Sunday, 20 January 2013
ரிசானா நபீக் என்ற பெண்ணிர்க்கு சவுதிஅரேபியாவில் மரனதண்டனை கொடுத்தை வைத்து இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை விமர்சிக்கும் மூடர்களுக்கு மௌளவி ரஸ்மின் அவர்களின் விளக்கம்
ரிசானா நபீக்கும், வெளிநாடு செல்லும் பெண்களும். (Video)
வெளிநாட்டு வேலை வாய்பை நாடி சவுதி அரேபியாவுக்கு சென்ற இலங்கை மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் என்ற பெண்மணி வீட்டு எஜமானியின் குழந்தையை கொலை செய்தார் காரணத்தினால் கடந்த 09.01.2013 அன்று சவுதி அரேபியாவில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் தொடர்பில் உலகம் முழுவதும் பலத்த விமர்சனங்களும், இஸ்லாமிய மார்க்கத்தின் குற்றவியல் தண்டனை தொடர்பாகவும் வாதப் பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விதமாக பேசப்பட்ட உரை:
ரிஸானா நபீக்கும் வெளிநாடு செல்லும் பெண்களும் 02 by sltjvideos
Wednesday, 16 January 2013
தவ்ஹித்ஜமாத்தின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உத்திரவிட்டுருப்பதாக தவ்ஹித்ஜமாத்திற்க்கு மாவட்ட கலெக்டர் தகவல்
முத்துப்பேட்டையில் நிலவிவரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் உடனடியாக மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றகோரியும்.ஊர் முழுவதும் மேய்ந்து திறியும் பன்றிகளை அகற்றகோறியும் முத்துப்பேட்டை பேருராட்சிக்கு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது இதன் நகல் மாவட்ட ஆட்சியருக்க்கும் அனுப்பப்பட்டது
இந்த கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் பேரூராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார் அவர் உத்தரவிட்ட நகலையும் நமக்கு அனுப்பியுள்ளார்
இதன் பிறகும் பேரூராட்சி மெத்தனம் காட்டினால் முத்துப்பேட்டை காவல்துரை எதிர் கொண்டது போல மிகப்பெறிய போரட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். என செய்கிறார்கள் என பொருத்து இருந்து பார்ப்போம்
Monday, 14 January 2013
கொசுத்தொல்லையில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள்.கெமிக்கல் கொசுவர்த்தியை தவிர்ப்போம்! ஒரு கொசுவர்த்தி 100 சிகரட்டிர்க்கு சமம்
இன்று குறிப்பாக கிராமங்களிளும் நகரங்களிளும் இந்த பாழாய்ப் போன கொசுவை பற்றித் தான் பேச்சு. அன்றாட அரசியல் நிலவரங்கள் கூட அப்புறந்தான். எப்படி கொசுவிடமிருந்து தப்புவது என்பதே பெரிய பிரச்னையாக உள்ளது. நாமும் எத்தனையோ வழி முறைகளை செயல்படுத்தி இருப்போம். இந்தஉடலுக்கு கேடுவராத வழி முறைகளையும் பின்பற்றிப் பார்ப்போமே!
நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர் . அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால் , சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு , நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது ஒரு கொசுவர்த்தி 100 சிகரட் பிடிப்பதற்க்கு சமம் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட , வீட்டில் இருக்கும்
ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம் . இதனால் கொசுக்கள் அழிவதோடு , உடலும் ஆரோக்கியமாக இருக்கும் . அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போம்
தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் , வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது . எப்படியென்றால் தேங்காய் நார்கள் , வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு , வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது . எவ்வாறென்றால் , இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால் , அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும் . தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது .
ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து , மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி , அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து , சிறிது நேரம் கழித்து பாருங்கள் , ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது . இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா ? என்று கேட்கலாம் . இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது .
கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள் , சல்பர் . இந்த சல்பர் எங்கு இருந்தாலும் , கொசுக்கள் வெளியில் தான் இருக்கும் . கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது . ஆனால் , ஒரு பிரச்சனை என்னவென்றால் , கற்பூரத்தை காற்றில் வைத்தால் , அது உடனே கரைந்துவிடும் .
ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து , எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால் , கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது . இல்லையென்றால் , ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் , அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது .
கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த , கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும் . அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில்(Liquid Bottle) உள்ள காலி டப்பாவில் , கெரோசினை விட்டு , அதில் சிறிது கற்பூரத்தை விட்டு , மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும் . இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு , உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்
கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தவரையும் சிந்திக்க வைத்த அபுதாபிதவ்ஹித்ஜமாத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடு
சக்திவேல் முதலியார் என்பவர் இஸ்லாத்தை குறித்து விமர்சனம் செய்வதனை சில சகோதரர்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்நிலையில் அவரை நேரடியாக போய் சந்தித்து தூய இஸ்லாத்தை எடுத்துரைப்போம் என நாம் முடிவு செய்த அடிப்படையில் சென்ற சனிக்கிழமை அன்று அபுதாபியிலிருந்து 125 கிமீக்கு அப்பால் இருக்கும் ஸ்வேஹான் சென்று அவரை நேரடியாக சந்தித்தோம்.
தனக்கு இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்ற வெறி எல்லாம் கிடையாது என்றும் சில முஸ்லிம் சகோதரர்கள் எங்கள் இந்து கடவுள்களை மிகவும் கொச்சையாக விமர்சித்த காரணத்தினால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டதால் தான் அவ்வாறு விமர்சித்தேன் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவரது குடும்பத்தை கூட விட்டு வைக்காமல் சிலர் விமர்சித்து உள்ளனர், இதே இடத்தில் படிக்காத பாமரன் ஒருவன் இருந்திருந்தால் அவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருப்பான் அந்த அளவுக்கு தனது பிறப்பையும், தனது மனைவியையும் உங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் விமர்சித்துள்ளனர் என்று ஆதங்கப்பட்டார். இதன் விளைவுகள் தான் என்னையும் அசிங்கமான முறையில் கருத்திட வைத்து விட்டது. ஒருவர் அல்ல பலர் இப்படி கமெண்ட் செய்யும் போது ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இப்படி தான் இருப்பர் போல என்று தான் எண்ணியதாகவும் குறிப்பிட்டார்.
அவரது ஆதங்கம் முழுவதனையும் கேட்ட பின்னர் தூய இஸ்லாத்தை குறித்து அவருக்கும் நாம் எடுத்து சொன்னோம். நல்ல முறையில் செவி தாழ்த்தி கேட்டார், சில சந்தேகங்களையும் கேட்டார். தான் 2009 வரை வின்டிவி நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்தவன் என்றும், சகோ.பீஜேவின் உரைகளை நான் ரசித்து கேட்பேன் என்றும் குறிப்பிட்டார்.
நம்முடன் வந்தவர்களில் சகோதரர் லுக்மான் ராஜா இஸ்லாத்தை தழுவியவர் ஆகும். அவர் இந்து சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாவற்றை குறித்தும் “இஸ்லாம் தான் ஈருலக வெற்றிக்கு வழி” என்பதனை நான் புரிந்து கொண்டதால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் என்று கூறிய போது மிகவும் உன்னிப்பாக அவர் கவனித்தார்.
“இஸ்லாமிய சகோதரத்துவம்” என்னை வெகுவாக கவர்ந்துள்ளது என்று அந்நேரம் குறிப்பிட்ட சகோதரருக்கு திருமறை குர்ஆன் மொழியாக்கம், மாமனிதர் மற்றும் வருமுன் உரைத்த இஸ்லாம் ஆகிய நூற்களை வழங்கினோம். அத்துடன் அபுதாபி மண்டலம் நடத்தும் 9வது பிற மத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டிக்கு அழைப்பு கொடுத்தோம். தான் கட்டுரை எழுத முயற்சிப்பதாகவும் எங்களிடம் அவர் தெரிவித்தார்.
இறுதியாக விடைபெறும் நேரம், “இஸ்லாம் குறித்து என்னிடம் இருந்த கெட்ட எண்ணத்தினை தங்களின் வருகை மூலம் என்னிடமிருந்து மாற்றி விட்டு செல்கிறீர்கள்” என்று குறிப்பிட்டது நமக்கு மகிழ்வை தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் இவருக்கு நேர்வழியை காட்ட நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
Sunday, 13 January 2013
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக புக் வினியோகம்
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பிறமத சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் வழங்கப்பட்டது ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித் நூரில் தர்பியா
தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான தர்பியா 13.01.2013 ஞாயிறு காலை 10 மனிமுதல் 12 மனிவரை மஸ்ஜித் நூரில் நடைபெற்றது ஏராளமான மனவ மானவியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் கலந்து கொண்டவர்களுக்கு தாயி கட்டிநாநா அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)







