Friday, 8 March 2013

இதுவரை பேசாத புதிய தலைப்பு [ஈகோ] அகங்காரம் பற்றி 15.03.2013 அன்று குவைத்தில் பிஜே பேசுகிறார்




ஒருமனிதனை ஈகோ அகங்காரம் எந்த அளவுக்கு கெடுக்கிரது அவனிடம் உள்ள ஈகோவை அவன் புறந்தள்ளுவது எப்படி இப்படி ஈகோ சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் திர்வுகளை விளக்கி15.03.2013 வெள்ளிகிழமை மாலை 6 மனிக்கு மாநில தலைவர் பிஜெ அவர்கள் சொற்பொழிவாற்றுகிறார்கள்.
 ஆன்லைபிஜெ மற்றும் தவ்ஹித் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

Tuesday, 5 March 2013

வீட்டுக்குதேடி சென்று தாவா



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2013 அன்று தனிநபர் சந்திப்பு நடை பெற்றது தாயி முகம்மது மீரான் தலைமையில் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் வீடு வீடாக  சென்று இரண்டு நபர்களுக்கு தனி தனியாக  தாவா செய்தனர்

வீடு வீடாக சென்று விழிப்புனர்வு பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2013 அன்று வீடுகளுக்கு தேடி சென்று பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பது தொழுகையை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவது சம்மந்தமாக வீட்டில் உள்ள பெண்களிடம் விழிப்புனர்வு செய்யப்பட்டது

தாயி முகம்மது மீரான் மற்றும் தவ்ஹித்ஜமாத் கிளை 1 நிர்வாகிகள் ஒரு ஒரு வீடாக நான்கு வீடுகளுக்கு சென்று விழிப்புனர்வு ஏற்படுத்தினர் பென்கள் ஆர்வத்தோடு செவிமடுத்து சொன்னபடி செய்வதாக உறுதியளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான பயிற்ச்சி முகாம் 03.03.2013 அன்று மஸ்ஜித் நூரில் காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்ரது ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டவர்களுக்கு தயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள்

விவாத டிவிடியும் நமது கேள்வியும்

சகோதரர் பிஜெ அவர்களுக்கும் சைபுதீன் ரஷாதி அவர்களுக்கும் 99 தலைப்புகளில் விவாதம் செய்வதாக ஒப்பந்தம் போடப்பட்டு அதில் முதலில் இரண்டு தலைப்புகளில் பிப்ரவரி 2,3,4, ஆகிய மூன்று நாட்கள் விவாதம் செய்வது என முடிவு செய்யப்பட்டு விவாதத்தின் கடைசியில் அடுத்த தலைப்பை எப்போது விவாதிக்கலாம் என முடிவு செய்யலாம் என ஒப்பந்தம் போட்டு இரண்டுபேரும் கையெழுத்து போட்டனர்

அதன்படி பிப்ரவரி 2ம் தேதி முதல் தலைப்பில் இஜ்மா கியாஸ் மர்க்க ஆதாரமா என விவாதம் நடந்தது அடுத்த நாள் மார்க்கம் சொல்வதில் பிஜெ பொய்யரா ரஷாதி பொய்யரா என விவாதம் நடந்தது இதை ஆன்லைன் பிஜெ இனையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது

இதில் ரஷாதி மாட்டிகொண்டு முழித்ததும் கையும் களவுமாக சிக்கியதும் அவர் வைத்த வாதத்திற்க்கு ஆதாரமாக ஒரு குர் ஆன் ஹதீசை கூட காட்ட இயலாமல் தினறியதையும் உலகமே பார்த்து சிரித்தது அந்த வீடியோ முழுவதும் எடிட் செய்யபடாமல் இன்னமும் தவ்ஹித் வீடியோ.காம் மற்றும் ஆன்லைன் பிஜெ.காம் ஆகியவற்றில் உள்ளது யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் கடைசி நாள் அன்று மற்ற தலைப்பு பேச நாளை முடிவு செய்ய வற்புறுத்திய போது விட்டால் போதும் என ஓடிவிட்டார் வீடியோ பார்ப்பவர்களுக்கு தெரியும். இதில் ஹைலைட்டாக ரஷாதி அவர்கள் பிஜெவை நான் திட்டிதான் என் பிழைப்பே ஓடுகிரது அவரை நான் திட்டாவிட்டால் என்னை யார் மீட்டிங் பேச கூப்பிட போகிறார்கள் என ஒரு போடு போட்டாரே பார்க்கனும் அல்லாஹ் மிக பெரியவன் அவர் வாயாலேயே உன்மையை கொண்டுவந்தான்

கடந்த வெள்ளிகிழமை முத்துப்பேட்டையில் ஜும்மாவில் பிஜெவை விவாதத்தில் ரஷாதி ஜெயித்து விட்டதாகவும் அந்த டிவிடி இங்கு தருகிறோம் என்று விலைக்கோ அல்லது இலவசமாகவோ வினியோகித்ததாக தகவல் வந்துள்ளது

சைபுதீன் ரஷாதி பிஜெவிடம் சிக்கி சீரழிந்ததை எடிட் பன்னாமல் அப்படியே வெளியிட்டுள்ளார்களா அல்லது அவர்களுக்கு சாதகமக வெட்டி ஒட்டி வெளியிட்டுள்ளார்களா என பார்க்க அந்த டிவிடியை கேட்டுள்ளோம் அது கிடைத்ததும் அதி ஏதும் தில்லு முல்லு நடந்தது தெறியவந்தால் இன்ஷா அல்லாஹ் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து எது எது வெட்டி ஒட்டப்பட்டது அதை வெளிச்சம் போட்டு காட்டப்படும்

அதோடு இதை ஜும்மாவில் அறிவித்த பள்ளிவாசல் விற்பனை செய்த இமாம் ஆகியோரையும் விவாதத்திற்க்கு நேரில் அழைத்து இப்படி வெட்டி ஒட்டி மார்க்கத்தை மறைக்க அனுமதி உண்டா என கேள்வி கேட்கபடும் இவர்களையும் தோலுரித்து காட்டப்படும் இன்ஷா அல்லாஹ்

ஜும்மா பள்ளியில் வெளியிட்ட டிவிடி வைத்துள்ள சகோதரர்கள் அதை முத்துப்பேட்டை தவ்ஹித் ஜமாத்திடம் கொடுத்து உண்மையை வெளிகொண்டுவர உதவுமாறு கேட்டுகொள்கிறோம்

Sunday, 3 March 2013

பெரும் எழுச்சியுடன் நடந்த பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.03.2013 வெள்ளிகிழமை மாலை 4மனிக்கு அகாஷ் தோட்டவளாகத்தில் சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பென்கள் பயான் நடைபெற்றது

இரண்டுவார காலமாக நடைபெறாததால் பெண்கள் கூட்டம் குறைவாக வருமோ என நினைத்து கவலையாக ஏர்பாடு செய்யப்பட்டாலும் பெண்கள் அதிக அளவில் வந்து கலந்து கொண்டனர்

இதில் மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்கள் கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் பயனுல்லதாக அமைந்துஇருந்தது அல்ஹம்துலில்லாஹ்