Wednesday 30 July 2014

புதுத்தெரு திடலில் நபிவழி பெருநாள் தொழுகை, முத்துப்பேட்டை மக்கள் புதுத்தெரு திடலில் திரண்டனர்








தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பெருநாள் தொழுகை புதுத்தெரு தவ்ஹித் திடலில் நடந்தது

முத்துப்பேட்டையில் பல பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடந்தாலும் நபிவழியில் பெருநாள் தொழுகை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் கிட்டதட்ட முழு முத்துப்பேட்டையும் புத்துதெரு திடலை நோக்கி வந்துவிட்டது

வருடா வருடம் ஏற்பாடுகளை விரிவுபடுத்திகொண்டே  போனாலும் அதுவும் போதாது என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாகிகொண்டே போவது முத்துப்பேட்டையில் ஒரு நல்ல மாற்றத்தை காட்டுகிரது

நாம் நடத்தும் திடலுக்கு அருகிலேயே உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில் காலையில் இருந்தே மைக்போட்டு மக்களை அழைத்தும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் திடலை நோக்கி வந்தது அவர்கள் நபிவழி தொழுகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டியது

இந்த வருடம் புத்துதெரு திடல் ஆரம்பமாகும் இடத்தில் [டிரான்ஸ்பாம் அருகில்] இமாம் இருக்கும் இடம் அமைக்கப்பட்டு திடல் முடியும் எல்லை வரை [ஏடிஎம் மிசின் வரை] மக்கள் திரண்டு இருந்தது மிக பெரிய மாநாடு போல காட்சியளித்தது

முத்துப்பேட்டை ஒரே கிளையாக ஒரே இடத்தில் தொழுகை நடந்த போது இருந்ததைவிட இப்போது இரண்டு கிளையாக இரண்டு இடத்தில் தொழுகை நடந்தபோதும் இரண்டு திடலும் நிரம்பிவழிந்தது அல்ஹம்துலில்லாஹ்

ரமலானில் கடசி பத்து நாட்கள் கடுமையான வெலை பளுவில் நிர்வாகிகள் இருந்தும் பெருநாள் தொழுகைக்கான திடல் ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்து இருந்தது மக்களுக்கு சிரமத்தை குறைத்தது

வரும் காலங்களில் இந்ததிடல் போதுமானதாக இருக்குமா என்பதே முத்துப்பேட்டை மக்களின் கவலையாக உள்ளது
அல்லாஹ் அந்ததேவையையும் நிறைவேற்றிதருவான் துவா செய்வோம்.