Friday, 13 September 2013

வினாயகர் ஊர்வலம் சம்மந்தமான பீஸ்மீட் அழைப்பு குறித்து ஆலோசனை

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 வின் ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் 11.09.2013 அன்று மஸ்ஜித் நூரில் நடைபெற்றது

இதில் வினாயகர் ஊர்வலம் சம்மந்தமாக நடக்க இருக்கும் பீஸ் மீட்டில் கலந்து கொண்டு என்ன பேசுவது என்பது சம்மந்தமாகவும் விரைவில் தொடங்க இருக்கும் பெண்கள் மதரஷா சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தி முடிவுசெய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 11 September 2013

முத்துப்பேட்டை சுற்றுலாதலமாக மாற்றப்படும் முதல்வர் அறிவிப்பு




முத்துப்பேட்டை இயற்க்கையாகவே ஒரு சுற்றுலாதலம் போல அமைந்துள்ள பகுதிதான் ஏன் என்றால் கடலும் கடல் சார்ந்த சதுப்புநில காடுகளும் அமைந்துள்ள பகுதி முத்துப்பேட்டை

.உலகிலேயே ஒரு சில நாடுகளில்தான் இப்படி அமந்துள்ளது ஆனால் மற்றநாடுகளில் எல்லாம் அது எப்பவோ சுற்றுலாதலமாக மாறிவிட்டது.முத்துப்பேட்டை மட்டும்தான் காலகாலமாக அப்படியே உள்ளது

இந்த பகுதியை லகூன் என்று அழைப்பார்கள் .முத்துப்பேட்டையும் அதன் சுற்றுபுர பகுதியிலும் முஸ்லிம்களும் தலித்கலும் அதிகமாக வசிப்பதால் இந்த பகுதி காலாகலமாக பின்தங்கிய பகுதியாகவே இருந்து வருகிரது

இங்கி குளிர்காலங்களில் ஆஸ்திரேலியா போன்ற நீண்ட தொலைவில் உள்ள நாடுகளில் இருந்தல்லாம் பறவைகள் வந்து இங்கு தங்கி  இனப்பெருக்கம் செய்துவிட்டு போகும் என்பது கூடுதல் தகவலாகும்

இந்த சூழ்நிலையில் முத்துப்பேட்டையை சுற்றுலாதலமாக மாற்ற சுமார் 2 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு முத்துப்பேட்டை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இது வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் உடனடியாக செயல் வடிவம் கொடுத்து நடைமுறைக்கு கொண்டுவந்தால் நல்லது அதோடு அகல ரயில்பாதையையும் அமைத்து முத்துப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் ஒட்டு மொத்த மக்களின் விருப்பம்

இப்போதைக்கு முதல் கட்டமாக சுற்றுலாதலமாக்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் முத்துப்பேட்டை நகர தவ்ஹித்ஜமாத் கிளை தெறிவித்து கொள்கிறது

Tuesday, 10 September 2013

சகோதரர் உவைசியிடம் முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் படிப்பார்களா?

பாராளுமன்றத்தில் உவைசி அவர்கள் சிங்கம் போல் கர்ஜித்த விதமும் சொல்ல வந்த விசயத்தை அனைவருக்கும் புறியும் வன்னம் எளிமையாகவும் துனிச்சலாகவும் அதே நேரம் தன் வாதத்தை இடையிலேயே நிறுத்திவிடாமல் இருக்க அதை ஒன்றோடு ஒன்று  சேர்த்து கோர்வையாக பேச்சை நகர்த்திய விதமும் நம்மையல்லாம் ஆச்சரியப்படவைத்தது அல்ஹம்துலில்லாஹ்

ஹைதராபாத்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவராக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையை உலகிர்க்கே வெளிச்சம் போட்டு காட்டி ஒரு சமுதாய தலைவர் என்பதை நிறுபித்துள்ளார்

அவர் பேசிய பேச்சில் உள்ள கருத்துக்களை பார்க்கும் போது முஸ்லிம்களை எவ்வளவு காலமாக ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்பதும் நாம் எப்படி ஏமாந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நாமே உனராமல் வாழ்ந்து கொண்டு இருப்பதும் வேதனையாக உள்ளது

சுதந்திர இந்தியாவில் எத்தனையோ முஸ்லிம் பரளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை இந்த நாடு பார்த்துள்ளது அவர்களுக்கள்ளாம் அவர்கள் எந்த கூட்டனியில் இருந்து ஜெயித்தார்களோ அந்த கூட்டனி தலைவரை புகழ்பாடதான் நேரம் இருந்ததே தவிர முஸ்லிம்களை பற்றி இந்த அளவுக்கு புள்ளிவிபரத்தோடு பேசி நாம் கேட்டதில்லை

கல்கத்தா கவர்னர் மாளிகை வக்பு இடத்தில்தான் உள்ளது அதற்க்கு மாத வாடகை வெரும் 159 ரூபாய்

அம்பானியின் மாளிகை எதிம்கானா வக்பு இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது


டெல்லியில் ஏக்கர்கனக்கான வக்பு நிலங்களை அனுபவித்து வருபவர்கள் [அரசாங்கம் உள்பட] ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் வாடகை கொடுப்பதும் இவர் சொல்லிதான் முஸ்லிம்களுக்கே தெறியவந்துள்ளது

உலகத்திலேயே இதுதான் பெறிய மோசடியாக இருக்கும்.
இவரின் இந்தபனி தொய்வில்லாமல் நடக்கவும் இவரை பார்த்து மற்றவர்களும் கூட்டனிகட்சிக்கு ஜால்ரா போடும் வேலைகளை விட்டுவிட்டு சமுதாய பனியாற்றவேண்டும்
சமுதாய பிரதிநிதி என அடையாளம்காட்டி சமுதாய மக்களின் ஓட்டை வாங்கி வெற்றி பெற்ற நாம் சமுதயத்திற்க்காக குரல் கொடுக்கதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்


Sunday, 8 September 2013

பங்களாவாசல் அருகே வாராந்திர பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.09.2013 அன்று டாக்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயன் நடைபெற்றது

அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

எழுச்சியுடன் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.09.2013 அன்று மஸ்ஜித் நூரில் செயல்வீரர்கள் கூட்டம் கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் மிகுந்த எழுச்சியுடம் நடைபெற்றது

அதில் தெருமுனை பிரச்சரத்தை தீவிரப்படுத்துவது மற்ரும் மாற்றுமத தாவாவை அதிகமாக செய்வது மேலும் வருகிர பிப்ரவரி மாதம் முத்துப்பேட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் அனி பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்

அன்னாச்சி தலைமையில்தான் இஸ்லாமிய ஆட்சியோ?

நாமல்லாம் முஸ்லிம்கள் நாம் காபிர் ஆட்சியின்கீழ் இருப்பதா? இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி ஏற்படுத்துவதுதான் எங்கள் லட்சியம்

இதோ இதற்க்காகதான் அமைப்பு ஆரம்பித்துள்ளோம் என இவர்கள் அளந்துவிட்ட கற்பனையை நம்பி இது சாத்தியமா இப்படிதான் மார்க்கத்தில் சொல்லியுள்ளதா என்றல்லாம் சிந்திக்காமல் இவர்கள் பின்னால் போன அப்பாவி இளைஞர்கள் பலபேர்.

 ஆனால் இன்று என்ன நிலை இவர்கள் கட்சியின் மாநில செயளாளர் யாரோ அன்னாச்சியாம் இந்த  அன்னாச்சி தலைமையில்தான் இஸ்லாமிய அரசாங்கம் அமையுமோ?

அது கூட பரவாயில்லை அஷ்ட்ட லட்சுமிகலின் ஒரே வடிவமாம் ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு ஆண்டுவிழாவாம் இதில் இஸ்லாமிய ஆட்சி அமைப்பதாக மூளை சலவை செய்து ஆள்பிடித்த அமைப்பு கலந்து கொள்கிரதாம்.அப்துல் லத்தீப், அப்துஸ்சமதல்லாம் உங்களிடம் பிச்சை எடுக்கனும் போங்க!! நல்லா வருவீங்க!! நம்பி போனவங்க நல்லா யோசிங்க!!

Friday, 6 September 2013

மஞ்சள் குங்கும ஆராத்தி எடுத்து இஸ்லாமியர்களை கேவலப்படுத்தும் SDPI போராளிகள்!!!

மஜ்சள் குங்குமம் போட்டு ஆராத்தி எடுத்து தனது கொள்கை பயனத்தை தொடங்கும் இஸ்லாமியா ஆட்சி அமைக்க போகும் கொள்கை குன்றுகள் வெளங்கினமாதிறிதான்!!!!!!