Tuesday 10 September 2013

சகோதரர் உவைசியிடம் முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் படிப்பார்களா?

பாராளுமன்றத்தில் உவைசி அவர்கள் சிங்கம் போல் கர்ஜித்த விதமும் சொல்ல வந்த விசயத்தை அனைவருக்கும் புறியும் வன்னம் எளிமையாகவும் துனிச்சலாகவும் அதே நேரம் தன் வாதத்தை இடையிலேயே நிறுத்திவிடாமல் இருக்க அதை ஒன்றோடு ஒன்று  சேர்த்து கோர்வையாக பேச்சை நகர்த்திய விதமும் நம்மையல்லாம் ஆச்சரியப்படவைத்தது அல்ஹம்துலில்லாஹ்

ஹைதராபாத்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவராக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையை உலகிர்க்கே வெளிச்சம் போட்டு காட்டி ஒரு சமுதாய தலைவர் என்பதை நிறுபித்துள்ளார்

அவர் பேசிய பேச்சில் உள்ள கருத்துக்களை பார்க்கும் போது முஸ்லிம்களை எவ்வளவு காலமாக ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்பதும் நாம் எப்படி ஏமாந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நாமே உனராமல் வாழ்ந்து கொண்டு இருப்பதும் வேதனையாக உள்ளது

சுதந்திர இந்தியாவில் எத்தனையோ முஸ்லிம் பரளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை இந்த நாடு பார்த்துள்ளது அவர்களுக்கள்ளாம் அவர்கள் எந்த கூட்டனியில் இருந்து ஜெயித்தார்களோ அந்த கூட்டனி தலைவரை புகழ்பாடதான் நேரம் இருந்ததே தவிர முஸ்லிம்களை பற்றி இந்த அளவுக்கு புள்ளிவிபரத்தோடு பேசி நாம் கேட்டதில்லை

கல்கத்தா கவர்னர் மாளிகை வக்பு இடத்தில்தான் உள்ளது அதற்க்கு மாத வாடகை வெரும் 159 ரூபாய்

அம்பானியின் மாளிகை எதிம்கானா வக்பு இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது


டெல்லியில் ஏக்கர்கனக்கான வக்பு நிலங்களை அனுபவித்து வருபவர்கள் [அரசாங்கம் உள்பட] ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் வாடகை கொடுப்பதும் இவர் சொல்லிதான் முஸ்லிம்களுக்கே தெறியவந்துள்ளது

உலகத்திலேயே இதுதான் பெறிய மோசடியாக இருக்கும்.
இவரின் இந்தபனி தொய்வில்லாமல் நடக்கவும் இவரை பார்த்து மற்றவர்களும் கூட்டனிகட்சிக்கு ஜால்ரா போடும் வேலைகளை விட்டுவிட்டு சமுதாய பனியாற்றவேண்டும்
சமுதாய பிரதிநிதி என அடையாளம்காட்டி சமுதாய மக்களின் ஓட்டை வாங்கி வெற்றி பெற்ற நாம் சமுதயத்திற்க்காக குரல் கொடுக்கதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்