Wednesday 11 September 2013

முத்துப்பேட்டை சுற்றுலாதலமாக மாற்றப்படும் முதல்வர் அறிவிப்பு




முத்துப்பேட்டை இயற்க்கையாகவே ஒரு சுற்றுலாதலம் போல அமைந்துள்ள பகுதிதான் ஏன் என்றால் கடலும் கடல் சார்ந்த சதுப்புநில காடுகளும் அமைந்துள்ள பகுதி முத்துப்பேட்டை

.உலகிலேயே ஒரு சில நாடுகளில்தான் இப்படி அமந்துள்ளது ஆனால் மற்றநாடுகளில் எல்லாம் அது எப்பவோ சுற்றுலாதலமாக மாறிவிட்டது.முத்துப்பேட்டை மட்டும்தான் காலகாலமாக அப்படியே உள்ளது

இந்த பகுதியை லகூன் என்று அழைப்பார்கள் .முத்துப்பேட்டையும் அதன் சுற்றுபுர பகுதியிலும் முஸ்லிம்களும் தலித்கலும் அதிகமாக வசிப்பதால் இந்த பகுதி காலாகலமாக பின்தங்கிய பகுதியாகவே இருந்து வருகிரது

இங்கி குளிர்காலங்களில் ஆஸ்திரேலியா போன்ற நீண்ட தொலைவில் உள்ள நாடுகளில் இருந்தல்லாம் பறவைகள் வந்து இங்கு தங்கி  இனப்பெருக்கம் செய்துவிட்டு போகும் என்பது கூடுதல் தகவலாகும்

இந்த சூழ்நிலையில் முத்துப்பேட்டையை சுற்றுலாதலமாக மாற்ற சுமார் 2 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு முத்துப்பேட்டை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இது வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் உடனடியாக செயல் வடிவம் கொடுத்து நடைமுறைக்கு கொண்டுவந்தால் நல்லது அதோடு அகல ரயில்பாதையையும் அமைத்து முத்துப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் ஒட்டு மொத்த மக்களின் விருப்பம்

இப்போதைக்கு முதல் கட்டமாக சுற்றுலாதலமாக்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் முத்துப்பேட்டை நகர தவ்ஹித்ஜமாத் கிளை தெறிவித்து கொள்கிறது