Saturday 27 October 2012

முத்துப்பேட்டையில் நபிவழிபடி பெருநாள் தொழுக குவிந்த மக்கள்கூட்டம் தினறியது மஸ்ஜித் நூர்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை புதுத்தெரு திடலில் இருந்து மழை காரனமாக மஸ்ஜித் நூர் பள்ளிக்கு மாற்றப்பட்டது
  குறுகிய கால அவகாசத்தில் இடமாற்றம் செய்யப்பட்டாலும் நிர்வாகிகள் சலைக்காமல் பம்பரமாக சுழன்று வேலைகளை செய்து தயார் செய்தார்கள்
எதிபார்த்ததைவிட அதிகமாக பெண்கள் கூட்டம் அலைமோதியது பள்ளிவாசல் நிறைந்துவிட்டால் சமாளிப்பதற்க்காக பள்ளியை  சுற்றியுள்ள பகுதிகளை தயார் செய்து வைத்து இருந்தும் இடங்கள் நிரம்பி வழிந்தது
  அக்கம்பக்கத்தில் சகல வசதிகளோடு உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடந்தும் நபிவழி படிதான் தொழுகனும் என்பதற்க்காக நூர் மஸ்ஜிதை[தவ்ஹித் ஜமாத் பள்ளி] நோக்கி மக்கள் வந்தது முத்துப்பேட்டையில் தவ்ஹிதின் எழுச்சியை காட்டியது
  பெருநாள் உரையாற்றிய மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் குர்பானி குடுப்பதில் காட்டும் ஒற்றுமை ஈடுபாட்டை தவ்ஹிதில் அதாவது ஒரு இறைவனை மட்டும் வனங்குவதில் காட்டவேண்டும் நல்ல விசயத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் தீமையான காரியத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவ கூடாது என ஆழமாகவும் அழுத்தமாகவும் உறையாற்றினார்.பெருநாள் உரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது  அல்ஹம்துலில்லாஹ்.

   தாவாவை அதிகப்படுத்துவதற்க்காக முத்துப்பேட்டையை கிளை 1 கிளை 2 என இரண்டாக பிரித்தும் இரண்டு இடங்களிலுமே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது அதிலும் பெண்கள் கூட்டம் மிக மிக அதிகமாக இருந்தது














  இன்னும் வரும்காலங்களில் திடலில் தொழுக முடியாமல் மழை பெய்தால் பெரிய திருமன மண்டபங்களைதான் ஏற்பாடு செய்யனும் அல்லது பள்ளிவாசலை இன்னும் பல மடங்கு பெரிதாக்கனும் என்று மக்கள் கூறி சென்றது  அவர்களின் ஈடுபாட்டை காட்டியது அல்ஹம்துலில்லாஹ்