Monday, 10 November 2014

மஸ்ஜித்நூரில் ஹதீஸ் விளக்க வகுப்பு


திருவாரூர்மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.11.2014 ,08.11.2014  தினங்களில் மகரிபு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்ற தினம் ஒரு ஹதீஸ்  நிகழ்ச்சி

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு


திருவாரூர்மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.11.2014 ,10.11.2014  தினங்களில் காலை சுபுஹு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் தர்ஜிமா நிகழ்ச்சி

Wednesday, 5 November 2014

குளம் குட்டைகளை சரிசெய்து நீர் ஆதாரத்தை பெருக்காவிட்டால் மிகபெரிய போராட்டம் பேரூராட்சியை வற்புறுத்துவது என தவ்ஹித்ஜமாத் தீர்மானம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 ஆலோசனைகூட்டம் 05.11.2014 காலை மஸ்ஜித்நூரில் கிளைதலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இதில் முத்துப்பேட்டையின் அடிப்படை பிரச்சனையான நீர் ஆதாரத்தை பெருக்குவது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது

முத்துப்பேட்டைக்கு நீர்நிலை ஆதாரமான குளம் குட்டைகளை தூர்வாருவது 

அந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதைகளை சரிசெய்வது

ஆற்று தண்ணீரை கொண்டு குளங்களை நிறப்புவது 

குளங்களை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துவதை தடுத்து மாற்று ஏற்பாடு செய்வது

போன்ற கோரிக்கைகளை செய்ய பேரூராட்சியை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது சி கிரேடைவிட மோசமான சுகாதாரத்தில் வாழும் முத்துப்பேட்டை மக்கள் ஏ கிரேடு வரிசெழுத்துகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அமசம்

தவ்ஹித்ஜமாத் கடந்த ஆகஸ்ட் மாதம் குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள குளருபடிகளை சரிசெய்ய வலியுறுத்து ஒரு சில ஆலோசனைகளை கூறி கோரிக்கை வைத்தது அது உடனே சரிசெய்யப்பட்டது 

அதே போல இதையும் சரிசெய்யாவிட்டால் மாநில தலைமையின் ஆலோசனையின் படி மிகபெரிய போராட்டத்தை தவ்ஹித்ஜமாத் நடத்தும் இன்ஷா அல்லாஹ்

குடிதண்ணீர் குளருபடியை சரிசெய்ய மனுகொடுக்க சென்ற போது

மஸ்ஜித்நூரில் முஹர்ரம் நோன்பு இப்தார் நிகழ்ச்சி

பிறை 9ம்நாள் 03.11.2014

பிறை 9ம்நாள் 03.11.2014


பிறை 10ம் நாள் 04.11.2014

பிறை 10ம்நாள் 04.11.2014
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக முஹர்ரம் நோன்பு 9 மற்றும் 10 பிறைகளில் நோன்புபிடித்தவர்களுக்கு மஸ்ஜித்நூரில் 03.11.2014 மற்றும் 04.11.2014 ஆகிய தினங்களில் இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது

முத்துப்பேட்டையில் சுமார் 6 வருடமாக சுன்னத்தான நோன்புவைப்பதை ஆர்வபடுத்தும் விதமாக தவ்ஹித்ஜமாத் இதை செய்துவருகிரது இதன் மூலம் மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்பட்டு வருகிரது

மக்கள் இதை வரவேற்க்கிரார்கள் ரமலானில் நோன்பு திறக்க அனைத்து பள்ளிவாசல்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் சுன்னத்தான நோன்புகளுக்கு ஏதும் செய்வதில்லை இப்போது தவ்ஹித்ஜமாத் இந்த ஏற்பாடுகளை வருடா வருடம் செய்வதன் மூலம் நோன்பு நோற்க்கும் ஆர்வம் அதிகமாகிரது என இப்தாருக்கு வந்த ஒரு சகோதரர் கூறினார் அல்ஹம்துலில்லாஹ்

முஹரம் பிறை 9,10 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்புகஞ்சி வினியோகம்

பிறை 9ம்நாள் 03.11.2014

பிறை 9ம்நாள் 03.11.2014

பிறை 10ம்நாள் 04.11.2014

பிறை 10ம்நாள் 04.11.2014
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித்நூரில் முஹர்ரம் நோன்பாளிகளுக்கு பிறை 9 மற்றும் பிறை 10ல் 03.11.2014,மற்றும் 04.11.2014 இரண்டுநாட்கள் நோன்புகஞ்சி வினியோகம் செய்யப்பட்டது

இது முத்துப்பேட்டை மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது
நம் மர்கசில் வருடா வருடம் சுன்னத்தான நோன்பு வைப்பதை ஆர்வபடுத்தும் விதமாக இதை செய்துவருகிறோம்

இதேபோல மற்ற மற்ற பள்ளிவாசல்களிலும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் இதன்மூலம் நல்ல அமல்கள் செய்பவர்களின் என்னிக்கை அதிகரிக்க வேண்டும்

Thursday, 30 October 2014

முத்துப்பேட்டை முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்றது 
இன்று வாரசந்தை என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் முத்துப்பேட்டை சந்தைக்கு வருவார்கள் 
இவர்கள் அனைவருக்கும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சென்றடையும் நோக்கில் இன்று முத்துப்பேட்டை சந்தைமுழுவதும் மற்றும் முத்துப்பேட்டை கடைவீதி ,பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது



மூடநம்பிக்கை ஒழிப்பு கருப்பு கயிறு அகற்றம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மூடநம்பிக்கையில் இடுப்பில் கட்டி இருந்த கருப்பு கயிறு அகற்றப்பட்டு அவருக்கு தாவா செய்யப்பட்டது