து மருத்துவமனைகள் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உதவியோடு, மருந்தை உட்கொண்டு வரும் சர்க்கரை நோயாளிகள் அனைவரையும் ஆய்வுக்கு உட்படுத்தி, எவ்வளவு காலமாக அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கணித்திருக்க வேண்டும். அதுதான் ஒரு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை. தடை விதிக்கும்போது வல்லுநர் குழுவைஅமைத்து, பரிந்துரை கேட்டு தடை விதிக்கவில்லை. தடையை நீக்கும்போதும் எந்த மருத்துவ ஆய்வுகள் குறித்தும், அல்லது இந்த மருந்தின் பின்விளைவுகள் குறித்தும் பேசவில்லை. வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று, தடையை நீக்கிவிடுகிறார்கள்.
பரிந்துரைக் குழுவின் ஆலோசனையை ஏற்று, அரசு ஒரு கடுமையான விதியை புகுத்துகிறதாம். அதாவது, மாத்திரையின் அட்டைபெட்டி மீது, ""டாக்டர்களின் கவனத்துக்கு - இந்த மருந்தை நோய் தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு முதல் மருந்தாக பரிந்துரைக்காதீர்; 6 மாதங்களுக்குப் பிறகு நோயாளியை சோதித்துப் பார்த்து, பின்விளைவுகள் காணப்பட்டால் இந்த மருந்தைப் பரிந்துரைக்காதீர்கள்; சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ள, அல்லது ஏற்கெனவே புற்றுநோய்க்கு ஆளானவர்களுக்கு பரிந்துரைக்காதீர்'' என்று எழுதி விற்பனை செய்யப்பட வேண்டுமாம்.
அதாவது, புகைபிடித்தல், மதுஅருந்துதல் ஆகியவை உடல்நலத்துக்குக் கேடு என்று சிகரெட் அட்டையின் மீது, மதுபாட்டில்கள் மீது அச்சிடுவதைப் போல, இந்த மருந்தின் தீமை குறித்தும் அட்டைப்பெட்டியில் அச்சிட்டால் போதுமானது. ஆனால் யார் இதைப் பொருட்படுத்தப்போகிறார்கள்?
உண்மையாகவே அரசுக்கு இந்த விவகாரத்தில் அக்கறை இருக்குமானால், அவர்கள் இந்த மருந்து பயன்படுத்தும் அனைத்து சர்க்கரை நோயாளிகளிடமும் "இதன் தீமைகளை அறிந்திருக்கிறேன்' என்று ஒப்புதல் கடிதம் பெற்று மாத்திரையை சாப்பிடுவதையும், 3 அல்லது 6 மாதங்களில், இதற்கென நியமிக்கப்படும் மருத்துவ அதிகாரியிடம் பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதையும் கட்டாயமாக்கியிருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளும் மாத்திரை குறித்து அறிந்து கொள்வார்கள். இந்த மருந்தின் பக்கவிளைவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் அரசுக்கு நேரடியாக கிடைக்கும். ஆனால் அதைச் செய்ய அரசு ஆர்வம் காட்டவில்லையே, ஏன்?
இந்தியாவில் தொற்றில்லா நோய்களில் மிகவும் அதிகமாகி வருவது இதயநோய் மற்றும் சர்க்கரை நோய். ஆயிரம் பேரில் 37 பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் பேரில் 62 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இரு தினங்களுக்கு முன்பு, மத்திய சுகாதார அமைச்சர் குலாம்நபி ஆசாத், மக்களவையில் தெரிவித்த புள்ளிவிவரம். அப்படியிருக்கும்போது, இத்தகைய மாத்திரைகளை மீண்டும் அனுமதிக்கும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்?
அமெரிக்கா தனது உணவு மற்றும் மருந்து சட்டத்தை மேலும் இறுக்கி கடுமையாக்கிக் கொண்டிருக்கிற வேளையில், நாம் எளிமையாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் நுழையும் எந்த மருந்தையும் ஆய்வுக்கு உட்படுத்தாமல் (கிளினிக்கல் டிரையல்) அனுமதிக்க முடியாது என்று நம்மால் சொல்ல முடியவில்லையே, ஏன்?
பன்னாட்டு நிறுவனங்கள் பல புதிய மருந்துகளை இங்குள்ள இந்தியர்களுக்கு கொடுத்துதான் ஆய்வு செய்கின்றன. இதில் பல மருந்துகள் அரசாங்கத்துக்கு சொல்லப்படாமலேயே ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்தியர்கள் பரிசோதனை எலிகளாக்கப்படுகின்றனர். இதை இந்திய அரசு தெரிந்தே அனுமதிக்கிறது. இந்தியனாய்ப் பிறந்தது தவறு!
2010-ஆம் ஆண்டு 13 மருந்துகள், 2011-ல் 3, 2012-ல் 8, நிகழாண்டில் இதுவரை 2 மாத்திரைகள் கிளினிக்கல் டிரையல் (மருந்தக ஆய்வுகள்) இல்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொல்கிறார். யாருமே கேள்வி கேட்கவில்லை. இந்த மருந்துகள் எவை? எந்த நோய்க்களுக்கானது? இதன் பின்விளைவுகள் குறித்து நோயாளிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தின் கூச்சல் அமளியில் இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது

Saturday 17 August 2013

நபிவழிஜனாசா நல்லடக்கம் அடியக்காமங்களத்தில் நடந்தது என்ன?

அடியக்காமங்களத்தில் நபிவழிபடி ஒரு குழந்தையின் ஜனாசவை நல்லடக்கம் செய்யவிடாமல் தடுத்து நாம் நினைத்தை சாதித்து விடலாம் என நினைத்தவர்களுக்கு தவ்ஹித்ஜமாத்தின் முயற்ச்சியால் மரன அடி விழுந்தது அல்ஹம்துலில்லாஹ்

ஒரு ஜனாசாவை எந்த முறையில் அடக்கம் செய்வது என்பதை தீர்மானிப்பது அந்த ஜனாசாவின் வாரிசுகளே அல்லாமல் ஊரில் இருக்கும் புரம்போக்குகள் அல்ல என்பதை காவல்துரை முதலில் புறிந்துகொள்ளவேண்டும்

ஜனாசாவுக்கு சம்மந்தம் இல்லாதவன் நீ இப்படிதான் அடக்கனும் அப்படிதான் அடக்கனும் என கட்டுப்பாடுகள் போட்டு ஜனாச அடக்குவதை தடுத்தால் அவனை முட்டிக்கு முட்டிதட்டி உள்ளே போடுவதை விட்டு விட்டு அவனோடு பேச்சுவார்த்தை நடத்துவது கேவலமான ஒரு செயலாகும்

அவன்வீட்டு எல்லையிலோ அல்லது அவன் வீட்டு ஜனாசாவையோ நாம் அடக்கம் செய்ய போனால் அவன் தடுப்பதில் நியாயம் உள்ளது ஊருக்கு பொது மையவாடியில் ஜனாசாவுக்கு சொந்தகாரன் அவன் எதை சரி என நினைக்கிறானோ அதன்படி அடக்கம் செய்வதற்க்கு எதிர்ப்பு தெறிவிப்பதும் அதை காவல்துறை வேடிக்கை பார்ப்பதும் நியாயமாகாது

இதே போலதான் அடியக்காமங்களத்தில்வபாத்தான கைகுழந்தையை அந்த குழந்தையை பெற்றெடுத்தவர்கள் நபிவழிபடி அடக்கம் செய்வதை தவ்ஹித்பெயரை சொல்லி பனம் வசூல் செய்து அதில் பள்ளிவாசல் கட்டி பின்பு அதை தவ்ஹிதிற்க்கு எதிராக பயன்படுத்தி வரும் சுமையா டிரஸ்ட்டை சேர்ந்த ஒருத்தர் அடக்கம் செய்யவிடமல் பிரச்சனை செய்தாராம்

அவரை தூக்கி ஜாமினில் வெளிவரமுடியாத கேசில் உள்ளேதள்ளி நொங்கு எடுப்பதை விட்டு விட்டு காவல்துரை பேச்சுவர்த்தை நடத்தியதாம்

பொருத்து பொருத்து பார்த்த தவ்ஹித்ஜமாத் இனிமேல் பேச்சுவார்த்தையும் கிடையாது ஒன்னும் கிடையாது அடக்கம் செய்ய போகிறோம் உங்களால் என்ன செய்ய இயலுமோ செய்து கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு ஜனாசவை எடுத்து கொண்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மையவாடி நோக்கி சென்றார்கள்

உடனே போலி வீரம் பேசியவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மன் ஒட்டவில்லை என்ரு ஒரு பழமொழி சொல்வார்கள் அதே போல நாங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கிறோம் என சொல்லி மன்னுக்கு மட்டும் 320 ரூபாய் பனம் தாருங்கள் என்றார்களாம் இது 2013ம் ஆண்டில் மிகப்பெரிய நகைச்சுவை என சொல்லி ஊரில் உள்ள நடுநிலையாளர்கள் சிரிக்கிறார்களாம்

இதை ஆரம்பத்திலேயே சொன்னால் 320 என்ன 520 ரூபாயாக தந்து இருப்போமே இதுக்கா இவ்வளவு கூத்து என கேள்விபட்டவர்கள் எல்லாம் காரிதுப்பாத குறையாக ஆதங்கப்படுகிறார்களாம் அடிக்கிரவகையில் அடித்தால் அம்மியும் ஆடும் என்பது இதன்மூலம் புறிகிறது

Wednesday 14 August 2013

தர்ஹாடிரஸ்ட்டியும் தமுமுக தலைவரும் சந்தித்து பேசியது என்ன? ஓர் விளக்கம்

தமுமுக தலைவர் ரிபாயி மற்றும் முத்துப்பேட்டை தர்ஹா டிரஸ்ட்டி சந்திப்பு சம்மந்தமாக நாம் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம் அதற்க்கு நாம் எதிர்பார்த்த அளவு வாத பிரதி வாதங்களும் ,நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பனியும் நடந்தது அல்ஹம்துலில்லாஹ்

தமுமுக தலைவரும் தர்ஹா டிரஸ்ட்டியும் என்ன பேசினார்கள் என்பது நமக்கு தெறியாது என்பது உன்மைதான்  ஆனால்அவர்கள் சந்தித்து பேசுவதற்க்கு முதல்நாள் முத்துப்பேட்டயில் கந்தூரிவிழா நடைபெற்றது அந்த இனைவைப்பு கந்தூரியில் இருந்து மக்களை காப்பாற்ற தவ்ஹித் ஜமாத்தை தவிர  தமுமுக உள்படஎந்த ஒரு இயக்கமும் சிறிய முயற்ச்சியும் செய்யவில்லை ஆதரவாகத்தான் இருந்தார்கள்

 தவ்ஹித் ஜமாத்தோடு சேர்ந்து செய்யாவிட்டாலும் பாபர் மசூதி பிரச்சனையில் எப்படி தனிதனியாக செய்கிறார்களோ அதை போல  கந்தூரிக்கு எதிராக தமுமுக தனியாகவும் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை தவ்ஹித்ஜமாத் மட்டும்தான் அரசுரீதியாகவும் போஸ்ட்டர் மூலம் மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பலகட்ட முயற்ச்சிகளை செய்தது

இது நடந்த அடுத்த நாளே இது போன்ற கந்தூரிகளுக்கள்ளாம் தலைவரான [தர்ஹாக்கள் கூட்டமைப்பு தலைவர்] தர்ஹா டிரஸ்ட்டியை தமுமுக தலைவர் சந்தித்தது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது

 ஏற்கனவே ஓட்டுக்காக ஆதீனத்திடம் ஆசிவாங்கியது, ஓட்டுக்காக ராமேஸ்வரத்தை இந்துக்களின் புனித பூமியாக்க முதல்வரிடம் பரிந்துரைத்தது இதையல்லாம் வைத்து ஓட்டுக்காக கந்தூரியையும் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்களோ என நினைத்தோம்

உண்மையிலேயே கந்தூரியை ஆதரித்து பேசாமல் எதித்து பேசி இருக்கலாம் அல்லது அதை பற்றி பேசாமல் வேறு செய்தி பேசி இருக்கலாம் என்பதை நாம் மறுக்கவில்லை நாங்கள் சொன்னது சரிதான் என வரட்டுபிடிவாதம் பிடிக்கவும் விரும்பவில்லை

ஆனால் நாங்கள் எழுதியது உண்மையில்லை என்றால் முதலில் தர்ஹாடிரஸ்டியை சந்தித்து பேசிய சகோதரர் ரிபாயி அவர்கள் நான் தர்ஹா டிரஸ்ட்டியிடம் கந்தூரியை ஆதரித்து பேசவில்லை எதிர்த்துதான் பேசினேன் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அறிக்கைவிடவேண்டும் அப்படி ஒரு அறிக்கை விடும் பட்சத்தில் அவர்கள் தர்ஹாவை ஆதரிக்கவில்லை என்பதை ஒத்துகொள்ளலாம்,

 அதுவரை நாங்கள் முதலில் எழுதியதும் நடக்க வாய்ப்பு உள்ளது முற்றிலுமாக அதை ஒதுக்கிவிட இயலாது என்றுதான் அர்த்தமாகும்.சந்தித்து பேசிய ரிபாயி அவர்கள்தான் இந்த அறிக்கையை விட வேண்டுமே தவிற இதில் சம்மந்தமில்லாத  ஜால்ராக்கல் அல்ல என்பதயும் தெளிவாக சொல்லிகொள்கிறோம்

தவ்ஹித்ஜமாத்தை பற்றி எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லாத [ ஜித்தா ஏர்போட்டில் பிஜெ கைது செய்யப்பட்டார் போன்று பல பொய்கள் ]  அவதூறுகளை பரப்பும் ஜால்ராக்களுக்கு போட்டோ ஆதரத்தோடு செய்தி வெளியிட்ட நம்மை கேள்வி கேட்ட எந்த அருகதையும் கிடையாது அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் நமக்கில்லை

இருந்தாலும் நடுநிலையாளர்களுக்காவும் எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருக்கும் நம் ஜமாத் இதிலும் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற நல்ல என்னத்தில்தான் இதை எழுதியுள்ளோம்.

 நாம் எதிர்பார்த்தபடி தமுமுக தலைவரும் தர்ஹாடிரஸ்ட்டியும் சந்தித்த செய்தியை உலம் முலுவதும் கொண்டு சென்ற ஜால்ராக்கலுக்கும் அதற்க்கு வழி வகுத்து கொடுத்த அல்லாஹ்வுக்கும் நன்றியை தெறிவித்து கொள்கிறோம்

Monday 12 August 2013

கலையிழந்தமுத்துப்பேட்டை கந்தூரி,மீண்டும் புத்துயிர் ஊட்ட முத்துப்பேட்டைக்கு நேரில் வந்து தர்ஹா டிரஸ்ட்டியோடு தமுமுக தலைவர் ஆலோசனை


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத்தின் இடைவிடாத பிரச்சாரத்தால் இந்த வருட கந்தூரி கலையிழந்து போனது, குத்தாட்டம் குறைந்து போனது

ஒரு காலத்தில் நாம் குத்தாட்டம் போடுவதுதான் விநாயகர் சதுர்த்திக்கு கொடுக்கும் பதிலடி என நினைத்து ஆட்டம் போட்ட அப்பாவி இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தவ்ஹிதின் பக்கம் வர ஆரம்பித்துவிட்டார்கள்.

  அப்பாவி இளைஞர்களை இதுதான் விநாயகர் ஊர்வலத்திற்க்கு பதிலடி என மூளை சலவை செய்து ஆட்டம் போடவைத்த தர்ஹாவாதிகள் தவ்ஹித்ஜமாத்தின் பிரச்சாரத்தால் ஆட்டம்கண்டு போய் உள்ளார்கள் என்றால் மிகையாகாது

ஏற்கனவே தவ்ஹிதை சொன்ன இயக்கம் ஆள் பற்றாக்குறையால் ஷிர்க்வாதிகளோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டு வந்தது குத்தாட்டத்தின் கூடாரம் கலகலத்து வருவதால் இப்போது புதிய புரானம் பாட ஆரம்பித்து உள்ளார்கள்

ஒருங்கினைந்த தமுமுகவாக இருக்கும் போது நாங்கள் தர்காவை எதிர்த்தோம் என காமெடி பன்ன ஆரம்பித்துள்ளார்கள் ஒருங்கினைந்த தமுமுகவிலும் தவ்ஹித்ஜமாத்காரன்தான் தர்காவை எதிர்த்தான் இப்போதும் அவன்தான் தர்காவை எதிர்க்கிரான் அமைப்பின் பெயர்தான் மாறியுள்ளது என்பது மக்களுக்கும் அரசாங்கத்திற்க்கும் நன்றாக தெரியும்

நாங்களும் தர்காவை எதிர்க்கிறோம் என சொல்லி கொண்டேஇன்று முத்துப்பேட்டையில்  தர்கா டிரஸ்டியை சந்தித்து  [செல்வாக்கு இழந்த தர்ஹாவுக்கு எப்படி கூட்டத்தை கொண்டுவரலாம் என]  தமுமுக மாநிலதலைவர் ரிபாயி ஆலோசனை நடத்துகிரார்

எத்தனை ஆலோசனை நடந்தாலும் எந்தனை முட்டுக்கட்டை போட்டாலும் ஷிர்க்கை எதிர்ப்பதில் தவ்ஹித்ஜமாத் தனது வீரியத்தை அதிகப்படுத்துமே அல்லாது ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இப்போதைக்கு சொல்லி கொள்கிறோம்

Sunday 11 August 2013

கிளை நிர்வாகிகள் வெளிநாட்டு பொருப்பாளர்கள் ஒருங்கினைந்த ஆலோசனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.08.2013 அன்று மஸ்ஜித் நூரில் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது

துபாய் ஷேக்காதி, கத்தார் இபுராகிம், சவுதி பரக்கத்தலி, மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் கிளை 1ல் தாவாவை அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் பெண்கள் மதரஷா ஆரம்பம் செய்வது சம்மந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது

கந்தூரி ஊர்வலம் இதுதான். இதற்க்கும் இஸ்லாத்திற்க்கும் என்ன சம்மந்தம் வீடியோவை பாருங்கள் நீங்களே முடிவுக்கு வாருங்கள்


Saturday 10 August 2013

அரவியப்பா தர்ஹா கந்தூரியும் தவ்ஹித்ஜமாத்தும் முத்துப்பேட்டையில் நடப்பது என்ன?


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் இந்த உலக வாழ்க்கையை விட மறு உலக வாழ்க்கைதான் முக்கியம் என செயல்படும் ஒரு அமைப்பு என்பது அனைவருக்கும் தெறியும்

எந்த ஒரு நியாயத்திற்க்கும் கட்டுபடாமல் இஸ்லாமியர்களை எதிர்ப்பதே நோக்கம் என ஒருவரோ ஒரு கட்சியோ செயல்படும்போது அதை எதிர்க்கும் போதுகூட இஸ்லாமிய சட்டத்திற்க்கு உட்பட்டு எதிற்க்க வேண்டும்         மனோஇச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாமிய சட்டத்தை புறந்தள்ளிவிடகூடாது

நோன்பு முடிந்த அடுத்த நாள் அரவியப்பா கந்தூரி என்ற பெயரில் நடக்கும் இனைவைப்பு காரியத்தை தவ்ஹித்ஜமாத் பல வருடமாக எதிர்த்து வருகிரது

இந்த வருடமும் இந்த இனையதளம் மூலமே பல விழிப்புனர்வு கட்டுரைகள் எழுதி எச்சரித்து வந்தோம் அதன் தொடர்ச்சியக பெருநாள் உரையிலும் அதன் தீமைகளை சுட்டிகாட்டி அதை தடுப்பது எல்லாரின் கடமை என்பதை குர் ஆன் ஹதீஸ் ஆதாரத்தோடு சொல்லி அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பிஜெபியின் அத்துமீரலால் விரும்பதகாத சம்பவங்கள் முத்துப்பேட்டையில் நடந்துள்ளது இதிலும் பாதிப்பு முஸ்லிம்களுக்குதான் ஏற்பட்டுள்ளது

இந்த நேரத்தில் கந்தூரி மூலம் நாமும் கூட்டத்தை கூட்டி அவன்களுக்கு பதிலடி கொடுக்கனும் தவ்ஹித் ஜமாத் கந்தூரி எடுப்பதை தடுக்ககூடாது என்று நடுநிலையாளர்கள் வெஷம் போடும் சிலர் கூறிவருகிறார்கள் கந்தூரியை எதிர்ப்பது இஸ்லாத்தை எதிர்ப்பது என்பது போல ஒரு மாயையை உருவாக்க முயற்ச்சி செய்கிறார்கள்

நாம் தெளிவாக சொல்கிறோம் கந்தூரி மூலம் கூட்டத்தை கூட்டி காட்டுகூச்சல் போடுவதோ அவன் முழங்கால் வரை வேட்டியை தூக்கிகொண்டு ஆடினால் நாம் தொடைவரை வேட்டியை தூக்கிகொண்டு ஆடுவதோ பதிலடியாகாது

அப்படியே அதுதான் பதிலடி என இருந்தாலும் இஸ்லாத்தை புறந்தள்ளிவிட்டு மனோ இச்சைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இந்த ஜமாத் ஒருகாலும் ஏற்றுக்கொள்ளாது

கந்தூரியை தடுத்து இனைவைப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் முயற்ச்சியில் தவ்ஹித்ஜமாத் இருதிவரை போராடும்

 அதன் தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்புனர்வு செய்யும்வன்னம்  போஸ்ட்டரும் அடித்து ஒட்டப்பட்டது.

இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இந்த மோசடியை தடுத்து நிறுத்த வழியுறுத்தி காவல் துரையில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது

 நரகத்தின் கொள்ளிகட்டையான அந்த அயோக்கியர்களை எதிர்க்கிரேன் என்று நாமும் அவன்களோடு கூட சேர்ந்து நரகத்திற்க்கு போய்விடகூடாது

கந்தூரி நடக்கும் பள்ளிவாசலில் வருடா வருடம் புகாரி சரீபு நடத்தும் தப்லீக் ஜமாத்தார்களே இந்த இனைவைப்பை எதிர்பதில் உங்கள் பங்கு என்ன? இதை எதிர்த்தால் அடுத்தவருடம் புகாரி சரீப் நடத்த இயலாதே என மௌனம் காக்குகிறீர்களா? அல்லது கந்தூரி இஸ்லாத்தில் உள்ளதுதான் என பத்வா கொடுக்கபோகிறீர்களா?

கந்தூரிக்கு பாத்தியா ஓதும் ஆலிம்களே மறுமையை அஞ்சி கொள்ளுங்கள். நடுநிலை என சொல்லிகொண்டு நாங்கள் எதிர்க்கவும் மாட்டோம் ஆதரிக்கவும் மாட்டோம் என்பவர்களே அந்த சனிக்கிழமை மீன் பிடித்த கூட்டதையும் அதை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்த கூட்டத்தையும் அல்லாஹ் ஒரே நிலையில் வைத்து தண்டனை கொடுத்ததை நினைத்து நரக நெருப்பில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் அல்லாஹ் போதுமானவன்.

கன்மூடிதனமான போலீஸ்தடியடி சிதறி ஓடும் மக்கள் ஒரு பரபரப்பான வீடியோ


Friday 9 August 2013

ஒரு லட்சத்து பத்தொன்பதாயிரத்து நானூற்றி இருபது ரூபய் மதிப்பிலான பொருள்கள் 386 குடும்பங்களுக்கு பித்ராவாக கொடுக்கப்பட்டது





தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக வசூல் செய்யப்பட்ட பித்ரா தொகை 1,09,420 ரூபாய் மற்றும் மாநில தலைமையில் இருந்து வந்த 10 ஆயிரம் ரூபாய் மொத்தம் 1,19,420 ரூபாய்க்கு 386 குடும்பங்களுக்கு பித்ரா வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தினத்தன்று தடியடி ,கைது, பரப்பான சூழலில் முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் பிஜெபி மாநில செயளாளரின் பிறந்த நாளை முன்னிட்டு மான்னார்குடி ரோட்டில் உள்ள ஒரு திருமன மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

அந்த நிகழ்ச்சிக்கு சென்ற பிஜெபிகாரர்கள் முஸ்லிம்கள் ஏரியாவில்  முஸ்லிம்களை வெறியேத்தும் விதமாக காட்டுகூச்சலும் கோசமும்போட்டு சென்றுள்ளார்கள் அதோடு பழைய பேருந்து நிலையத்திலும் புதிய பேருந்து நிலையத்திலும் அதிர் வேட்டுகளை வெடிக்கசெய்துள்ளார்கள்

இது நடந்த உடனேயே கவல்துரை தேவையில்லாமல் கூச்சல் போட்டவர்களை கைது செய்து உள்ளே தள்ளியிருந்தால் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து இருக்கும் இதை செய்யாமல் காவல்துறை வேடிக்கைபார்த்துள்ளது

பெருநாள் தினத்தன்று நம் ஏரியாவிலேயே கூச்சல் போடுவதா என ஆவேசப்பட்ட மற்றொரு பிரிவு இளைஞர்கள் இவர்களும் கோஷம் போட்டு கொண்டு போய் பேருந்து நிலையங்களில் வெடியும் வெடித்துள்ளனர்

அதோடு மன்னார்குடி ரோடு நோக்கி செல்ல முயன்றவர்களை போலீஸ் தடுத்துள்ளது இதோடு பிஜெபி யை சேர்ந்தவர்களும் இவர்களை நோக்கி வந்துள்ளனர் இருபிரிவினருக்கும் இடையே கல்வீச்சுகளும் நடந்துள்ளது

நிலமை கட்டுமீறி போவதை கண்ட காவல்துரை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளது மேலும் சில பேரை கைதும் செய்துள்ளார்கள் சந்தோஷமாக பெருநாளை கொண்டாட வேண்டிய இந்த நாளில் இது போன்ற பிரச்சனைகள் செய்து முஸ்லிம்களின் நிம்மதியை கெடுப்பது நியாயமா? ஒரு சாராரின் பண்டிகை நாளில் மற்றொறு சாரர் இவர்கள் வசிக்கும் பகுதியில் வந்து கோஷம் போடும்போது காவல்துரை ஏன் வேடிக்கை பார்த்தது ? என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்

நிலமையை தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் உன்னிப்பாக கன்கானித்து வருகிரது தவறு செய்தவர்கள் யாரா இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும் நமக்கு ஆட்சேபனை கிடையாது ஆனால் தவறு செய்தவர்களை விட்டு விட்டு அப்பாவிகள் மீது கைவைத்தால் தவ்ஹித்ஜமாத் களத்தில் இறங்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி கொள்கிறோம்

போலீஸ்தடியடி முத்துப்பேட்டையில் பரபரப்பு, பெருநாள் தினத்தன்று திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

பிஜெபி மாநில செயளாலரின் பிறந்த நாளை முன்னிட்டு ரோடு முழுவாதம் கூச்சல் கோசம் போட்டுகொண்டு ஒரு பிரிவினர் சென்றதாகவும் அதற்க்கு பதில் சொல்லும் விதமாக மற்றொருபிரிவினர்  கோசம் போட்டதாகவும் நிலமையை சரி செய்ய போலீஸ் தடியடி நடத்தியதாக தகவல் வருகிரது இன்ஸா அல்லாஹ் முழுவிபரம் விரைவில் வெளியிடப்படும்

தவ்ஹித்ஜமாத்தின் நபிவழி பெருநாள் தொழுகை, நிரம்பிவழிந்தது புத்தெரு தவ்ஹித்திடல்












தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நோன்புபெருநாள் தொழுகை 09.08.2013 காலை 7.30 மனியளவில் புதுதெரு தவ்ஹித் திடலில் நபிவழி படி நடை பெற்றது

ஏராளமான ஆன்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் தொழுகைக்கு பிறகு தாயி கோவை அல்தாப் உசேன் அவர்கள்  அல்லாஹ்வுக்கு அடிபனிவோம் என்றதலைப்பில் உறையாற்றினார்

பெருநாள் முடிந்த அடுத்தநாள் இனைவைப்பு காரியமான கந்தூரிக்கு செல்வதுதான் அல்லாஹ்வுக்கு அடிபனிவதா என கேள்வி கேட்டார்? கந்தூரிக்கு போய் கலந்து கொள்வதும் அந்த இனை வைப்பு கந்தூரியை தடுக்க்காமல் வேடிக்கை பார்ப்பதும் அல்லாஹ்வின் கோபத்திர்க்கு ஆளாகும் செயல் ரமலானில் நாம் செய்த நன்மையையல்லாம் அழிக்கும் செயல் என குர் ஆன் ஹதீஸ் ஆதரத்தோடு உரையாற்றினார்

இந்த பயான் பலபேருக்கு ஒரு படிப்பினையாகவும் பாடமாகவும் அமைந்து இருந்தது இதன் மூலம் அல்லாஹ்வின் உதவியால் பெரும்பாலானவர்கள் அந்த இனைவைப்பு காரியத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கனிப்பார்கள் என எதிர்பார்க்கலாம் அல்லாஹ் போதுமானவன்






Wednesday 7 August 2013

ரமழானின் கடைசி நாட்களை நோக்கி இரவு தொழுகை,சமையலை மேற்பார்வையிடும் துபாய்வாழ் முத்துப்பேட்டை நிர்வாகி

மஸ்ஜித்நூரில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிமாகிவருகிரது சமையல் உள்பட அனைத்து பனிகளையும் நிர்வாகிகளே நேரடியாக ஈடுபட்டு களப்பனியாற்றி வருகிறார்கள்





இஸ்லாத்தின் பெயரால் மோசடி ,மக்களை காப்பாற்றும் முயற்ச்ச்சியில் தவ்ஹித்ஜமாத்

முத்துப்பேட்டையில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் அனாச்சாரங்களுக்கும் இனைவைப்பு நிகழ்ச்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று அதற்க்கான முயற்ச்சிகளை சட்டரீதியாக செய்ய தவ்ஹித்ஜமாத் முடிவு செய்துள்ளது

  இறைவனின் கட்டளையை மீறி சனிக்கிழமை மீன் பிடித்த கூட்டத்தையும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த கூட்டத்தையும் அல்லாஹ் தண்டித்ததை போல இந்த இனைவைப்பு கந்தூரியை தவறு என்று சுட்டிகாட்டாமல் நமக்கேன்வம்பு என்று இருந்தால் இறைவனின் பார்வையில் கந்தூரி தூக்கியவனும் நாமும் ஒன்றுதான்

 எனவே இறைவனின் தண்டனையில் இருந்து யார் யார் தப்பித்து கொள்ள ஆசைபடுகிறார்களோ அவர்கள் கந்தூரியை அனுமதிக்ககூடது சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

Monday 5 August 2013

நோன்புமுடிந்த அடுத்த நாளே இனைவைப்பை நோக்கி போகும் அப்பாவி மக்களை அதிலிருந்து காப்பாற்றுவது சம்மந்தமாக முத்துப்பேட்டை ஒருங்கினைந்த இரு கிளைகளின் ஆலோசனை கூட்டம்


தவ்ஹித்பள்ளிவாசல்களில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் மக்கள் கூட்டம் ,அளவுக்கு அதிகமாக மக்கள் ஆர்வத்துடன் வருவதால் இடம் பற்றாக்குறையால் தினரும் மஸ்ஜித்நூர்

முத்துப்பேட்டையில் சுமார் 10 சுன்னத்ஜமாத் பள்ளிவாசல்கள் இருந்தும் மக்கள் கூட்டம் தவ்ஹித் பள்ளிவாசல்களை நோக்கி திரும்பியுள்ளது ஒரு நல்ல மாற்றமாக கானப்படுகிரது


முத்துப்பேட்டையில் நாம் முதலில் தவ்ஹித்பனிக்காக கட்டிய பள்ளிவாசலை ஜாக்கிடம் கொடுத்துவிட்டு ஒரு ஓலை கொட்டகையில் தவ்ஹிதை சொல்ல ஆரம்பிக்கப்பட பள்ளிவாசல் இப்போது இரண்டுகிளைகளாகி இரண்டு பள்ளிவாசல்களிலும் ஆன்கள் கூட்டமும் பெண்கள் கூட்டமும் அலைமோதிவருகிரது

இன்ஷா அல்லாஹ் தெற்க்கு தெருவில் கூடிய விரைவில் ஆரம்பிக்க ஆலோசித்துவரும் மூன்றாவது தவ்ஹித் பள்ளிவாசலும் வந்தால் கூட மக்களுக்கு இட வசதி செய்து கொடுப்பது சிரமாகதான் இருக்கும் என நினைக்கும் அளவுக்கு குர் ஆன் ஹதீஸ் பக்கம் மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள்

 பெயரில் மட்டும் குர் ஆன் ஹதீசை வைத்து கொண்டு சவுதிக்கு ஜால்ரா அடிப்பவர்களும் பத்தோடு பதினொன்றாக போனது நமக்கல்லாம் ஒரு பாடம். நாமும் நாளைக்கு குர் ஆன் ஹதீசை விட்டு விட்டு மனோ இச்சையை பின்பற்றினால் அதே கதிதான் நமக்கும் என கன்முன்னே அல்லாஹ் காட்டுகின்றான்.வழிதவறாமல் இருக்க அல்லாஹ்விடம் துவா செய்வோம்