Thursday 14 February 2013

இஸ்லாமிய சட்டத்தால் உயிர்பிழைத்த இந்தியர்கள்


கள்ளச்சாரய விற்பனையில் ஏற்பட்ட தகராறில், பாகிஸ்தானியர், கொல்லப்பட்ட வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த, 17 பேர், மரண தண்டனைவிதித்து பின் கொள்ளப்பட்ட பாகிஸ்தானியரின் குடும்பத்தினரின் பேச்சுவார்த்தை மூலமாக 5கோடியை நஷ்டஈடாக கொடுத்து, தாயகம் திரும்பியுள்ளனர். (பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மரண தண்டனையை நீக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு).
ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில், அல் அஜா தொழிற்பேட்டையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். அங்கு, 2009ம் ஆண்டு, ஜனவரியில், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக எழுந்த தகராறில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மிர்சா நாசிர்கான் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.இந்த கொலை தொடர்பாக, இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, 17 பேருக்கும், அங்குள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது குறித்து, மத்திய அரசின் உத்தரவின்படி, இந்திய தூதரகம் தலையிட்டு, தனியார் சட்ட ஆலோசனை மையத்தின் உதவியை நாடியது. கொலையானவரின் குடும்பத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின், 5 கோடி ரூபாய் நஷ்டஈடு பெற்று விடுவிப்பதாக ஏற்றனர்.
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திர மானவனுக்காக (கொலை செய்த) சுதந்திர மானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது . (அல்குர்ஆன் 2-178)
இதை அடுத்து, அத்தொகை வழங்கப்பட்டதும், மரண தண்டனை இரண்டாண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே சிறையில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து விட்டதால், அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கை துவங்கியது.இந்நேரத்தில், சம்பவத்தின்போது, காயமடைந்தவர்கள், "எங்களுக்கு, 2.19 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்' என, நீதிமன்றத்தை அணுகினர்.மீண்டும், இந்திய தூதரகம் தலையிட்டு, 1.5 கோடி ரூபாய் வழங்க முடிவானது.

அவர்களுக்கான நிதியுதவி மற்றும் நீதிமன்ற செலவு ஆகியவற்றை, அங்குள்ள தொழிபதிபர் எஸ்.பி.,சிங் ஏற்றுக் கொண்டார். இதை அடுத்து, 17 இந்தியர்களும் சிறையில் இருந்து நேற்று முன்தினம்(11-2-2013), விடுவிக்கப்பட்டு, நேற்று அதிகாலை விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்றடைந்தனர்.

இந்த அடிப்படையில் சமிபத்தில் நடைபெற்ற இலங்கை பெண் மரண தண்டனையிலும் பொறுந்தும். சவுதியில் குழந்தையை இழந்தவர்கள் மன்னித்திருந்தால், அப்பெண் அவர் நாட்டிற்கு சென்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் மன்னிக்கவில்லை என்பதே உன்மை. இவர்கள் மன்னித்து நஷ்டஈடு பெற்றதால் உயிர்தப்பினர்.

நன்றி டிஎன்டிஜெ.காம். திருவாரூர்