Saturday 1 December 2012

முத்துப்பேட்டை பள்ளிகூடத்தில் என்னதான் நடக்கிரது



கடந்த 29ம்தேதி 30ம்தேதி இரண்டு நாட்களாக முத்துப்பேட்டை ஆன்கள் அரசு பள்ளிகூடத்தில் இரு தரப்பு மானவர்களிடையே மோதல் அடி தடி சைக்கிள்கள் அடித்து நொருக்கப்பட்டது இரு தரப்பிலும் சுமார் 16 நபர்கள் மீது காவல்துரை வழக்கு பதிவு செய்துள்ளது
முத்துப்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் என்னதான் நடக்கிரது ? ஏன் படிக்கும் பருவத்தில் மதவெறி மானவர்கள் உள்ளத்தில் புகுந்தது என நாம் விரிவாக விசாரித்து ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் தெரியவருகிரது
  இதற்க்கு முதல் காரனம் மானவர்களின் பெற்ரோர்களே ஆவார்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் அடிக்கடி பள்ளிக்கு சென்று அவன் என்ன செய்கிரான் படிக்கிரானா/ ரவுடித்தனம் செய்கிரானா என ஆசிரியர்களிடம் கேட்போம் அவனை கண்டிப்போம் என பிள்ளைகள் விசயத்தில் கவனம் செலுத்தாததே இந்த அளவுக்கு முற்றிப்போக காரனம்
    அடுத்ததாக மானவர்களை வைத்து அரசியல்  நடத்தும்  இருதரப்பிலும் உள்ள அமைப்புகள்  எவன் தப்பு செய்தாலும் அதை கண்டிக்காமல் நான் இருக்கிரேன் நீ துனிந்து செய் என அவனை பிரைன் வாஷ் செய்து அவனை வைத்து தன்னை வளர்த்து கொள்ளும் அமைப்புகள் இது எந்த அளவுக்கு போய் விட்டது என்றால் ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்து வா என்று சொன்னால் அமைப்பை சேர்ந்தவர்களை அழைத்து போய் என் அன்னன் என் மச்சான் என் அத்தான் என சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது
    மூன்றாவதாக அரசாங்கம் வகுத்த கல்வி கொள்கை படித்தாலும் படிக்காவிட்டாலும் பாஸ் என ஓட்டுக்காக ஒரு திட்டத்தை போட்டு ஆடு மாடு மேய்க்க லாயக்கில்லாதவன் எல்லாம் ஏ பி சி டி கூட தெறியாமலேயே பத்தாவது படிக்கவந்து விட்டான் இங்கு வந்து படிக்கும் மானவர்களுக்கும் இடையூரு செய்து கொண்டு ரவுடித்தனம் செய்து திரிகிரான்
   அரசாங்கமும் தன் கொள்கையை மாற்ற போவது கிடையாது அமைப்புகளும் அவர்கள் பன்னும் அரசியலை விட போவது கிடையாது இரண்டு பேருக்கும் இதில் லாபம் உள்ளது ஆனால் பெற்றோர்கள் தன் பிள்ளை ரவுடியாக மாறுவதை தடுக்கலாமே? தன் பிள்ளையின் நலனில் இனியாவது கவனம் செலுத்துவார்களா/