Thursday 29 November 2012

முத்துப்பேட்டையில் நபிவழிபடி ஜனாஸா அடக்கம் செய்துவிட்டு திருப்பியவர்கள் மீது சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயற்ச்சி


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 தலைவர் அவர்களின் மகன் வழி பேரக்குழந்தை நேற்று இரவு மௌத்தாகிவிட்டது [இன்னாலில்லாஹி]அதை நபிவழிபடி அடக்கம் செய்ய அவர்கள் குடும்பத்தார் ஆயத்த பனிகளை மேற்கொண்டு இருந்த பொது அவர்கள் முஹல்லா நிர்வாகத்திடம்[அரபு சாஹிப் பள்ளி] இருந்து எங்கள் பள்ளி இமாம்தான் தொழுகை நடத்துவார் மையத்துக்கு உடையவர்கள் தொழுகை நடத்த அனுமதியில்லை என தகவல் வந்தது
முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வாரிசுகள் தொழுகை நடத்த அனுமதி இருந்தும் இவர்கள் மட்டும் மறுப்பது என்ன நியாயம்? நாம் நம் உரிமையை நிலை நாட்டுவோம் என நினைத்தாலும் நம்வீட்டிலேயே தொழுகை நடத்த மார்க்கத்தில் அனுமதி இருப்பதாலும் கப்ரு கட்டிவைத்துள்ள பள்ளிவாசலை விட வீடே சிறந்தது என்பதாலும் அவர்கள் வீட்டின் முன்பே சம்மந்தப்பட்ட பாட்டனார் தொழுகை நடத்தி சிறப்பாக முடிந்தது
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கப்ரு பிரியர்கள் உடனே புதிதாக ஒரு செய்தியை அனுப்பினார்கள் அதாவது எங்கள் பள்ளியில் தொழுகை நடந்த ஜனாசாவை மட்டும்தான் அடக்கவிடுவோம் உங்களுக்கு அனுமதி கிடையாது என்றனர்
இது உரிமை பிரச்சனை பள்ளிவாசல்களில் நமக்கு உரிமை இருந்தாலும் அங்கே சிர்க் இனைவைப்பு நடப்பதால் நாம் தனியாக பள்ளியை உறுவாக்கி நபிவழிபடி தொழுகிறோம் ஆனால் கப்ருஸ்தானில் நமக்கு உள்ள உரிமையை விட கூடாது என்பதால் முறையாக இதை எதிர் கொள்வது என முடிவு செய்து காவல்துரை அதிகாரிகளுக்கு தகவல் தெறிவித்து விட்டு முன்னால் மாவட்ட செயளாளர் அன்சாரியை அமீராக நியமித்து அவர் தலைன்மையில் ஜனாசாவை கொண்டு சென்றோம்
சம்பந்தப்பட்ட அரபுசாகிப் பள்ளிவாசலுக்கு நாம் சென்று எந்த தடையும் இன்றி நல்லபடியாக ஜனாசாவை அடக்கம் செய்தோம் கடைசியாக மன்னை தள்ளி குழியை சன்செய்து கொண்டு இருக்கும்போது சுமார் 50 பேர் கொண்டகும்பல் வந்து கேட்டை பூட்டு போட்டு விட்டு இவன்களை விடாதீர்கள் என காட்டு கூச்சல் போட்டனர் இது மட்டுமல்லாமல் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல பயன்படுத்தும் ஒலி பெருக்கியை பயன்படுத்தி இவன்களை தாக்க பொது மக்களே திரண்டு வாருங்கள் என கலவரத்தை தூண்டும் அறிவிப்பும் செய்யப்பட்டது பூட்டிய கேட்டை போட்டோ எடுத்ததும் உடனே பூட்டு திறக்கப்பட்டது
நாம் ஜனாசாவை அடக்கி முடித்துவிட்டு அங்கேயே ஒரு மசூரா செய்து யார் என்ன பேசினாலும் பதில் அமீர் மட்டும் கொடுப்பார் அனைவரும் பொருமையை கையாளுங்கள் என ஆலோசனை செய்து கப்ருஸ்தானைவிட்டு வெளியேறினோம்
வாய்கூசும் வகையில் கெட்ட வர்த்தைகளால் நம்மை திட்டியும்அதை அல்லாஹ்வுக்காக பொருத்து கொண்டு நாம் பொருமையாக வெளியே வந்தோம் அதே நேரம்
கடைசியாக வந்த கிளை 2 தலைவரை சட்டையை பிடித்து இழுத்தவனையும் மேலும் நம்மை தாக்க செங்களோடு வந்தவனையும் நம் சகோதரர்கள் பிடித்து திருப்பி அனுப்பினார்கள்
இதை தொடர்ந்து இதில் கலவரம் செய்ய என்றே ரவுடித்தனம் செய்தவர்கள் மீது காவல்துரையில் புகார் கொடுத்துள்ளோம் காவல்துரை சரியான நடவடிக்கை எடுத்து ஊரில் அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்