Saturday 6 October 2012

அகலரயில்பாதையும் முத்துப்பேட்டையும்

பல ஆண்டுகளாக அகல ரயில் பாதைக்காக பல்வேறு போராட்டங்களை முத்துப்பேட்டை சந்தித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை சார்பாக பல்வேறு மனுக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டு அதற்க்கு முன்னால் ரயில்வே துனை அமைச்சர் வேலுவிடம் இருந்து நமது கிளைக்கு நேரடியாக பதிலும் கிடைக்கப்பெற்றது
  அடுத்தகட்டமாக மிகப்பெரும் போராட்டம் செய்ய முடிவு செய்திருந்த வேலையில் தண்டவாளங்கள் வந்து இறங்கியதை அடுத்து இது சம்மந்தமாக ஆய்வு செய்ய நமது குழு அனுப்பப்பட்டு அவர்கள் தண்டவளங்களை பார்வையிட்டு பின்பு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார்கள்
  சுமார் 70 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் டெண்டர் விடப்பட்டு வேலை தொடங்கும் எனவும் கூறினார்கள் இது போதுமான தொகையா என கேட்டபோது இது திருத்துரைபூண்டி முதல் பட்டுக்கோட்டை வரைதான் திருத்துரைபூண்டி முதல் திருவாரூர்வரை சீசன் டிக்கட் விற்பனை செய்துவிட்டதால் 2013 க்கு பிறகுதான் திருவாரூர் வரையிலான வேலை ஆரம்பமாகும் என கூறினார்
  இப்போதைக்கு சந்தோஷப்பட்டாலும் சென்னைவரையிலான தொடர்பாதை பூர்த்தியானால்தான் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்பதால் வரும் பட்ஜட்டில் தேவையான நிதியை ஒதுக்கி மீதமுள்ள திட்டங்களையும் துரிதகதியில் ஆரம்பிக்கவேண்டும்.
   மீதமுள்ள வேலைகளை முடிக்க நிதி ஒதுக்காவிட்டால் மறுபடியும் போராட்டம் தொடங்கும் என தவ்ஹித்ஜமாத் அறிவித்துள்ளது