Monday 31 December 2012

இன்று ஆதீனம் புறிந்துகொண்டது போல நாளை அனைவரும் புறிந்து கொள்வார்களா?



இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்.

இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.

இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்

Saturday 22 December 2012

புதிய கம்ப்பியூட்டர் வாங்குபவர்கள் கவனத்திற்க்கு






குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய கூடுதல் திறனுடன் கம்ப்யூட்டர் வாங்குவது இப்போது நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. ஏனென்றால், நம் அன்றாடத் தேவைகள் பலவற்றை கம்ப்யூட்டர் தான் முடிவு செய்கின்றன. எனவே நம் தேவைகளைப் பொறுத்து, இரண்டாவதாக, மூன்றாவதாக எனக் கம்ப்யூட்டர்களை வாங்கிக் கொண்டு போகிறோம்.

இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக கம்ப்யூட்டர் வாங்கிய பின் முந்தைய கம்ப்யூட்டரை என்ன செய்கிறோம்? நமக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. பழையனவற்றை தூக்கிப் போடுவதே இல்லை. இது பல விஷயங்களில் தேவையற்ற ஒன்று என்றாலும், கம்ப்யூட்டர் விஷயத்தில், முந்தைய பழைய கம்ப்யூட்டரைச் சில காலமேனும் வைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கியவுடன் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.

1. முதலில் பழைய கம்ப்யூட்டரில் பயன்படுத்திய புரோகிராம்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கவும். இவற்றில் எவை எல்லாம், புதிய கம்ப்யூட்டரில் உங்களுக்குத் தேவையாக இருக்கும் என்று அந்த பட்டியலில் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம்களை டிஸ்க் வடிவில் நீங்கள் வாங்கியிருந்தால், அந்த டிஸ்க்குகளை எடுத்து வைத்திடுங்கள். அவை இயக்கப்படும் வகையில் நல்ல நிலையில் உள்ளனவா என்று பார்க்கவும். டவுண்லோட் செய்திருந்தால், மீண்டும் அவை கிடைக்கும் தளங்களுக்கான முகவரிகளைச் சோதித்துக் குறித்து வைக்கவும். இந்த புரோகிராம்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டிருந்தால், அந்த எண்களையும் பாதுகாப்பாக எழுதி வைக்கவும்.

2. அடுத்து புதிய கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், ஒரு டயலாக் பாக்ஸ் அல்லது விஸார்ட் உங்களை வழி நடத்தும். முதலாவதாக அட்மினிஸ்ட் ரேட்டர் யூசர் அக்கவுண்ட் திறக்குமாறு கேட்டுக் கொள்ளும். ஏற்கனவே முந்தைய கம்ப்யூட்டரில் என்ன பெயர் பயன்படுத்தினீர்களோ, அதனையே பயன்படுத்தவும். கம்ப்யூட்டருக்கும் ஒரு பெயர் கொடுக்கச் சொல்லி கேட்கும். இங்கு புதிய பெயரைக் கொடுக்கவும். முந்தைய கம்ப்யூட்டருக்குக் கொடுத்த பெயரைத் தர வேண்டாம்.

3. அடுத்து உங்கள் புதிய கம்ப்யூட்டரில், அதனைத் தயாரித்தவர், அவர் மற்ற நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களையும், தன் நிறுவனத்தின் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களையும் பதிந்து வைத்து அனுப்பியிருப்பார். இவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தேவையற்றதாக இருக்கும். எனவே இவற்றை நீக்குங்கள். இவை எல்லாம் விற்பனைக்கான சில வழிகளே. இவற்றைக் காட்டிப் பின்னர், கட்டணம் செலுத்தி சில புரோகிராம்களை வாங்கச் சொல்வார்கள். இவற்றை எப்படி நீக்கலாம்? கண்ட்ரோல் பேனல் சென்று Add or Remove Programs மூலம் நீக்கலாம். முழுமையாக நீக்கப்படுவதனை உறுதி செய்திட, இந்த புரோகிராம்களை Revo Uninstaller அல்லது Total Uninstall புரோகிராம்கள் மூலம் நீக்கலாம்.

4. தேவையற்றது நீக்கப்பட்டவுடன், இனி, உங்களுக்குத் தேவைப்படும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களைப் பதியவும். இந்த புரோகிராம் களைப் பதிந்தவுடன், அந்த புரோகிராம் களைத் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று, அவற்றிற்கான அப்டேட் புரோகிராம்கள் தரப்பட்டிருந்தால், அவற்றையும் டவுண்லோட் செய்து இண்ஸ்டால் செய்திடவும். இது போன்ற அப்டேட் செய்யக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும், இணைய இணைப்பில் இருந்தவாறே கம்ப்யூட்டரில் அப்டேட் செய்யப்படக் கூடியவையாக இருக்கும். இந்த புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், அவை இயங்க கம்ப்யூட்டரை மீண்டும் இயக்க வேண்டும் என நினைவூட்டினால், சோம்பல் படாமல், மீண்டும் ஒரு முறை இயக்கவும். அப்போதுதான், அந்த புரோகிராம் முழுமையாக இயங்குகிறதா எனத் தெரிந்து கொள்ளலாம்.

5.கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்பட்ட சவுண்ட் கார்ட், வீடியோ கார்ட் ஆகியவற்றிற்கு,அவற்றிற்கான ட்ரைவர்களை நிறுவத் தேவை இருக்காது. ஆனால் நீங்களாக இணைக்கும் சாதனங்களுக்கு ட்ரைவர் புரோகிராம் களை இன்ஸ்டால் செய்திட வேண்டும். பிரிண்டர், வெப் கேமரா, ஸ்கேனர் போன்றவை இந்த பட்டியலில் அடங்கும். உங்களுடைய மொபைல் போன் களுக்கான அப்ளிகேஷன் களையும், புதிய கம்ப்யூட்டரில் பதிந்திட வேண்டியதிருக்கலாம்.

6. அனைத்து புரோகிராம்களும் பதிந்து முடிக்கப்பட்டவுடன், புதிய கம்ப்யூட்டரை உங்கள் இனிய தோழனாக (தோழியாக!) மாற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும், உங்களுக்குப் பிரியமான புரோகிராம்களை ஸ்டார்ட் மெனு அல்லது டாஸ்க் பாருக்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் அதிகம் நேசிக்கும் வால் பேப்பர், ஸ்கிரீன் சேவர் காட்சிகளை செட் செய்திடுங்கள். முந்தைய கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்தி வந்தால், அதே பெயர்களில், அவற்றை இங்கும் உருவாக்கவும்.

7. இப்போது உங்கள் புதிய கம்ப்யூட்டர் முழுமையாக இயங்க அனைத்து புரோகிராம்களையும் கொண்டு வந்துவிட்டீர்கள். சரி, அவற்றில் இயங்க டேட்டா வேண்டும் அல்லவா? இவற்றை முந்தைய கம்ப்யூட்டரிலிருந்து அப்படியே காப்பி செய்து கொண்டு வரலாம். அல்லது இருக்கின்ற நெட்வொர்க்கில் இரண்டு கம்ப்யூட்டரையும் இணைத்து, இணைத்த நிலையில் எளிதாக மாற்றலாம். அதற்கு முன், புரோகிராம்களுடன் தயாரான நிலையில், உங்கள் புதிய கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை ஒரு இமேஜ் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இதற்கு ஒரு எக்ஸ்டர்னல் டிஸ்க் ஒன்றைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதற்கான இமேஜ் பேக் அப் புரோகிரம் தரப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தலாம். அல்லது Macrium Reflect Free / EASEUS Todo Backup என்ற புரோகிராம்களில் ஒன்றைப் பயன் படுத்தலாம். இரண்டுமே இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தக் கூடிய புரோகிராம்களே.

இப்போது உங்கள் டேட்டா பைல்களை (டாகுமெண்ட், ஒர்க்புக், போட்டோ, படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள்) மாற்றுங்கள். புதிய கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள். புதிய கம்ப்யூட்டரில் புரோகிராம்கள் இயங்கத் தொடங்குகையில்தான், பிரச்னைகள் இன்னும் என்ன என்று தெரியவரும். அப்போது முந்தைய கம்ப்யூட்டருக்குச் சென்று அதற்கான பைல்களை மாற்றுங்கள்.

நீங்கள் எக்ஸ்பி பயன்படுத்தியவராக இருந்து, பின்னர் விண்டோஸ் 7க்கு மாறியவராக இருப்பின், சில புரோகிராம்கள், விண்டோஸ் 7 இயக்கத்தில் இயங்க முடியாதவையாக இருப்பதனைக் கவனிக்கலாம். அந்த புரோகிராம் தளங்களுக்குச் சென்று அவற்றின் தன்மை குறித்து அறியவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம் பதிப்புகள் இருப்பின், அவற்றைப் பதியவும். அல்லது விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி மோட் வகையில் அவற்றை இயக்கி டேட்டா பைல்களை மாற்றவும்.

நன்றி: தமிழ் கணினி

Monday 17 December 2012

மாநாடு போல நடந்த பெண்கள் பயான்






தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பெண்கள் பயான் அகாஷ்தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் 16.12.2012 மாலை 4.30 மனியளவில் நடைபெற்றது
வாராவாரம் வெள்ளிகிழமை பெண்கள் பயான் நடப்பதால் பள்ளிகூடத்தில் படிக்கும் பெண்கள் கலந்து கொள்ள இயலவில்லை அதனால் ஞாயிற்று கிழமைக்கு மாற்றுங்கலள் என்று பெண்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த வாரம் இன்று ஞாயிற்று கிழமை நடைபெற்ற பயான் நிகழ்ச்சிக்கு பெண்கள் மாநாடு போல திரண்டு வந்து கலந்து கொண்டார்கள் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
போனவாரம் நடைபெற்ற மாதந்திர தேர்வில் நல்ல மதிப்பென் எடுத்து வெற்றிபெற்ற பெண்களுக்கு தவ்ஹித்ஜமாத் சார்பாக பரிசுகளும் கொடுக்கப்பட்டது.பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதன் மூலம் பல மார்க்க சட்டங்களை அறிந்து கொண்டோம் என பெண்கள் கருத்து தெறிவித்தார்கள் அல்ஹம்துலில்லஹ்

விரைவில் முத்துப்பேட்டை தபால் நிலையத்தில் ரயிவே முன்பதிவுமையம் இயங்கும் தவ்ஹித்ஜமாத் கோரிக்கையை ஏற்று தனது கோட்டாவில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாக AKSவிஜயன் எம்பி தகவல்


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ரயில்வே முன்பதிவு மையத்தை மீண்டும் முத்துப்பேட்டைக்கு கொண்டுவர பல கட்ட முயற்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டது
தேவைபட்டால் போராட்டம் நடத்தவும் தயாராகி வந்த வேளையில் நம் தொகுதி எம்பியான ஏ கே எஸ் விஜயன் அவர்களுக்கு ஏற்கனவே எழுத்துமூலம் நகர திமுக வாயிலாக கோரிக்கை மனு கொடுத்து இருந்தாலும் எம்பி அவர்களை கடைசியாக நேரில் ஒரு தடவை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்துவது அப்படியும் நிறைவேற்றிதராவிட்டால் மாவட்ட மாநில ஆலோசனையோடு மிகப்பெறிய போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இன்று 17.12.2012 காலை நமது நிர்வாகிகள் எம்பி அவர்களை சந்தித்து ரிசர்வேசன் இல்லாததால் மக்கள் படும் இன்னல்களை எடுத்து சொல்லி ஏற்கனவே கடிதம் கொடுத்ததையும் யாபகப்படுத்தினார்கள்
அதற்க்கு பதில் அளித்த எம்பி அவர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே எனக்குள்ள கோட்டாவில் ஒதுக்கீடு செய்துவிட்டேன் கூடிய விரைவில் முத்துப்பேட்டை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் இயங்கும் என தெறிவித்தார்
இதற்க்கு நன்றி தெறிவித்து விட்டு மேலும் ஒரு கோரிக்கையாக முத்துபேட்டையில் இருந்து நேரடியாக திருவாரூருக்கு பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது உடனே நம் எதிரிலேயே சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் பேசிவிட்டு இதையும் கூடிய விரைவில் நிறைவேற்றிதருவதாக வாக்களித்தார்
எம்பி சொன்னபடி நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்
கடைசி செய்தி நாம் ரயில் வே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது எம்பி ஒதுக்கியது உண்மைதான் தபால் அதிகாரிகள்தான் இங்கு இடம் போதாது என தெறிவித்ததாக கூறினார் இதை தொடர்ந்து தபால் அதிகாரிகளை நேரில் சந்திக்க தவ்ஹித் ஜமாத் முயற்ச்சித்து வருகிரது

Sunday 16 December 2012

மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி



தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி முகாம் மஸ்ஜித் நூரில் 16.12.2012 ஞாயிறு அன்று காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்களும் கட்டினான அவர்களும் மானவ மானவியர்களுக்கு பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டுபயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Thursday 13 December 2012

முத்துப்பேட்டையில் பரபரப்பு


அநியாயமாக கொலை செய்யப்பட்ட கல்லூரி மானவனுக்கு நியாயம் கிடைக்கவும் லாரல் பள்ளிகூடத்தில் நடந்த தற்கொலைக்கல்லாம் கண்டன போஸ்டர் அடித்த எஸ்டிபிஐ இந்த கொலைக்கு எந்த கண்டன போஸ்டரும் ஒட்டாததிலிருந்தே கொலை செய்தவன் இவர்கள் அமைப்பை சேர்ந்தவந்தான் என்பது அனைவருக்கும் தெறிய வந்துள்ளது இதன் வெளிப்பாடுதான் இவர்களை தடை செய்ய சொல்லி அதிரையில் நடந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கனக்கில் மக்கள் குவிந்ததும் இந்த ஆர்பாட்ட அறிவிப்பை அதிரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவித்ததும் ஆகும் இதை கூட வழக்கமான பானியில் மறைத்து விடலாம் என திட்டம் போட்டு அவர்கள் தவ்ஹித் ஜமாத்திர்க்கு எதிராக நடத்திய ஆர்பாட்டத்தில் வெறும் 80 பேர் கலந்து கொண்டது அதிரை மக்களை ஏமாற்ற இயலாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. இவர்களை அனைவருக்கும் அடையாளம் காட்டும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்ட்டர்தான் இந்த போஸ்டர் இதானால் முத்துப்பேட்டையே பரப்பானது

Sunday 9 December 2012

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்களுக்கு நல்லொழுக்க பயிற்ச்சி



தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 9.11.2012 அன்று மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி முகாம் நடைபெற்றது மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்களும் கட்டிநாநா அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயனடந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Thursday 6 December 2012

இரண்டு குதிரையில் ஒரே நேரத்தில் சவாரி,ஓட்டுக்காக வேசம் கட்டும் வேடதாரிகள்



ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் சவாரி ,தர்மபுரி சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் நடத்திய கூட்டத்தில் பொது செயளாளரும் அதற்க்கு நேர் எதிராக ராமதாஸ் நடத்திய கூட்டத்தில் துனை தலைவரும் கலந்து கொண்டு தமுமுகவும்,எஸ்டிபிஐ யும் கின்னஸ் சாதனை படைத்துள்ளாகள், இந்த சாதனையை ஏற்கனவே முஸ்லிம் சமுதாயத்திடம் செய்துகாட்டியுள்ளார்கள் தர்ஹாவாதியிடமும்,ஏகத்துவவாதியிடமும் ஒரே நேரத்தில் நாங்கள் உங்கள் பக்கம்தான் என ஓட்டுக்காக கொள்கையை விட்டு வேசம் போட்டதை பார்த்து இப்படியுமா என முஸ்லிம்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள் ஆனால் இப்போது உலகமே இப்படியுமா அரசியல் பன்னுவார்கள் அதுவும் இஸ்லாத்தின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் இப்படியா என அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கிபோய் உள்ளார்கள். இவர்கள் இவர்களுக்கு கிடைக்கும் இரண்டு சீட் கோட்டாவை கூட அதிமுகவில் ஒரு சீட் , திமுகவில் ஒரு சீட் என ஒரே நேரத்தில் வாங்கி அரசியலுக்கே புது வழி காட்டினாலும் காட்டுவார்கள். இப்படி இவர்கள் செய்து கொண்டு நாங்கள் இஸ்லாமிய கட்சி என்று வேறு சொல்வது ஒன்றும் அறியாத பிற மத அப்பாவி மக்களிடம் இஸ்லாத்தை பற்ரியே ஒரு தவறானா புறிதலை ஏற்படுத்திவிடும் அல்லாஹ்வை பயந்து கொள்வார்களா?

Monday 3 December 2012

அநியாயத்திர்க்கு ஆதரவாக அனைத்து முஹல்லா கூட்டம்


நியாய உனர்வுள்ளவர்கள் ஒரு சம்பவம் சம்மந்தமாக விசாரிப்பது என்றால் இரு தரப்பையும் அழைத்து விசாரித்து யார் தவறு செய்தார்களோ அவர்களை பாரபட்சம் இன்றி தண்டிக்க வேண்டும்
அதற்க்கு இயலாவிட்டால் வாய்மூடி மௌனமாக இருக்க வேண்டும் அதைவிட்டு விட்டு தவறு செய்தவனோடு சேர்ந்து கொண்டு தவ்ஹித் ஜமாத்தான் பிரச்சனை செய்தது என கூறுவது அடி முட்டாள்தனம்
முதலில் போட்டோ எடுத்ததுதான் பிரச்சனை என ஒரு செய்தியை பரப்பினர்கள் ,மையத்தை அடக்கி கொண்டு மையவாடியில் இருக்கும் போது வெளிப்பக்கமாக கேட்டை பூட்டினார்கள் இதை அங்குள்ள சகோதரர்கள் போட்டோ எடுத்தார்கள். போட்டோ எடுத்தது தவறா? வெளிப்பக்கம் பூட்டியது தவறா?
போட்டோ எடுத்ததுதான் பிரச்சனை என்றால் அனைத்து முஹல்லாவையும் கேட்கிறோம் இனிமேல் போட்டோ எடுக்காமல் நபிவழி படி அடக்கம் செய்ய நாங்கள் ஆட்சேபம் தெறிவிக்க மாட்டோம் என எழுதிதர தயாரா?
அடுத்து அனுமதி இல்லாமல் அடக்கம் செய்ததுதான் பிரச்சனை என்றார்கள் காலையில் இருந்து குழி வெட்டப்படுகிரது அடக்கத்திற்க்கு தேவையான சாமான்கள் கொண்டு செல்லப்படுகிரது இதையல்லாம் தடுக்காதது ஏன்?
அனுமதி வாங்காததுதான் பிரச்சனை என்றால் அனைத்து முஹல்லாவையும் கேட்கிறொம் இனிமேல் முறையாக அனுமதிவாங்கி கொண்டு அவர் அவர்கள் வீட்டு ஜனாசாவை அவர்கள் விருப்பப்படி நபிவழியில் அடக்கம் செய்யலாம் என எழுதிதர தயாரா?
முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல் மையவாடியிலும் நபிவழிபடி அடக்க அனுமதி இருக்கும்போது அரபுசாஹிப் பள்ளி மட்டும் ஏன் மறுக்குகிறீர்கள் என கேட்டால் அது நியாயம்
ஜனாசாவை அடக்கம் செய்ய வருபவர்களுக்கு பிரச்சனை செய்யனும் என்பது ஆசையா?அதுவும் ஜனாசாவை அடக்கிவிட்டு திரும்பி போகும்போது ஏன் பிரச்சனை செய்யவேண்டும்? நியாயமானவர்களே சிந்தித்து பாருங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்
தவ்ஹித் ஜமாத் பாதிக்கப்பட்டதால்தான் அவர்கள் அன்றே பிரச்சனை செய்தவர்கள் மீது காவல்துரையில் புகார் கொடுத்தார்கள்.நாம் பிரச்சனை செய்து இருந்தால் இவர்கள் ஏன் அன்றே புகார் கொடுக்கவில்லை? இன்று நாம் கொடுத்த புகார் அடிப்படையில் காவல்துரை சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய சென்றதும் அனைத்து முஹல்லா அது இது என்று புழம்புகிறார்கள் கடைசியாக நம் மீது பொய் புகார் கொடுக்க ஏழு நாள் கழித்து இன்று முயற்ச்சி செய்வதாகவும் செய்திவருகிரது
சூழ்ச்சி செய்பவர்களுக்கல்லம் சூழ்ச்சிகாரன் அல்லாஹ் .சத்தியத்திர்க்கு எதிராக எத்தனை முஹல்லா ஒன்று சேர்ந்தாலும் தவ்ஹித்ஜமாத் அதை எதிர்கொள்ளும் அனைத்து மக்களும் நேர்வழி பெறவேண்டும் என்பதுதான் நம் நோக்கம்.எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நபிவழியை விட்டு சிறிதும் மாறமாட்டோம் கியாமத்து நாள்வரை தீமைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

Saturday 1 December 2012

முத்துப்பேட்டை பள்ளிகூடத்தில் என்னதான் நடக்கிரது



கடந்த 29ம்தேதி 30ம்தேதி இரண்டு நாட்களாக முத்துப்பேட்டை ஆன்கள் அரசு பள்ளிகூடத்தில் இரு தரப்பு மானவர்களிடையே மோதல் அடி தடி சைக்கிள்கள் அடித்து நொருக்கப்பட்டது இரு தரப்பிலும் சுமார் 16 நபர்கள் மீது காவல்துரை வழக்கு பதிவு செய்துள்ளது
முத்துப்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் என்னதான் நடக்கிரது ? ஏன் படிக்கும் பருவத்தில் மதவெறி மானவர்கள் உள்ளத்தில் புகுந்தது என நாம் விரிவாக விசாரித்து ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் தெரியவருகிரது
  இதற்க்கு முதல் காரனம் மானவர்களின் பெற்ரோர்களே ஆவார்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் அடிக்கடி பள்ளிக்கு சென்று அவன் என்ன செய்கிரான் படிக்கிரானா/ ரவுடித்தனம் செய்கிரானா என ஆசிரியர்களிடம் கேட்போம் அவனை கண்டிப்போம் என பிள்ளைகள் விசயத்தில் கவனம் செலுத்தாததே இந்த அளவுக்கு முற்றிப்போக காரனம்
    அடுத்ததாக மானவர்களை வைத்து அரசியல்  நடத்தும்  இருதரப்பிலும் உள்ள அமைப்புகள்  எவன் தப்பு செய்தாலும் அதை கண்டிக்காமல் நான் இருக்கிரேன் நீ துனிந்து செய் என அவனை பிரைன் வாஷ் செய்து அவனை வைத்து தன்னை வளர்த்து கொள்ளும் அமைப்புகள் இது எந்த அளவுக்கு போய் விட்டது என்றால் ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்து வா என்று சொன்னால் அமைப்பை சேர்ந்தவர்களை அழைத்து போய் என் அன்னன் என் மச்சான் என் அத்தான் என சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது
    மூன்றாவதாக அரசாங்கம் வகுத்த கல்வி கொள்கை படித்தாலும் படிக்காவிட்டாலும் பாஸ் என ஓட்டுக்காக ஒரு திட்டத்தை போட்டு ஆடு மாடு மேய்க்க லாயக்கில்லாதவன் எல்லாம் ஏ பி சி டி கூட தெறியாமலேயே பத்தாவது படிக்கவந்து விட்டான் இங்கு வந்து படிக்கும் மானவர்களுக்கும் இடையூரு செய்து கொண்டு ரவுடித்தனம் செய்து திரிகிரான்
   அரசாங்கமும் தன் கொள்கையை மாற்ற போவது கிடையாது அமைப்புகளும் அவர்கள் பன்னும் அரசியலை விட போவது கிடையாது இரண்டு பேருக்கும் இதில் லாபம் உள்ளது ஆனால் பெற்றோர்கள் தன் பிள்ளை ரவுடியாக மாறுவதை தடுக்கலாமே? தன் பிள்ளையின் நலனில் இனியாவது கவனம் செலுத்துவார்களா/

Thursday 29 November 2012

முத்துப்பேட்டையில் நபிவழிபடி ஜனாஸா அடக்கம் செய்துவிட்டு திருப்பியவர்கள் மீது சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயற்ச்சி


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 தலைவர் அவர்களின் மகன் வழி பேரக்குழந்தை நேற்று இரவு மௌத்தாகிவிட்டது [இன்னாலில்லாஹி]அதை நபிவழிபடி அடக்கம் செய்ய அவர்கள் குடும்பத்தார் ஆயத்த பனிகளை மேற்கொண்டு இருந்த பொது அவர்கள் முஹல்லா நிர்வாகத்திடம்[அரபு சாஹிப் பள்ளி] இருந்து எங்கள் பள்ளி இமாம்தான் தொழுகை நடத்துவார் மையத்துக்கு உடையவர்கள் தொழுகை நடத்த அனுமதியில்லை என தகவல் வந்தது
முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வாரிசுகள் தொழுகை நடத்த அனுமதி இருந்தும் இவர்கள் மட்டும் மறுப்பது என்ன நியாயம்? நாம் நம் உரிமையை நிலை நாட்டுவோம் என நினைத்தாலும் நம்வீட்டிலேயே தொழுகை நடத்த மார்க்கத்தில் அனுமதி இருப்பதாலும் கப்ரு கட்டிவைத்துள்ள பள்ளிவாசலை விட வீடே சிறந்தது என்பதாலும் அவர்கள் வீட்டின் முன்பே சம்மந்தப்பட்ட பாட்டனார் தொழுகை நடத்தி சிறப்பாக முடிந்தது
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கப்ரு பிரியர்கள் உடனே புதிதாக ஒரு செய்தியை அனுப்பினார்கள் அதாவது எங்கள் பள்ளியில் தொழுகை நடந்த ஜனாசாவை மட்டும்தான் அடக்கவிடுவோம் உங்களுக்கு அனுமதி கிடையாது என்றனர்
இது உரிமை பிரச்சனை பள்ளிவாசல்களில் நமக்கு உரிமை இருந்தாலும் அங்கே சிர்க் இனைவைப்பு நடப்பதால் நாம் தனியாக பள்ளியை உறுவாக்கி நபிவழிபடி தொழுகிறோம் ஆனால் கப்ருஸ்தானில் நமக்கு உள்ள உரிமையை விட கூடாது என்பதால் முறையாக இதை எதிர் கொள்வது என முடிவு செய்து காவல்துரை அதிகாரிகளுக்கு தகவல் தெறிவித்து விட்டு முன்னால் மாவட்ட செயளாளர் அன்சாரியை அமீராக நியமித்து அவர் தலைன்மையில் ஜனாசாவை கொண்டு சென்றோம்
சம்பந்தப்பட்ட அரபுசாகிப் பள்ளிவாசலுக்கு நாம் சென்று எந்த தடையும் இன்றி நல்லபடியாக ஜனாசாவை அடக்கம் செய்தோம் கடைசியாக மன்னை தள்ளி குழியை சன்செய்து கொண்டு இருக்கும்போது சுமார் 50 பேர் கொண்டகும்பல் வந்து கேட்டை பூட்டு போட்டு விட்டு இவன்களை விடாதீர்கள் என காட்டு கூச்சல் போட்டனர் இது மட்டுமல்லாமல் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல பயன்படுத்தும் ஒலி பெருக்கியை பயன்படுத்தி இவன்களை தாக்க பொது மக்களே திரண்டு வாருங்கள் என கலவரத்தை தூண்டும் அறிவிப்பும் செய்யப்பட்டது பூட்டிய கேட்டை போட்டோ எடுத்ததும் உடனே பூட்டு திறக்கப்பட்டது
நாம் ஜனாசாவை அடக்கி முடித்துவிட்டு அங்கேயே ஒரு மசூரா செய்து யார் என்ன பேசினாலும் பதில் அமீர் மட்டும் கொடுப்பார் அனைவரும் பொருமையை கையாளுங்கள் என ஆலோசனை செய்து கப்ருஸ்தானைவிட்டு வெளியேறினோம்
வாய்கூசும் வகையில் கெட்ட வர்த்தைகளால் நம்மை திட்டியும்அதை அல்லாஹ்வுக்காக பொருத்து கொண்டு நாம் பொருமையாக வெளியே வந்தோம் அதே நேரம்
கடைசியாக வந்த கிளை 2 தலைவரை சட்டையை பிடித்து இழுத்தவனையும் மேலும் நம்மை தாக்க செங்களோடு வந்தவனையும் நம் சகோதரர்கள் பிடித்து திருப்பி அனுப்பினார்கள்
இதை தொடர்ந்து இதில் கலவரம் செய்ய என்றே ரவுடித்தனம் செய்தவர்கள் மீது காவல்துரையில் புகார் கொடுத்துள்ளோம் காவல்துரை சரியான நடவடிக்கை எடுத்து ஊரில் அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்

முத்துப்பேட்டை கடை வியாபரிகளுக்கு இலவச புக் வினியோகம்




தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக மாற்று மதத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் இலவசமாக வழங்கப்பட்டது

Monday 26 November 2012

பள்ளிகூட ஆசிரியருக்கு தமிழ் குர்ஆன் கொடுத்து தாவா


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.11.2012 அன்று அரசு மேல்நிலை பள்ளிகூட ஆசிரியர் அன்பரசு அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி தாவா செய்துவிட்டு அவர் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லி அவருக்கு பிஜெ மொழிபெயர்த்த திருக்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது

அரசு பள்ளி ஆசியர், ஆசிரியைகளிடம் தவ்ஹித்ஜமாத் சார்பாக மாமனிதர் புக் இலவசமாக வழங்கப்பட்டது









தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாகா 26,11.2012 அன்று அரசு மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியைகள் , ஜாம்புவானோடை பள்ளி தலைமை ஆசிரியர் லூர்துநாதன், ஆசாத்நகர் பள்ளி தலைமை ஆசிரியர் அசோகன்,உள்ளிட்ட 30 மாற்றுமத நன்பர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் இலவசமாக வழங்கப்பட்டது

முத்துப்பேட்டை அர் ரஹ்மத் பெண்கள் மதரசா முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி





தவ்ஹித் ஜமாத்தின் பெண்கள் மதரசா அர் ரஹ்மத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி 25.11.2012 அன்று கொய்யா மஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது அதில் மாநில துனை தலைவர் எம் ஐ சுலைமான் அவர்கள் சிறப்புரையாற்றி மானவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கினார்கள் சுமார் 1000 பென்கள் உள்பட ஏராளமானோர்கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை 2 சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் முஹர்ரம் பிறை 10 நோன்புதிறக்கும் இப்தார் நிகழ்ச்சி




தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.11.2012 ஞாயிறு அன்று முஹர்ரம் பிறை 10 நோன்புதிறக்க மஸ்ஜித் நூரில் இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

முத்துப்பேட்டையில் தவ்ஹித்ஜமாத் நடத்திய தர்பியா


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக தர்பியா 25.11.2012 காலை 10.30 மனியளவில் நடைபெற்றது அதில் மாநில துனைதலைவர் எம் ஐ சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Saturday 24 November 2012

முத்துப்பேட்டையின் அவல நிலை



பன்றியின் புகழிடமாக மாறிவரும் முத்துப்பேட்டை வரி விதிப்பில் மட்டும் ஏ கிரேடு சுகாதாரத்தில் கடைசி கிரேடா? பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மஸ்ஜித்நூரில் முஹர்ரம் நோன்பு இப்தார் நிகழ்ச்சி




தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித் நூரில் முஹர்ரம் பிறை 9 நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

Friday 23 November 2012

அகாஷ்தோட்டவளாகத்தில் பெண்கள் பயான்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகஷ்தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில்23.11.2012 வெள்ளிகிழமை மாலை பெண்கள் பயான் நடைபெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் மறுமை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதோடு பென்களுக்கான மாதாந்திர பரிச்சை நடைபெறும் நாள் இடம் அடுத்தவாரம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டது பெண்கள் அனைவரும் ஆர்வத்தோடு நோட்டு பேனாவோடு வந்து பரிச்சைக்கு குறிப்பெடுத்து சென்றனர் இந்த வரம் சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்