Friday 21 March 2014

இஸ்லாமியகட்சி மாயையும் முடிவுக்குவந்த பித்தலாட்டமும் ஓர் சிறப்பு பார்வை



ஒரு முஸ்லிம் இஸ்லாமிய கட்சிக்குதான் ஓட்டுபோடவேண்டும் நாங்கள் இஸ்லாமியகட்சி எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என முஸ்லிம்கள் மத்தியில் படம்காட்டி வந்தது  போலியான வாதம்  என்பது இப்போது அம்பலமாகி உள்ளது
 வினாயகர் சதுர்த்தி சிறப்பாக நடக்க வாழ்த்தி போஸ்ட்டர் போட்டபோதும் அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்க்கு வாழ்த்து தெறிவித்தபோதும் ஏனப்பா இஸ்லாமியகட்சியாக இருந்துகொண்டு இந்த வேலை செய்கிறீர்கள் என கேட்டபோது அவர்கள் சொன்ன பதில்

இது இஸ்லாமிய கட்சி கிடையாது. உங்களிடம் யார் இதை இஸ்லாமியகட்சி என்று சொன்னது? என்று சொன்னது மட்டுமில்லாமல் தனது கட்சியின் மாநில பொருப்பு முதல் மாவட்ட பொருப்புவரை கந்தசாமியையும் முனுசாமியையும் போட்டு இதுவும் அதிமுக திமுக போல ஒரு கட்சிதான் என்பதை நிறுபித்தும் காட்டியுள்ளார்கள்.

தேர்தல் நேரத்தில் மட்டும் முஸ்லிம்களே இது இஸ்லாமியர்களின் கட்சி இந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என சொல்லி முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபன்னி வருகிறார்கள் இது கடைந்தெடுத்த ஆயோக்கியதனம் என்பது இப்போது அம்பலமாகி வருகிரது

ராமநாதபுரம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இங்கிருந்து ஒரு முஸ்லிம்வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் இந்த தொகுதியில் முதன்முதலில் அதிமுக அன்வர்ராஜா என்ற முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக அறிவித்தது

இதை தொடர்ந்து திமுகவம் ஜலீல் என்ற முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக அறிவித்தது இரண்டு முஸ்லிம் ஒரே தொகுதியில் போட்டியிட்டு முஸ்லிம் ஓட்டுகளை பிரிப்பதால் நாம் இந்து ஓட்டுகளை மொத்தமாக வாங்கி ஜெயித்துவிடலாம் என்ற ஆசையில் [பஞ்சாயத்து தேர்தலில் நடந்ததுபோல] பஜகவும் இங்கே களம் இறங்குகிரது

தமிழ்நாட்டை பொருத்தவரை அதிமுக திமுக இரண்டில் ஒன்றுக்குதான் வெற்றிவாய்ப்பு அதிகம் இதில் எந்த கட்சிக்கு முஸ்லிம் ஓட்டு கூடுதலாக கிடைக்கிரதோ அவர்கள் வெற்றிபெருவார்கள்

இப்படி உள்ள சூழ்நிலையில் வெற்றிவாய்ப்பு சிறிதும் இல்லாத டெப்பாசிட்டைகூட தக்கவைத்துகொள்ள இயலாத ஏபிசிடிகள் இந்த தொகுதியில் போட்டியிட்டு எப்படியாவது இரண்டாயிரம் முஸ்லிம் ஓட்டுகளையாவது பிரித்து பிஜெபியை வெற்ரிபெற வைத்துவிட வேண்டும் என களம் இறங்கி உள்ளார்கள்.

இவர்கள் [ஏபிசிடிக்கள்] உண்மையிலேயே முஸ்லிம்கள் நலனில் கொஞ்சமாவது கரிசனம் உள்ளவர்களாக இருந்தால் இந்த முடிவை எடுத்து இருப்பர்களா? இந்த தொகுதி அல்லாமல் முஸ்லிம்கள் போட்டியிடாத முஸ்லிம்கள் அதிகம் வசிக்ககூடிய திருச்சி போன்ற தொகுதியில் போட்டியிட்டு தங்கள் பலத்தை!! காட்டியிருக்கலாமே?

அல்லது விநாயகருக்கு காவடி எடுத்தது கோயில் கும்பாபிசேகத்திற்க்கு போஸ்ட்டர் போட்டு நாங்கள் முஸ்லிம்கட்சியள்ள என நிறுபித்தது வேலை செய்கிரதா என காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சோதனை செய்து இருக்கலாமே?

ராமநாதபுரத்தில் போட்டியிட்டு ஓட்டுகளை பிறித்து அதுவும் ஆறு முனை போட்டி நடைபெரும் இந்த தேர்தலில் ஆயிரம் ஓட்டுகூட வெற்றி தோல்வியை நிர்னயிக்கலாம் இந்த சூழ்நிலையில் இப்படி துரோகம் செய்யலாமா?

ஏபிசிடிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடி பிரதமராக வழி ஏற்படுத்திகொடுக்க போடும் ஓட்டு என்பதை முஸ்லிம்கள் நினைவில் கொள்ளவேண்டும்

இந்த ஏபிசிடிக்களின் துரோகம் இதோடு முடிந்ததா கிடையாது கேராளாவில் முஸ்லிம் லீக் [ முஸ்லிம்கட்சி] வெற்றி பெறும் என எதிர்பார்ப்புள்ள அனைத்து தொகுதியிலும் இந்த ஏபிசிடிக்கள் போட்டி போடுகிறார்கள் எப்படியாவது ஓட்டுகளை பிரித்து முஸ்லிம் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை தவிற வேறுகாரனம் இருக்க இயாலாது.

முஸ்லிம்களே ஒற்றுமை வேண்டாமா? முஸ்லிம் கட்சியை விட்டு விட்டு வேறு ஓட்டு போடுவதா? என படம் காட்டியதல்லாம் இப்போது வெளிச்சத்திற்க்கு வந்துவிட்டது.அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் போதுமானவன்