Thursday 29 November 2012

முத்துப்பேட்டையில் நபிவழிபடி ஜனாஸா அடக்கம் செய்துவிட்டு திருப்பியவர்கள் மீது சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயற்ச்சி


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 தலைவர் அவர்களின் மகன் வழி பேரக்குழந்தை நேற்று இரவு மௌத்தாகிவிட்டது [இன்னாலில்லாஹி]அதை நபிவழிபடி அடக்கம் செய்ய அவர்கள் குடும்பத்தார் ஆயத்த பனிகளை மேற்கொண்டு இருந்த பொது அவர்கள் முஹல்லா நிர்வாகத்திடம்[அரபு சாஹிப் பள்ளி] இருந்து எங்கள் பள்ளி இமாம்தான் தொழுகை நடத்துவார் மையத்துக்கு உடையவர்கள் தொழுகை நடத்த அனுமதியில்லை என தகவல் வந்தது
முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வாரிசுகள் தொழுகை நடத்த அனுமதி இருந்தும் இவர்கள் மட்டும் மறுப்பது என்ன நியாயம்? நாம் நம் உரிமையை நிலை நாட்டுவோம் என நினைத்தாலும் நம்வீட்டிலேயே தொழுகை நடத்த மார்க்கத்தில் அனுமதி இருப்பதாலும் கப்ரு கட்டிவைத்துள்ள பள்ளிவாசலை விட வீடே சிறந்தது என்பதாலும் அவர்கள் வீட்டின் முன்பே சம்மந்தப்பட்ட பாட்டனார் தொழுகை நடத்தி சிறப்பாக முடிந்தது
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கப்ரு பிரியர்கள் உடனே புதிதாக ஒரு செய்தியை அனுப்பினார்கள் அதாவது எங்கள் பள்ளியில் தொழுகை நடந்த ஜனாசாவை மட்டும்தான் அடக்கவிடுவோம் உங்களுக்கு அனுமதி கிடையாது என்றனர்
இது உரிமை பிரச்சனை பள்ளிவாசல்களில் நமக்கு உரிமை இருந்தாலும் அங்கே சிர்க் இனைவைப்பு நடப்பதால் நாம் தனியாக பள்ளியை உறுவாக்கி நபிவழிபடி தொழுகிறோம் ஆனால் கப்ருஸ்தானில் நமக்கு உள்ள உரிமையை விட கூடாது என்பதால் முறையாக இதை எதிர் கொள்வது என முடிவு செய்து காவல்துரை அதிகாரிகளுக்கு தகவல் தெறிவித்து விட்டு முன்னால் மாவட்ட செயளாளர் அன்சாரியை அமீராக நியமித்து அவர் தலைன்மையில் ஜனாசாவை கொண்டு சென்றோம்
சம்பந்தப்பட்ட அரபுசாகிப் பள்ளிவாசலுக்கு நாம் சென்று எந்த தடையும் இன்றி நல்லபடியாக ஜனாசாவை அடக்கம் செய்தோம் கடைசியாக மன்னை தள்ளி குழியை சன்செய்து கொண்டு இருக்கும்போது சுமார் 50 பேர் கொண்டகும்பல் வந்து கேட்டை பூட்டு போட்டு விட்டு இவன்களை விடாதீர்கள் என காட்டு கூச்சல் போட்டனர் இது மட்டுமல்லாமல் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல பயன்படுத்தும் ஒலி பெருக்கியை பயன்படுத்தி இவன்களை தாக்க பொது மக்களே திரண்டு வாருங்கள் என கலவரத்தை தூண்டும் அறிவிப்பும் செய்யப்பட்டது பூட்டிய கேட்டை போட்டோ எடுத்ததும் உடனே பூட்டு திறக்கப்பட்டது
நாம் ஜனாசாவை அடக்கி முடித்துவிட்டு அங்கேயே ஒரு மசூரா செய்து யார் என்ன பேசினாலும் பதில் அமீர் மட்டும் கொடுப்பார் அனைவரும் பொருமையை கையாளுங்கள் என ஆலோசனை செய்து கப்ருஸ்தானைவிட்டு வெளியேறினோம்
வாய்கூசும் வகையில் கெட்ட வர்த்தைகளால் நம்மை திட்டியும்அதை அல்லாஹ்வுக்காக பொருத்து கொண்டு நாம் பொருமையாக வெளியே வந்தோம் அதே நேரம்
கடைசியாக வந்த கிளை 2 தலைவரை சட்டையை பிடித்து இழுத்தவனையும் மேலும் நம்மை தாக்க செங்களோடு வந்தவனையும் நம் சகோதரர்கள் பிடித்து திருப்பி அனுப்பினார்கள்
இதை தொடர்ந்து இதில் கலவரம் செய்ய என்றே ரவுடித்தனம் செய்தவர்கள் மீது காவல்துரையில் புகார் கொடுத்துள்ளோம் காவல்துரை சரியான நடவடிக்கை எடுத்து ஊரில் அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்

முத்துப்பேட்டை கடை வியாபரிகளுக்கு இலவச புக் வினியோகம்




தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக மாற்று மதத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் இலவசமாக வழங்கப்பட்டது

Monday 26 November 2012

பள்ளிகூட ஆசிரியருக்கு தமிழ் குர்ஆன் கொடுத்து தாவா


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.11.2012 அன்று அரசு மேல்நிலை பள்ளிகூட ஆசிரியர் அன்பரசு அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி தாவா செய்துவிட்டு அவர் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லி அவருக்கு பிஜெ மொழிபெயர்த்த திருக்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது

அரசு பள்ளி ஆசியர், ஆசிரியைகளிடம் தவ்ஹித்ஜமாத் சார்பாக மாமனிதர் புக் இலவசமாக வழங்கப்பட்டது









தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாகா 26,11.2012 அன்று அரசு மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியைகள் , ஜாம்புவானோடை பள்ளி தலைமை ஆசிரியர் லூர்துநாதன், ஆசாத்நகர் பள்ளி தலைமை ஆசிரியர் அசோகன்,உள்ளிட்ட 30 மாற்றுமத நன்பர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் இலவசமாக வழங்கப்பட்டது

முத்துப்பேட்டை அர் ரஹ்மத் பெண்கள் மதரசா முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி





தவ்ஹித் ஜமாத்தின் பெண்கள் மதரசா அர் ரஹ்மத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி 25.11.2012 அன்று கொய்யா மஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது அதில் மாநில துனை தலைவர் எம் ஐ சுலைமான் அவர்கள் சிறப்புரையாற்றி மானவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கினார்கள் சுமார் 1000 பென்கள் உள்பட ஏராளமானோர்கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை 2 சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் முஹர்ரம் பிறை 10 நோன்புதிறக்கும் இப்தார் நிகழ்ச்சி




தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.11.2012 ஞாயிறு அன்று முஹர்ரம் பிறை 10 நோன்புதிறக்க மஸ்ஜித் நூரில் இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

முத்துப்பேட்டையில் தவ்ஹித்ஜமாத் நடத்திய தர்பியா


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக தர்பியா 25.11.2012 காலை 10.30 மனியளவில் நடைபெற்றது அதில் மாநில துனைதலைவர் எம் ஐ சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Saturday 24 November 2012

முத்துப்பேட்டையின் அவல நிலை



பன்றியின் புகழிடமாக மாறிவரும் முத்துப்பேட்டை வரி விதிப்பில் மட்டும் ஏ கிரேடு சுகாதாரத்தில் கடைசி கிரேடா? பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மஸ்ஜித்நூரில் முஹர்ரம் நோன்பு இப்தார் நிகழ்ச்சி




தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித் நூரில் முஹர்ரம் பிறை 9 நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

Friday 23 November 2012

அகாஷ்தோட்டவளாகத்தில் பெண்கள் பயான்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகஷ்தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில்23.11.2012 வெள்ளிகிழமை மாலை பெண்கள் பயான் நடைபெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் மறுமை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதோடு பென்களுக்கான மாதாந்திர பரிச்சை நடைபெறும் நாள் இடம் அடுத்தவாரம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டது பெண்கள் அனைவரும் ஆர்வத்தோடு நோட்டு பேனாவோடு வந்து பரிச்சைக்கு குறிப்பெடுத்து சென்றனர் இந்த வரம் சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

தவ்ஹித் ஜமாத் சார்பாக முத்துப்பேட்டை முழுவதும் மாமனிதர்நபிகள்நாயகம் புக் இலவச வினியோகம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாகா மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் 100 வாங்கி முத்துப்பேட்டை முழுவதும் பிற மதசகோதரர்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டு இன்று 23.11.2012 அன்று 13 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ஆர்வமுடன் பெற்றுகொண்ட சகோதரர்கள் புக்கிர்க்கு பனம்தர முன்வந்தனர் இது இலவசம் என்றதும் மிக மகிழ்ச்சியடைந்தனர்

                                           

காவேரி கம்பியூட்டர் நிறுவன உரிமையாளர்
பத்திரிக்கை நிருபர் மானிக்கம்
லஷ்மிவிலாஸ் பேங்க் மேனேஜர்
டாக்டர் இளங்கோ

தாமரை இரத்தபரிசோதனை நிலைய உரிமையாளர்

ஐசிஐசிஐ பேங்க் மேனேஜர்

ஐசிஐசிஐ பேங்க் கேஷியர்

அதிமுக பிரமுகர் வி.என்.சன்முகம்

பேரூராட்சி தலைவர் அருனாசலம்

காவல்துரை பெண் அதிகாரி

உளவுத்துரை அதிகாரி

கோயில் குருக்கல்
பேரூராட்சி பெண் அதிகாரி

முஹர்ரம் நோன்பு திறக்க மஸ்ஜித்நூரில் விரிவான ஏற்பாடு

இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை இரண்டு நாட்களும் [முஹர்ரம் பிறை ஒன்பது, பத்து,] சுன்னத்தான நோன்பு பிடிக்கும் நாட்களாகும் .
இந்த சுன்னத்தான நோன்பு பிடித்தவர்கள் நோன்பு திறக்க  மஸ்ஜித்நூரில் தவ்ஹித்ஜமாத்  விரிவான ஏற்பாடு செய்துள்ளது.நோன்பாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு முத்துப்பேட்டை கிளை 1 சர்பாகா கேட்டுகொள்கிறார்கள்

கசாப்பை தூக்கில் போட்டவிதம் சரியா?இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை இந்தியா வேடிக்கை பார்க்கலாமா?துப்பாக்கி படம் நாம் செய்யவேண்டியது என்ன?



மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள், கசாப் தூக்கு, துப்பாக்கி படம், இஸ்ரேல் தாக்குதல் குறித்து அளித்த பேட்டி வீடியோ
http://video.onlinepj.com/watch_video.php?v=43O7SD3K4WXD
http://video.onlinepj.com/watch_video.php?v=XYYX132OOY9A
http://video.onlinepj.com/watch_video.php?v=WAK3W3S8467W
http://video.onlinepj.com/watch_video.php?v=NX3G59MW

தவ்ஹித்ஜமாத்தின் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது ஆளும்வர்கம் நிம்மதி

எகிப்தின் முயற்ச்சியால்இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர்நிறுத்தம் கையெழுத்தானது இதனால் நாளை சனிக்கிழமை நடைபெருவதாக இருந்த கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் ரத்துசெய்யப்பட்டது

முத்துப்பேட்டை முழுவதும் பரபரப்பாக யார் இவர் நோட்டீஸ் வினியோகம்ஆர்வத்துடன் மக்கள் பெற்று சென்றனர்










தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாகா 22.11.2012 அன்று வியாழக்கிழமை  நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பற்றி பிற மதத்தவர்கள் அறிந்து கொள்வதற்க்காக யார் இவர் என்று தலைப்பிடப்ப்பட்ட பிரசுரம் முத்துப்பேட்டையில் பல ஊர் மக்கள் கூடும் சந்தையிலும் இன்னும் அரசு அலுவலகம் கடைவீதி போன்ற அனைத்து இடங்களிளும் சுமார் ஆயிரம் நபர்களுக்கு வினியோகிக்கப்பட்டது நோட்டீசை பெற்றுக்கொண்ட மக்கள் ஆவலோடு அதை படித்தார்கள் ஒரு சிலர் யர்தான் அது என நம்மிடமே கேட்டார்கள் முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத்தின் இந்த முயற்ச்சி பிற மத மக்களிடம் நல்லதாக்கத்தை ஏற்படுத்தியது அல்ஹம்துலில்லாஹ்