Tuesday 30 October 2012

மழைகாற்றையும் பொருட்படுத்தாமல் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திரண்டு வந்த பெண்கள் கூட்டம்











தவ்ஹித் ஜமாத் சார்பாக முதல் முறையாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது எதை செய்தாலும் அது இந்த உலகத்திலும் மறுமையிலும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் பெருநாள் சந்திப்பு அன்று இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்க சந்தேகங்களை தெளிவு படுத்தும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது கேள்விகளுக்கு மாநில செயளாளர் அஷ்ரப்தீன் பிதவ்சி அவர்கள் பதிலளித்தார்கள்
வாராவாரம் பென்களுக்கு நடைபெறும் பயானில் இருந்து கேள்விகள் கேட்டு வைக்கப்பட்ட பரிச்சையில் வெற்றிபெற்றவர்களுக்கு மெகா பரிசுகளும் கலந்து கொண்டு பரிச்சை எழுதிய அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் இதே போல மானவ மானவியருக்காக வாராவாரம் நடைபெறும் தர்பியாவில் பரிச்சை நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது
நிகழ்ச்சி தொடங்க சிறிது நேரத்திற்க்கு முன்பாக காற்றுடன்கூடிய கடுமையான மழைகொட்டத்துடங்கியது டிரான்பாமில் மரம்விழுந்து ஊரே இருண்டு போனது இவ்வளவு கடுமையான சூழ்நிலையிலும் பெண்கள் மிகவும் ஆர்வமாக திரண்டுவந்து கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேள்வியாக கேட்டு தெளிவு பெற்று சென்றார்கள்
மர்க்கத்தில் தடுக்கப்பட்ட தர்கா கந்தூரிக்குதான் பெண்கள் ஆர்வமாக செல்வார்கள் என்ற நிலையை மாற்றி நாங்களும் சஹாபாபென்மனிகளை போல மார்கத்தை அறிந்து கொள்ள புயலே அடித்தாலும் வருவோம் என நிறுபித்துள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்
இதில் குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு ஆட்டோ விளம்பரமோ ,நிகழ்ச்சிக்கு வருபவர்களை அழைத்துவர வாகன ஏற்பாடோ செய்யவில்லை என்பது முக்கியமான செய்தியாகும்

Monday 29 October 2012

அகாஷ் தோட்டவளாகத்தில் பெண்கள் ஒருங்கினைப்பு

தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.10.2012 ஞாயிற்றுகிழமை மாலை 4.30 மனியளவில் அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் ஒருங்கினைப்பு நடை பெற்றது
  அதில் தொடர்ந்து நடந்த பென்கள் பயானில் சொல்லப்பட்ட விசயங்கள் குறித்த பரிச்சை நடத்தப்பட்டது நிகழ்ச்சியின் ஆரம்பமாக அனைவருக்கும் கேள்விதாள் வழங்கப்பட்டது
   பள்ளிகூடத்தில் பரிச்சை எழுதுவது போல அனைத்து பெண்களும் ஆர்வமாக பேப்பரி விடை எழுதினார்கள் . இந்த பேப்பர்கள் அனைத்தும் திருத்தப்பட்டு அதிக மதிப்பன் எடுத்தவர்களுக்கு மெகா பரிசுகளும் குரைந்த மதிப்பென் பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும்  இன்று கொய்யா மஹாலில் நடக்கும் பெருநாள் ஒருகினைப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும்
  இது குறித்து கருத்து தெறிவித்த பெண்கள் பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை இதன் மூலம் மார்க்கத்தை தெளிவாக விளங்கி கொண்டதே மிகப்பெரிய பரிசு என கூறி சென்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Sunday 28 October 2012

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது

   முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக குர்பானி வேலைகள் இன்று காலை சுபுஹூதொழுகை முடிந்த உடனேயே ஆரம்பமானது
 முத்துப்பேட்டை கிளை 1ல் மட்டும் 11 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது        1 மாட்டை மட்டும் திருத்துரைபூண்டி கிளை 2 சகொதரர்களிடம் கொடுத்து அங்குள்ள ஏழை குடும்பக்களுக்கு வழங்கப்பட்டது
  மீதியுள்ள 10 மாடுகளையும் குர்பானி கொடுத்து அதன் மாமிசங்களை ஏழை மக்களுக்கு வினியோகிக்கும் பனியை நிர்வாகிகளும் முன்னால் நிர்வாகிகளும் நேரடியாக களத்தில் இறங்கி செய்தனர்
  மக்கள் தவ்ஹித்ஜமாத்தை நம்பி தந்த இந்த பொருப்பை நாமே நேரடியாக செய்ய வேண்டும் என்பதற்க்காக கிராமம் கிராமமாக சென்று மாடு வாங்கியது முதல் குர்பானி கொடுத்த மாமிசங்களை ஏழைகளுக்கு கொடுத்தது வரை அனைத்தும் நிர்வாகிகளின் நேரடி கன்கானிப்பில் நடந்து முடிந்தது
  தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மட்டும் சுமார் 800 ஏழை குடும்பங்களுக்கு இறைச்சி வழங்கப்பட்டது
  குர்பானியின் இறைச்சிகளை பனக்காரர்களே ஒருவருக்கு ஒருவர் கொடுத்து கொண்டு பிரிஜ்ஜில் வைத்து கொள்வதல்ல நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் காட்டிதந்த வழி . உன்மையான ஏழைகள் பசி போக்க வேண்டும் இதுதான் குர்பானி இதை தவ்ஹித் ஜமாத் மட்டும்தான் முரையாக செய்து வருகிறது




  இதே போல தோல்கல் மூலம் வரும் பனத்தையும் ஏழைகளுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, ஏழை வீடுகளுக்கு கீற்று போட்டு கொடுப்பது என முறையாக சிலவு செய்து அதன் வரவு சிலவு கனக்குகளையும் முறையாக வெளியிடுவது தவ்ஹித் ஜாமாத்தான் என்பதயும் தெறிவித்து கொள்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்




Saturday 27 October 2012

குர்பானிக்கு தயாராக மாடுகள்

          


இன்ஷா அல்லாஹ்தவ்ஹித்ஜமாத்  முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11 மாடுகள் பராமரிக்க பட்டு நாளை குர்பானி கொடுக்க தயார் நிலையில் உள்ளது

முத்துப்பேட்டையில் நபிவழிபடி பெருநாள் தொழுக குவிந்த மக்கள்கூட்டம் தினறியது மஸ்ஜித் நூர்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை புதுத்தெரு திடலில் இருந்து மழை காரனமாக மஸ்ஜித் நூர் பள்ளிக்கு மாற்றப்பட்டது
  குறுகிய கால அவகாசத்தில் இடமாற்றம் செய்யப்பட்டாலும் நிர்வாகிகள் சலைக்காமல் பம்பரமாக சுழன்று வேலைகளை செய்து தயார் செய்தார்கள்
எதிபார்த்ததைவிட அதிகமாக பெண்கள் கூட்டம் அலைமோதியது பள்ளிவாசல் நிறைந்துவிட்டால் சமாளிப்பதற்க்காக பள்ளியை  சுற்றியுள்ள பகுதிகளை தயார் செய்து வைத்து இருந்தும் இடங்கள் நிரம்பி வழிந்தது
  அக்கம்பக்கத்தில் சகல வசதிகளோடு உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடந்தும் நபிவழி படிதான் தொழுகனும் என்பதற்க்காக நூர் மஸ்ஜிதை[தவ்ஹித் ஜமாத் பள்ளி] நோக்கி மக்கள் வந்தது முத்துப்பேட்டையில் தவ்ஹிதின் எழுச்சியை காட்டியது
  பெருநாள் உரையாற்றிய மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் குர்பானி குடுப்பதில் காட்டும் ஒற்றுமை ஈடுபாட்டை தவ்ஹிதில் அதாவது ஒரு இறைவனை மட்டும் வனங்குவதில் காட்டவேண்டும் நல்ல விசயத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் தீமையான காரியத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவ கூடாது என ஆழமாகவும் அழுத்தமாகவும் உறையாற்றினார்.பெருநாள் உரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது  அல்ஹம்துலில்லாஹ்.

   தாவாவை அதிகப்படுத்துவதற்க்காக முத்துப்பேட்டையை கிளை 1 கிளை 2 என இரண்டாக பிரித்தும் இரண்டு இடங்களிலுமே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது அதிலும் பெண்கள் கூட்டம் மிக மிக அதிகமாக இருந்தது














  இன்னும் வரும்காலங்களில் திடலில் தொழுக முடியாமல் மழை பெய்தால் பெரிய திருமன மண்டபங்களைதான் ஏற்பாடு செய்யனும் அல்லது பள்ளிவாசலை இன்னும் பல மடங்கு பெரிதாக்கனும் என்று மக்கள் கூறி சென்றது  அவர்களின் ஈடுபாட்டை காட்டியது அல்ஹம்துலில்லாஹ்

விழிப்புனர்வு பிரசுரம்


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்ஜுப்பெருநாளையும் குர்பானி சட்டங்களையும் அரபா நோன்பையும் பற்றி மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதமாக பிரசுரம் வெளியிடப்பட்டது முத்துப்பேட்டை முழுவதும் வினியோகிக்கப்பட்டது பெரும்பான்மையான மக்கள் தெளிவடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Friday 26 October 2012

புதுத்தெரு தவ்ஹித் திடலில் நபிவழி பெருநாள் தொழுகை

இன்ஷாஅல்லாஹ் நாளை காலை சரியாக 7.30 மனியளவில் புதுத்தெரு தவ்ஹித் திடலில் பெருநாள் தொழுகை நடைபெறும் நபி வழியில் நடைபெறும் இந்த தொழுகையில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுகொளகிறோம்.

பெருநாள் சந்திப்பு லித்தோஸ் போஸ்டர்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பென்களுக்கான பெருநாள் சந்திப்பு மற்றும் இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் நிகழ்ச்சி29.10.2012 திங்கள் கிழமை மாலை 4.30 மனியளவில் கொய்யாமஹாலில் ஏற்படு செய்யப்பட்டுள்ளது கேட்கப்படும் கேள்விகளுக்கு மாநில செயளாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் பதிலலிக்கிறார்கள் இதற்க்கான விரிவான ஏற்பாடுகளில் ஒன்றாக இதற்க்கான லித்தோஸ் போஸ்ட்டர் முத்துப்பேட்டை முழுவதும் இன்று ஒட்டப்பட்டது


மஸ்ஜித்நூரில் அரபா நோன்புதிறக்கும்[இப்தார்] நிகழ்ச்சி


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அரபா [இப்தார்] நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மஸ்ஜித் நூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடந்தார்கள்
ரமழானை தவிர வேறு எந்த நோன்பிற்க்கும் எந்த ஏற்பாட்டையும் இதுவரை கண்டிராத முத்துப்பேட்டை மக்கள் இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு செய்திருந்த விரிவான ஏற்பாட்டை பார்த்து வியந்துபோனார்கள் தவ்ஹிதின் எழுச்சிக்கு பின்புதான் பெரும்பன்மையான மக்களுக்கு அரபா நோன்பு பிடிப்பதின் அவசியமே தெறிந்தது

இப்போது நோன்புதிறக்க செய்த இந்த ஏற்பாடுகள் வருடா வருடம் தொடர்ந்தால் நோன்பின் முக்கியத்துவம் இன்னும் அதிக மக்களுக்குதெறியவரும் இது தொடர அல்லாஹ் நாடுவானாக




Monday 22 October 2012

டிவிசனல் ரயில்வே மேனேஜருடன் திருச்சியில் முத்துப்பேட்டை தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு

  முத்துப்பேட்டையில் இயங்கிவரும் ரயில்வே முன்பதிவு மையத்தை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் எடுத்த முடிவை எதிர்த்துதவ்ஹித் ஜமாத் போஸ்டர் ஒட்டியது ,டெலிகிராம் கொடுத்தது,எம்பி,எம் எல் ஏ விடம் கோரிக்கைவைத்தது என பல கட்ட நடவடிக்கைகளை செய்து வருகிரது
   அதன் தொடர்ச்சியாக இதன் பொருப்பு அதிகாரியான டிவிசனல் ரயில்வே மேனேஜர் அவர்களை சந்திக்க திருச்சி சென்றார்கள்   நாம்தவ்ஹித்ஜமாத் வந்து இருக்கிறோம் என்றதும் உடனே அனுமதி கிடைத்தது இதனுடைய அனைத்து புள்ளிவிபரங்களும் கொடுக்கப்பட்டது 19.10.2012 வெள்ளிகிழமை ஒருநாள்மட்டும் முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேசன் கலெக்சன் 65 ஆயிரம் என்பது உயர் அதிகாரிகளுக்கே நாம் சொல்லிதான் தெரிந்தது அனைத்தையும் ஆவலோடு கவனமாக கேட்ட ஏடிஆர் எம் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்னும் இரண்டு நாளில்  நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பரீசீலித்து முடிவெடுப்பதாக உறுதியளித்தார்
   அகலரயில்பாதை பனிகளுக்காக ரயில்வே ஸ்டேசனை இடிக்கும் சூழ்நிலை  உறுவானால் ரிசர்வேசன் இங்கு தொடர்வது இயலாத காரியம் இதற்க்கு மாற்று ஏற்பாடாக உங்கள் தொகுதி எம்பிக்கு உள்ள கோட்டாவில் தனியாக போஸ்ட் ஆபிஸிலேயே ரயில்வே ரிசர்வேசனை தொடங்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்

    இந்த வழியையும் விட்டு விடாமல் அதற்க்கான முயற்ச்சியையும்  தவ்ஹித் ஜமாத் செய்துவருகிரது

Saturday 20 October 2012

ரயில்வேயும் தவ்ஹித்ஜமாத்தும் பரபரப்பான முத்துப்பேட்டை

   முத்துப்பேட்டையில் அகலரயில்பாதை பனிகள்ஆரம்பிக்க அறிகுறியாக மீட்டர்கேஜ் ரயில்கள் 18.10/2012 அன்றோடு நிறுத்தப்பட்டது .ஒரு வழியாக பிராட்கேஜ்[அகலரயில்பாதை] வரப்போகிரது என சந்தோஷப்பட்ட நேரத்தில்  அதிரடியாக ஒரு செய்தி வெளியானது
   முத்துப்பேட்டையில் உள்ள கம்பியூட்டர் முன்பதிவு மையத்தையும் எடுக்கப்போவதாக செய்திகிடைத்தது உடனே களத்தில் இறங்கிய தவ்ஹித்ஜமாத் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு இதை எடுக்ககூடாது என கோரிக்கைவைத்தது அதோடு தொகுதி எம் பி மற்றும் எம் எல் ஏ வை தொடர்புகொண்டு ஆவன செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது
  மக்கள் சக்திக்குதான் அதிகாரவர்க்கம் பயப்படும் என்பதால் இதற்க்கு சரியான தீர்வு இல்லாவிட்டால் வீரியமான போராட்டத்தை எதிகொள்ளவேண்டி இருக்கும் என்பதை உனர்த்தும் விதமாக லித்தோஸ் போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது
  உடனே கிளை நிர்வாக குழு கூடி சம்மந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்திப்பது என முடிவு செய்து ஒரு குழு நியமித்து உடனடியாக அந்த குழு திருச்சி புறப்பட்டு சென்றுள்ளது அதன் விபரம் இன்ஸா அல்லாஹ் நாளை வெளியிடப்படும்
  




Saturday 13 October 2012

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக முதியோர் இல்லத்திற்க்கு நிதி உதவி

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் தலைமை நேரடியாக நடத்தும் பண்டாரவடையில் உள்ள முதியோர் இல்லத்தை பார்வையிட சென்றார்கள் அவர்களை பார்த்து கலந்துரையாடிவிட்டு அந்தமுதியோர் இல்லத்திற்க்கு நிதியுதவியாக கிளை சார்பாக ரூபாய் 5000 கொடுத்துவிட்டு வந்தார்கள் கிளை நிர்வாகிகளுக்கு கூட இருந்து தேவையான உதவிகளை குவைத் மண்டல தாயி ராஜகிரி யூசுப் உலவி அவர்கள் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

அர்ரஹ்மான் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்க்கு முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நிதி உதவி





முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் மாநில தலைமை நேரடியாக நடத்தும் அர்ரஹ்மான் ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களை பார்வையிட சுவாமிமலை சென்றார்கள் சிறுவர்களை சந்தித்துவிட்டு அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கிவிட்டு அந்த சிறுவர் இல்லத்திற்க்கு நிதியுதவியாக கிளை சார்பாக 8.500 ரூபாய் வழங்கப்பட்டது  அதன்பிறகு மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் நம் நோக்கம் லட்சியம் எப்படி இருக்கவேண்டும் என்று உரையாற்ரினார்கள் அனைத்து சிறுவர்களும் பயனடந்தார்கள். பார்வையிட சென்றவர்களும் மன நிம்மதியடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்