Wednesday, 29 January 2014

சிறை செல்லும் போராட்டம் அனைத்து டிவி அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில் பார்க்க

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் அனைத்து பத்திரிக்கை செய்திகள் அனைத்து டிவி செய்திகள் அறிய புகைப்படங்கள் அனைத்தையும் தொகுத்து தரப்பட்டுள்ளது

அனைத்தையும் துபாயில் இருந்து தொகுத்து தந்த முத்துப்பேட்டை சகோதரர் தீன் அவர்களுக்கு நன்றியை தெறிவித்துகொள்கிறோம்


tntj tv by dm_50731f4f93d49


sun tv by dm_50731f4f93d49


TV 2 by dm_50731f4f93d49


TV 3 by dm_50731f4f93d49


MOON TV by dm_50731f4f93d49

Tuesday, 28 January 2014

தமிழகத்தை புரட்டிபோட்ட ஜனவரி 28 போராட்டம் ஒரு பார்வை





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழகமே என்று சொல்வதைவிட ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்த ஒரு போராட்டம் இந்த சிறை நிறப்பும் போராட்டம் என்றால் அது மிகையல்ல

லட்சக்கனக்கில் மக்கள் கூடிய இந்த கூட்டத்தில் எந்த தலைவருக்கும் புகழாரம் கிடையாது எந்த அரசியல் கட்சிக்கும் ஜால்ரா கிடையாது எதற்க்காக மக்களை அழைத்தோமோ எதற்க்காக மக்கள் நம்மை நம்பி வந்தார்களோ அதை மட்டுமே பிரதானமாக கொண்டு நடைபெற்ற கூட்டம்

இட ஒதுக்கீடு கொடுத்தால் சிந்தாமல் சிதராமல் ஒட்டு மொத்தமாக ஓட்டுகளை அந்த கட்சிக்கு போடவும் தெறியும்!! அப்படி கொடுக்காமல் ஏமாற்றினால் அந்த கட்சிக்கு ஒரு ஓட்டுகூட போடவிடாமல் துடைத்து எறியவும் தெறியும் - - - சென்னையில் பிஜெ

அடங்கி போய் அடங்கிபோய் உரிமைகளை இழந்த சமுதாயத்திற்க்கு இப்போது எப்படி அடக்குவது அநியாயத்திற்க்கு எதிராக எப்படி ஆர்பரித்து எழுவது அநியாயத்தை எப்படி காலில்போட்டு மிதிப்பது என்பது நன்றாக தெரியும் இனியும் ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போவது நீங்கள்தான் என்பதை நாட்டுக்கு சொல்ல கூடியதுதான் இந்த கூட்டம் ஜாக்கிரதை--------திருச்சியில் அல்தாபி

லட்சோபலட்சம் மக்கள்கூடி உரிமைக்காகா ஆர்பரிக்கும் இந்த கூட்டம் முடிவு அல்ல இதுதான் ஆரம்பம் இட ஒதுக்கீடு கொடுத்தால் ஓட்டு இல்லாவிட்டால் அடுத்து சட்டசபையை முற்றுகை இடுவோம் பாராளுமன்றத்தை முற்றுகைஇடுவோம் ரானுவமே தடுத்தாலும் பயப்பட மாட்டோம்-----கோவையில் ரஹ்மத்துல்லா

ஆளும்கட்சியாக அதிகாரத்தில் உள்ளவர்கள் போட வேண்டியது அரசு ஆனைதானே அல்லாமல் அனையம் அல்ல இட ஒதுக்கீடு அல்லாமல் வேறு எது செய்தும் எங்கள் சமுதாய ஓட்டை வாங்க இயலாது என்பதை அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்க திரண்டுவந்ததுதான் இந்த லட்சகனக்கான மக்கள் கூட்டம்------ நெல்லையில் சம்சுலுஹா

இன்னும் தமிழகம் அல்லாமல் காரைக்கால்,பாண்டிச்சேரி,பம்பாய் போன்ற இடங்களிலும்  முஸ்லிம்களின் ஜீவாதார உரிமையை வென்றெடுக்க மக்கள் திரண்டுவந்தனர்

இனியும் காலம் தாழ்த்தாமல் எந்த கட்சி இட ஒதுக்கீடு கொடுத்து எந்த சிலவும் இல்லாமல் ஒட்டு மொத்த சமுதாய ஓட்டுகளையும் அள்ளிசொல்ல போகிரது என பார்ப்போம்




Monday, 27 January 2014

நாளை நடக்க இருக்கும் போராட்டத்திற்க்காக ஆயிரம்பேருக்கு உனவு தயாரிக்கும் பனி மஸ்ஜித்நூரில் நடந்துவருகிரது






முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமையான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க நாளை திருச்சியை நோக்கி இன்ஷா அல்லாஹ்

நாளை போராட்டத்திற்க்கு வேண்டிய ஆயத்த பனிகளை தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள்

ஆயிரம் நபர்களுக்கு காலை மற்றும் பகல் உணவு மஸ்ஜித்நூரில் தயார் செய்யும் வேலைகள் மும்முரமாக நடந்துவருகிரது ஒய்வு உறக்கம் இல்லாமல் பனியாற்றும் இவர்களுக்காக துவா செய்வோம்

Saturday, 25 January 2014

இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு தேவைஇல்லையாம்!! அரை வேக்காடுகளுக்கு பதில்

சம்சுதீன் காசிமி எப்போதுமே காமெடி பன்னுகிரவர்தான் நாம் பேசுவதை கேட்கும் மக்கள்  நம்மை பற்றி என்னெ நினைப்பான் என்றல்லாம் கவலைபட மாட்டார்

சில பேர் தான் பேசியதை சில வருடம் கழித்து மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து மறுப்பார்கள் ஆனால் காஷிமி கொஞ்சம் கூட வெக்கப்படாமல் அடுத்த கனமே நான் பேசவில்லை என்பார்

சில வருடங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு வழங்குவதற்க்கான கமிஷன் அமைத்ததற்க்காக அப்போதைய முதல்வரை சந்திக்க பிஜெ, காஷிமி, உள்பட பல பேர் சென்றார்கள்

சந்தித்துவிட்டு திரும்பும் போது பத்திரிக்கையாளரிடம் வாய்கிழிய அம்மா கொடுத்தது சமுதாயத்திற்க்கு தேவையான ஒன்று நாங்கள் திருப்தி அடைகிறோம் என இவர்தான் மைக் முன்னே நின்று பேசினார்

அன்று இரவே தமிழன் டிவியில் தமுமுக நடத்தும் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு இவரை கூப்பிட்டு பிஜேயை எதிர்த்து எதாவது பேசுங்கள் என்றதும் அந்த அறிக்கை குப்பை என்றார்

உடனே இவர் டிவியில் பேசிய வீடியோ கிளிப்பை எடுத்து தவ்ஹித்ஜமாத் தரப்பில் போட்டு கேள்வி கேட்டதும் தலையில் போட்ட முக்காடை எடுத்து முகத்தை மூடிகொண்டு போய்விட்டார்

இந்த சூரர்தான் இப்போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை ஏற்கனவே கொடுத்த 3.5 இட ஒதுக்கீட்டால் பலனில்லை என்று அறிவுக்கு சம்மந்தம் இல்லாமல் உளரியுள்ளார்

பலன் இருந்ததா இல்லையா ? என்பதை புள்ளி விபரங்களோடு விவாதிக்க இவர் தயாரா? இதிலேயும் இவர் காமெடி பீஸ்தான் என்பதையும் அவரே ஒத்து கொள்கிரார்

 //ஏன் இட ஒதுக்கீடு பலனில்லை என்றால் அதை பூர்த்தி செய்ய படித்த மானவர்கள் நம்மிடம் இல்லை//

அந்த படித்த மானவர்களை உறுவாக்கதான் இட ஒதுக்கீடு என்ற எல்கேஜி பாடம்கூட தெரியாத கூமுட்டையாக இருக்கிறார்

இதில் வேடிக்கை என்ன என்றால் இட ஒதுக்கீட்டுக்கு நன்றி தெறிவித்தவர்கள், இட ஒதுக்கீட்டுக்குதான் இந்த கூட்டனி!!!! என்று ஜாலம் காட்டுபவர்களும் சேர்ந்துகொண்டு காஷ்மியை தூக்கி பிடிப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை


இவருக்கு சோறு போட கனக்கு இதுவரை காட்டாத அழகிய கடன் அரக்கட்டளை என்று  பனம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் ஒரு அரக்கட்டளை உள்ளது இதனால்இவருக்கு இவர் பிள்ளைக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை

ஆனால் சமுதாயம் அப்படியா உள்ளது? ஊரை அடித்து பாக்கெட்டில் போடாமல் உழைத்து வாழ்பவனுக்குதான் இட ஒதுக்கீட்டின் அவசியம் புறியும்

இப்படி பட்ட சமுதாய துரோகிக்கு நிதி கொடுத்து வளர்த்து விடுபவர்களும் சமுதாய துரோகிதான்

இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வேண்டாம் என காவியை போல கூக்குரலிடும் இவந்தான் உண்மையான சமுதாய துரோகி


Sunday, 19 January 2014

ஜனவரி 28 போராட்ட டிஜிட்டல் போர்டு முத்துப்பேட்டை முழுவதும் வைக்கப்பட்டது



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.01.2014 அன்று ஜனவரி 28 போராட்ட விளம்பர பிளக்ஸ் போர்டு முத்துப்பேட்டை முழுவதும் 15 இடங்களில் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.01.2014 அன்று காலை மஸ்ஜித் நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Friday, 17 January 2014

ஜனவரி 28 போராட்டம் ஏன்? நாம் இழந்தது என்ன? அதை திரும்ப அடைவது எப்படி? அனல்பறக்கும் உரை வீடியோ பாகம் 1

ஜனவரி 28 போராட்டம் ஏன்? நாம் இழந்தது என்ன? அதை அடைவது எப்படி? அனல் பறக்கும் உரை வீடியோ பாகம் 2



சிறை செல்லும் போராட்டம் ஏன்? – வீடியோ பாகம் 2 by abdulnaseerkw

தீவிரமாக நடந்துவரும் ஜனவரி 28 இறுதிகட்ட அழைப்புபணி


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.01.2013 அன்று ஜனவரி 28 போராட்ட இறுதிகட்ட அழைப்புபணி தீவிரமாக நடந்துவருகிரது
ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அனுதாபிகள் வீடுவீடாக சென்று போராட்டத்திற்க்கு வருபவர்களின் பெயர்களை பதிவு செய்து வருகிறார்கள் ஏராளமானோர் பெயர் கொடுத்து வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்
ஏற்கனவே கிளை 1 சார்பாக 10 பஸ்களும் 15 வேன்களும் புக்கிங் செய்யப்பட்டுள்ளது கூடுதலாக மக்கள் வரும் சூழ்நிலை உருவானால் இன்னும் கூடுதல் வாகனம் ஏற்பாடு செய்ய நிர்வாகம் தயாராகிவருகிரது அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்

Monday, 13 January 2014

ஜனவரி 28 போராட்ட விளம்பரம் பதித்த விசிறி மற்றும் ரேசன்கார்டு கவர் வீடுவீடாக வினியோகம்




தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.01.2014 அன்று ஜனவரி 28 போராட்ட அழைப்புபனி வீடுவீடாக நடைபெற்றது
அதுசமயம் போராட்ட விளம்பரம் பதித்த விசிறிகளும் ரேசன் கார்டு கவர்களும் வீடுவீடாக வினியோகிக்கப்பட்டது
முன்னதாக தொண்டரனிக்காக தயார் செய்யப்பட்ட ஜனவை 28 போராட்ட விளம்பரம் பதித்த 50 டீசர்ட் மானவர்களுக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.01.2014 அன்று மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 12 January 2014

முகைதீன் பள்ளிவாசல் தெருவில் பொதுக்கூட்டம் போல நடந்த தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.01.2014 அன்று முகைதீன் பள்ளிவாசல்தெருவில் பள்ளிவாசல் அருகே தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

இதில் மாநில செயளாலர் திருத்துரைபூண்டி அப்துல்ரஹ்மான் அவர்கள் ஜனவரி 28 போராட்டத்தின் அவசியத்தை வழியுறுத்தி உனர்ச்சிகரமான உரையாற்றினார்கள் எந்த விளம்பரமும் இல்லாமல் பொதுக்கூட்டம் போல ஆன்களும் பெண்களும் திரண்டுவந்து கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.01.2014 அன்று மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பேச்சுபயிற்ச்சியளித்தார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.01.2014 அன்றுமஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான தர்பியா நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

பள்ளிகூட சிறுவர்களின் ஜனவரி 28 போராட்ட விழிப்புனர்வு பேரனி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.01.2013 அன்று ஜனவரி 28 போராட்ட விழிப்புனர்வை பள்ளிகூட சிறுவர்கள் வீதிவீதியாக போய் செய்தார்கள்

மஸ்ஜித்நூரில் ஜனவரி 28 சம்மந்தமாக ஆலோசனைகூட்டம் முதல்கட்டமாக 10 பஸ்கள் 15 வேன்கள் முன்பதிவு செய்ய முடிவு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.01.2014 அன்று மஸ்ஜித்நூரில் ஜனவரி 28 சம்மந்தமாக ஆலோசனைகூட்டம் நடைபெற்றது இதில் போராட்டத்திற்க்கு போவது சம்மந்தமாக ஆலோசனை செய்து பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பெண்கள் ஒரு குழு அமைத்து வீடு வீடாக சென்று போராட்ட அழைப்பு கொடுத்ததன் விளைவாக மக்களின் எழுச்சி அதிகமாக இருக்கிரது. இதனால் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மட்டும் முதல் கட்டமாக 10 பஸ்களுக்கும் 15 வேன்களுக்கும் புக்கிங் செய்வது என முடிவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.01.2014 காலை மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 8 January 2014

அகாஷ் தோட்ட வளாகத்தில் வராந்திர பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.01.2014 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்