Monday 30 September 2013

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவ்ஹித்ஜமாத் நிதி உதவி



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  30.09.2013 அன்று நிதி உதவி வழங்கப்பட்டது

முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு வீடுகளுக்கு பதிப்பு ஏற்பட்டது
அதில் மூன்று வீடுகள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்

தீவிபத்து நடந்த அன்று இரவே தவ்ஹித்ஜமாத் கிளை 1 நிர்வாகிகள் நேரில் போய் ஆய்வு செய்து விட்டு அவர்களுக்கு ஆருதல் கூறிவிட்டு நிர்கதியாக இருந்த அவர்களுக்கு இரவு உனவு ஏற்பாடும் செய்துவிட்டு வந்தனர்

இன்று மீண்டும் அவர்களை சந்தித்து அவர்களுக்கு உடனடியாக என்ன தேவை என்பதை பார்த்து அவர்களிடமும் கலந்து பேசி விட்டு தேவையான உதவிகளை செய்தார்கள்

முற்றிலும் எரிந்து அதிகப்படியான நஷ்டமடைந்த சகோதரர் முகைதீன் அவர்கள் குடும்பத்திற்க்கு ரூபாய் பத்தாயிரமும் [10000]

சகோதரி மும்தாஜ் க/பெ தாவுது கனி  அவர்கள் குடும்பத்திற்க்கு ரூபாய் ஐந்தாயிரமும் [5000]

மாற்றுமத சகோதரி மலர் அவர்கள் குடும்பத்திற்க்கு ரூபாய் ஐந்தாயிரமும் [5000]

மொத்தம் 20 ஆயிரம்ரூபாய் நிதி உதவி செய்யப்பட்டது அல்லாஹ்போதுமானவன்.

கூடுதல் தகவல்--
                                        நம்மால் இயன்ற இந்த நிதி உதவியை செய்தாலும் அவர்கள் பாதிப்பை பார்க்கும் போது இந்த நிதி போதுமானதல்ல . அவர்களுக்கு நிதி உதவி செய்ய விரும்புவர்கள் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 மூலமாகவும் உதவி செய்யலாம் அல்லது தாங்கள் விரும்பினால் நேரடியாகவும் உதவி செய்யலாம் அல்லாஹ் நமக்கு நன்மையை தருவான்.



Sunday 29 September 2013

பெரியகடைத்தெருவில் வீரியமாக நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.09.2013 அன்று பெறியகடைத்தெரு பகுதியில் ஜும்மா மசூதி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

இதில் மாவட்ட தாயி சொற்பொழிவாற்றினார்கள் வழக்கத்தைவிட அதிகமானோர் கலந்து கொண்டனர் மேலும் நம்மை எதிர்க்க கூடியவர்களும் ஆங்காங்கே கடைகளில் மறைந்து கொண்டும் ஒளிந்துகொண்டும் நம் பேச்சை ஆர்வத்துடன் செவிமடுத்தனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.09.2013 அன்று மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் தர்பியா நடைபெற்றது கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட தாயி கட்டி நாநா அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள்.

பயங்கர தீ விபத்து! நெய்யாகார தெருவில் நான்கு வீடுகளுக்கு சேதம்


முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில் பயங்கர தீ விபத்து ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ மளமள என பரவி நான்குவீடுகளுக்கு சேடத்தை ஏற்படுத்தியது

தீ ஏற்பட்டவுடன் தீயனைப்பு வாகனங்கள் வரமுடியாத அளவிற்க்கு குருகிய சந்துகளாக உள்ளதால் மிகவும் சிக்கலாகிவிட்டது

இருந்தாலும் நம் இளைஞர்கள் துருதிமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் நம் இளைஞர்கள் கலத்தில் இரங்கி வேலை செய்யாவிட்டால் தீயினால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் அதிகமாகி இருக்கும்

எந்த திட்டமிடலும் இல்லாமல் மனை போட்டு வீடு கட்டுவதும் இதற்க்கு ஆபத்தான காலகட்டத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு வாகனங்கள் வந்து போக போதுமான வழி உள்ளத என பார்க்காமல் பேரூராட்சி அனுமதி கொடுத்ப்பதும்தான் சிக்கலுக்கு காரனம்

வருங்காலங்களிலாவது அனைத்து விதிமுறைகளையும் மதித்து வீடுகட்ட மக்கள் முன் வரவேண்டும் அப்படி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அனுமதி கொடுக்ககூடாது இனியாவது உயிரோடு விளையாடாமல் பாதுகாப்பாக வாழ வழி செய்வோம்

Saturday 28 September 2013

திமில தெருவில் பெண்கள் பயான் அதிகமான பென்கள் பங்கேற்ப்பு


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.09.2013 அன்று திமிலத்தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது  இதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டுபயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 28 திருச்சியை நோக்கி! சிறைகளை நிறைப்போம்! உரிமைகளை வெல்வோம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பக 27.09.2013 அன்று முத்துப்பேட்டை பகுதியில் 11 இடங்களில் ஜனவர் 28 திருச்சியில் நடைபெறும் சிறை நிறப்பும் போராட்டம் குறித்த சுவர் விளம்பரம் செய்யப்பட்டது

இளம்பெண்னை அடைத்துவைத்து கற்பழிப்பு முதுப்பேட்டையில் பரபரப்பு


முத்துப்பேட்டை பேட்டை பகுதியில் ஒரு இளம்பெண்னை ஒரு மில்லில் காலையில் இருந்து மாலைவரை அடைத்து வைத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது

இது சம்மந்தமாக காவல்துறையில் புகார் கொடுத்தும் சம்பவம் நடந்து இரண்டு நாள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று முத்துப்பேட்டை பரபரப்பானது

இன்று பகல் சுமார் 12 மனியளவில் சம்மந்தபட்ட பெண்னிற்க்கு நியாயம் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது

சம்மந்தபட்டவர்களிடம் நாம் விசாரித்த போது கற்பழித்த பையன்மீது நடவடிக்கை எடுப்பதோடு அந்த பையனையே அந்த பெண்னுக்கு திருமனம் செய்துவைக்கவேண்டும் அதுவரை இந்த போராட்டம் ஓயாது என ஒரு போடு போட்டனர் . நியாயம் கிடைக்குமா?  அவனுக்கே கல்யானம் பன்னிவைப்பதுதான் தீர்வா? பொருத்து இருந்து பார்ப்போம்

Friday 27 September 2013

மஸ்ஜித் நூரில் வாராந்திர ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.09.2013 அன்று வாராந்திர ஆலோசனை கூட்டம் கிளை  தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் மஸ்ஜித்நூரில் நடைபெற்றது

இதில் கடந்த வார செயல்பாடுகளின் குறை நிறை ஆராயப்பட்டது வரும் காலங்களில் தாவாவை வீரியப்படுத்துவது சம்மந்தமாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.09.2013 அன்று திருகுரான் விளக்க வகுப்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்றது இதில்  ஏராளமானோர் களந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

Thursday 26 September 2013

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேடை கிளை 1 சார்பாக 26.09.2013 அன்று திருகுரான் தர்ஜிமா வகுப்பு மஸ்ஜித்நூரில் நடை பெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்ரனர் அல்ஹம்துலில்லாஹ்

காவி பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை! அரசாங்கம் கலவரத்தை தூண்டும் காவி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தையும் குஜராத் போல மாற்றிவிடுவோம் என கொக்கரித்த
காவி பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை!



மஸ்ஜித் நூரில்திருகுர்ஆன் தர்ஜுமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.09.2013 அன்று மஸ்ஜித் நூரில் திருகுர்ஆன் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது

அற்புத பெருவிழா மோசடி விழிப்புனர்வு போஸ்ட்டர் ஒட்டப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.09.2013 அன்று அற்புதபெருவிழாக்களில் அற்புதங்கள் நிகழ்வது எப்படி ?  போஸ்டர்  ஒட்டப்பட்டது

Tuesday 24 September 2013

சவூதி: பொது மன்னிப்பை பயன்படுத்திக்கொள்ள இந்தியத் தூதர் வேண்டுகோள்!


சவூதி அரேபியாவில் சட்ட மீறலாகத் தங்கியோ, முறையான ஆவணங்கள் இன்றியோ பணி செய்துவரும் வெளிநாட்டவர்கள் எவ்வித தண்டனையோ, அபராதமோ இன்றி பொதுமன்னிப்பின் கீழ் தாயகம் திரும்பிட இன்னும் 45 நாள்களே மீதமுள்ள நிலையில், அவ்வாறான நிலையில் உள்ள இந்தியர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளும்படி சவூதி அரேபியாவிற்கான இந்தியத் தூதர் ஹமீது அலீ ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்

முதலில், நிபந்தனைகளற்ற பொதுமன்னிப்பை வழங்க முன்வந்ததுடன், மேலும் நான்கு மாதங்களுக்கு சலுகைக் காலத்தை நீட்டித்துத் தந்த சவூதி அரேபிய அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸுக்கு இந்தியத் தூதர் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்

சவூதி மன்னர் அறிவித்திருந்த மூன்று மாத பொதுமன்னிப்புக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டு இந்த அரபிய ஆண்டு(ஹிஜ்ரி 1434) இறுதிவரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது அறிந்ததே

இதுவரை இந்த பொதுமன்னிப்பின் கீழ், இந்தியர்களில் 359,997 பேர் தங்கள் பணிகளை முறையான ஆவணங்களுடன் மாற்றிக்கொண்டுள்ளனர், 355,035 இந்தியர்கள் தங்கள் பணிப்பெயர்களில் முறையான திருத்தம் செய்துள்ளனர் என்றும், 466,689 பேர் உரிமங்களைப் புதுப்பித்துள்ளனர் என்றும் அவர் புள்ளிவிவரங்களை அளித்தார்.

 
மேலும் 88, 737 இந்தியர்கள் தாயகம் திரும்புவதன் பொருட்டு அவசரக் கடவுச் சான்று (Emergency Certificate) கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்

இந்தப் பொதுமன்னிப்புத் திட்டத்தின் கீழ் இந்தியர்கள் தேவையான மாற்றங்களைப் பெறுவதற்கோ, தாயகம் திரும்பவோ உதவியாக உள்ள சவூதி உள்துறை அதிகாரிகளுக்கும், பிரதிபலனை எதிர்பாராமல் சக இந்தியர்களின் நலனை உத்தேசித்து களப்பணி ஆற்றி துயர் துடைக்கும் இந்தியத் தன்னார்வ சமூக சேவகர்களுக்கும் இந்தியத் தூதர் தன் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

 
இந்தப் பொதுமன்னிப்பு பற்றி அறியாமல் இருக்கும் இந்தியர்களிடம் இச்செய்தியை எடுத்துரைக்கும்படியும் இந்தியத் தன்னார்வத் தொண்டர்களையும் ஊடகப் பிரதிநிதிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்


Saturday 21 September 2013

புதிய பேருந்து நிலையம் எதிரே கட்டப்பட்டுவரும் தவ்ஹித் மர்கசிர்க்கு உதவிடுவீர்

முத்துப்பேட்டையில் தவ்ஹித் கொள்கையை ஏற்றுக்கொண்டோரின் என்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிரது

தர்ஹாக்களுக்கு போகும் மக்களின் என்னிக்கை குறைந்தும் தவ்ஹித் மர்கசிர்க்கு வரும் மக்களின் என்னிக்கை அதிகரித்து வருவதும் அனைவரும் அறிந்த செய்திதான்

முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே தவ்ஹித்ஜமாத்தின் புதிய மர்கஸ் உருவாகி வருகிரது தவ்ஹித் ஜமாத்தின் வளர்ச்சியால் வருமானத்தை இழந்தவர்கள் மக்களை ஏமாத்தி பிழைத்தவர்கள் எல்லாம் சேர்ந்து தவ்ஹித் மர்கஸ் உறுவாக பல இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்

அனைத்தையும் முறைப்படி எதிர்கொண்டு முறியடித்து மர்கஸ் உருவாகிவருகிரது இவ்வளவு எதிர்ப்புக்கு இடையில் உருவாகும்இந்த மர்கஸ் வேலைகள் பொருளாதார பற்றாக்குரையால் நின்றுவிட கூடாது

அன்பார்ந்த கொடையுள்ளம் கொண்ட சகோதரர்களே சதக்கத்துல் ஜாரியாவாக கியாமத் நாள்வரை தொடர்ந்து நன்மை வந்து கொண்டே இருக்கும் இந்த பனிக்கு உங்கள் பொருளாதாரத்தை கொடுத்து உதவுங்கள் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைதருவான்

தொடர்புக்கு

                             அன்சாரி          0091 9965986113

                             சுகைபுகான்    0091 9842095320 

நாடு எப்படி. உறுப்படும் ஐஏஎஸ் ஐபிஎஸ் இப்படி என்றால் சாதாரண. போலீஸின். நிலை?


Friday 20 September 2013

பெறியகடைதெரு ரேசன்கடை அருகே தெருமுனை கூட்டம் வாராந்திர மசூராவில் முடிவு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.09.2013 அன்று வாராந்திர மசூரா மஸ்ஜித் நூரில் நடைபெற்றது

அதில் தாவாவை அதிகப்படுத்துவது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது கடந்த வார நிகழ்வுகளின் குறை நிறை பற்றிவிவாதிக்கப்பட்டது

 இன்ஸா அல்லாஹ் வரும் வாரம் 29.09.2013 அன்று பெரியகடைத்தெரு ரேசன்கடை அருகே தெருமுனை பிரச்சாரம் செய்வது என மிடிவு செய்யப்பட்டது

பழைய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுபுர பகுதிகளில் மாற்றுமத தாவா





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.09.2013 அன்று மாற்றுமத தாவா நியூபஜார் மற்றும் அதன் சுற்றுபுர பகுதிகளில் நடைபெற்றது
அதில் கடகடையாக சென்று ஐந்து மாற்றுமத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புக் இலவசமாக வழங்கி இஸ்லாம் குறித்து அறிமுகம் செய்து தாவா செய்யப்பட்டது

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.09.2013 திருக்குரான் தர்ஜிமா வகுப்பு மஸ்ஜித் நூரில் நடைபெற்றது ஒருசில வசனங்களை வாசித்து அதற்க்கு தமிழில் அர்த்தம் சொல்லி விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வினாயகர் ஊர்வலம் விதிமுறை மீறல் சம்மந்தமாக தவ்ஹிட்ஜமாத் கொடுத்த புகார்மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறை மனுரசீது வழங்கியது

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை ஒருங்கினைந்த கிளை சார்பாக காவல்துறையில் புகார் கொடுத்த விபரத்தை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்

இன்று புகாரை ஏற்றுகொண்ட காவல்துறை பெற்றுக்கொண்டதற்க்கு ஆதரமாக மனுரஷீதை நம்மிடம் வழங்கியது

முத்துப்பேட்டையில் முந்தைய காலங்களில் பிரச்சனைகள் அதிகமாகி வீட்டைவிட்டே வெளியே வர பயந்து அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடந்த போது தைரியமாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தது தவ்ஹித்ஜமாத்தான்

அந்த அசாதரமான சூழ்நிலையில் தவ்ஹித்ஜமாத்தை தொடர்பு கொண்ட ஜமாத் தலைவர்கள்  நீங்களே பொருப்பேற்று செய்யுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் தருகிறோம் என வாக்குறுதி கொடுத்ததும்

ஊரில் கடுமையான சூழ்நிலை மாறி இயல்பு நிலை திரும்பியதும் நீங்கள் ஒதுங்கிகொள்ளுங்கள் இதுவரை நீங்கள் எவ்வளவு பனம் சிலவு செய்துள்ளீர்களோ அதை நாங்கள் தந்துவிடுகிறோம் என சொல்லி அப்படியே மாறிகொண்ட நிகழ்வுகளையும் தவ்ஹித்ஜமாத் சந்தித்ததுண்டு.

ஊர்வல பாதை மாற்றுவது சம்மந்தமாக ஆரம்பத்தில் இருந்து களப்பனி ஆற்றியது தவ்ஹித்ஜமாத்தான் ஆனால் ஊரில் எந்த களப்பனியும் செய்யாமல்  ஒரு துரும்பை கூட அசைக்காமல் கோர்ட்டில் கேஸ் போட்டதால்தான் பாதை மாறியது என கூறி அதற்க்காக அப்பாவி செல்வந்தர்களிடம் பனம் வசூல் செய்து அதற்க்கு இதுவரை எந்த கனக்கும் காட்டாமல் இருப்பவர்களையும் நாம் பார்த்துதான் வருகிறோம்

இதையல்லாம் நாம் குறிப்பிடகாரனம் அதே போல மறுபடியும் யாரும் வந்து நாங்கள்தான் செய்தோம் என ஊரை ஏமாத்தி பனம் வசூல் செய்துவிடகூடாது என்பதால்தான்

ஒவ்வொரு நாளும் நாம் என்ன என்ன செய்துவருகிறோம் என்பதை ஆதாரத்தொடு மக்களிடம் தெறிவித்து வருகிறோம்
ஒரு சில நடவடிக்கைகளை பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி ரகசியமாக வைத்திருந்தாலும் காலம் வரும்போது இன்ஸா அல்லாஹ் ஆதாரத்தோடு வெளியிடுவோம்


Thursday 19 September 2013

ஷிர்க்கிர்க்கு எதிரான தாவா! பாதுகாக்கும் என நம்பி கட்டி தொங்கவிடப்பட்ட கல்!! தீமையை விளக்கி அகற்றப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.09.2013 ஷிர்க்கிர்க்கு எதிரான தாவா மரைக்காயர் தெருவில் செய்யப்பட்டது

அப்போது ஒரு வீட்டில் கண்திருஷ்ட்டி பாதுகாப்புக்காக கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த சீனாகாரம் கல்லை அதன் தீமைகளை எடுத்து சொல்லி அவர்களின் அனுமதியோடு அறுத்து எறியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வினாயகர் ஊர்வல பாதையை மாற்றுவதுதான் நிறந்தர அமைதிக்கு ஒரே தீர்வு! தவ்ஹித்ஜமாத் காவல்துறையிடம் மனு

நேற்று நடந்த  வினாயகர் ஊர்வலத்தின் போது விஷமிகள் ஒரு வீட்டின்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது சம்மந்தமாகவும்

ஊர்வல்த்திற்க்கு அனுமதி கொடுத்த நேரத்தில் வராமல் வேண்டுமென்றே இரவு வேளையில் ஊர்வலம் வந்தது சம்மந்தமாகவும்

இதே நிலை வருங்காலங்களில் தொடராமல் இருக்க என்ன செய்யலாம் என முடிவு எடுக்க முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் கிளைகளின் ஒருங்கினைந்த கூட்டம் ரஹ்மத் பள்ளிவாசலில் நடந்தது

பல வருடங்களாக இந்த பிரச்சனை நீடித்துவர காரனம் இந்துக்கள் அதிகமக வாழும் பகுதிக்குள் ஊர்வல பாதையை அமைத்து கொள்ளாமல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிக்குள் பிரச்சனை செய்ய என்றே ஊர்வலம் வருவதுதான் காரனம் என்பது தெளிவாக தெறிகிரது

நாளைக்கு முஸ்லிம்கள் எதாவது ஒரு ஊர்வலம் எனும் பேரில் இந்து பகுதிக்குள்தான் போவோம் என சொன்னால் எப்படி சட்டம் ஒழுங்கை காரனம் காட்டி அனுமதி கொடுக்க மாட்டார்களோ அதே போல இவர்கள் வினாயகரை தூக்கிகொண்டு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்குள் வர அனுமதிக்ககூடாது

எத்தனையோ தடவை எத்தனையோ வாக்குறுதிகள் அவர்களிடம் பெற்றுகொண்டு அனுமதி கொடுத்தும் அதை அவர்கள் கொஞ்சம்கூட மதிக்காமல் மீறியே வருகிறார்கள்

காவல்துறையும் இதற்க்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இனி அடுத்தவருடம் நடக்காது என நம்மை சமாதனபடுத்துவதுதான் வாடிக்கையாகி விட்டது

இதனால் இனிவரும் காலங்களில் மக்கள் அமைதியாக வாழ  ஊர்வல பாதையை மாற்றி அமைப்பதுதான் ஒரே வழி என கருதுகிறோம்

ஊர்வல நேரத்தை காலை 10 மனிமுதல் பகல் 2 மனிக்குள்ளாகவும்  மன்னார்குடி ரோடு வழியாக ECR ரோட்டில் போக பாதையை மாற்றி அனுமதி கொடுக்கும்படியும்,நேற்று தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் மனு கொடுக்கப்பட்டது

இந்த புகாரின் நகல்  டிஎஸ்பி,  எஸ்பி,  டிஐஜி, ஐஜி,  இன்னும் முதலமைச்சரின் தனிபிறிவு அதிகாரி ஆகியோருக்கும் தவ்ஹித்ஜமாத்  மாவட்ட,  மாநில தலமைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது




Wednesday 18 September 2013

வினாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்வீடு மீது கல்வீச்சு!! நடந்தது என்ன?




செங்கள்களை கொண்டு தாக்கிய அடையாளம்
முத்துப்பேட்டையில் நேற்று நடந்த வினாயகர் ஊர்வலம் மழையால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது என நாம் எழுதியிருந்தோம்

ஆனால் இரவு நமக்கு ஒரு வீடு மீது கல்வீசி தாக்குதக் நடத்தியதாக செய்தி வந்தது நேரில் போய் விசரித்து விட்டு செய்தியை வெளியிடலாம் முடிவு செய்து நம் ஜமாத் நிர்வாகிகள் நேரில் சென்றார்கள்

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல காலதாமதமாக வினாயகர் ஊர்வலம் இரவு நேரத்தில் முத்துப்பேட்டைக்குள் வந்தது கலவரம் செய்யதான் என்பது நிறுபனம் ஆகியுள்ளது. மழை மட்டும் பெய்யாமல் இருந்து இருந்தால் அவர்கள் திட்டம் போட்டு வந்ததை செய்து இருப்பார்கள்.

பங்களாவாசலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள் அந்த இடத்தில் தடை செய்யப்பட்ட வினாயகருக்கு சம்மந்தமில்லாத கோஷங்களையும் எழுப்பி மக்களின் உனர்ச்சியை தூண்டிவிட்டுள்ளார்கள்

நம் நிர்வாகிகளிடம் நடந்தவைகளை வீட்டின் உரிமையாளர் விரிவாக எடுத்துவைத்தார் இது போல மறுபடியும் நடக்காமல் இருக்க ஆவன செய்யுமாறு  கேட்டுகொண்டார்

இதில் நமக்கு எழும் கேள்வி என்ன என்றால் குறித்த நேரத்திற்க்குள் ஊர்வலத்தை முடிக்க போலீஸ் ஏன் நிற்பந்திக்கவில்லை?

கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை ஏன் அந்த இடத்திலேயே கைது செய்ய வில்லை? அவர்கள் கல்வீசும் போது போலீஸ் எங்கு போய் இருந்தது?

முஸ்லிம்கள் கடையை அடைத்து விடுங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் உங்கள் பாதுகாப்பிற்க்குதான் நாங்கள் என உறுதி கொடுத்ததை நம்பிதானே நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்

அவர்கள் எங்கள் பகுதியிலேயே வந்து எங்கள் வீட்டின் மீதே தக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக போக நீங்கள் உதவி செய்துள்ளீர்களே?

இது சம்மந்தமாக தவ்ஹித்ஜமாத்தின்  முத்துப்பேட்டை கிளையின் ஒருங்கினைந்த ஆலோசனை கூட்டம் இன்னும் சிறிது நேரத்தி ஆரம்பமாக உள்ளது அதில் எடுக்கப்படும் முடிவுகள் இன்ஸா அல்லாஹ் விரைவில் வெளியிடப்படும்