Tuesday 30 October 2012

மழைகாற்றையும் பொருட்படுத்தாமல் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திரண்டு வந்த பெண்கள் கூட்டம்











தவ்ஹித் ஜமாத் சார்பாக முதல் முறையாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது எதை செய்தாலும் அது இந்த உலகத்திலும் மறுமையிலும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் பெருநாள் சந்திப்பு அன்று இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்க சந்தேகங்களை தெளிவு படுத்தும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது கேள்விகளுக்கு மாநில செயளாளர் அஷ்ரப்தீன் பிதவ்சி அவர்கள் பதிலளித்தார்கள்
வாராவாரம் பென்களுக்கு நடைபெறும் பயானில் இருந்து கேள்விகள் கேட்டு வைக்கப்பட்ட பரிச்சையில் வெற்றிபெற்றவர்களுக்கு மெகா பரிசுகளும் கலந்து கொண்டு பரிச்சை எழுதிய அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் இதே போல மானவ மானவியருக்காக வாராவாரம் நடைபெறும் தர்பியாவில் பரிச்சை நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது
நிகழ்ச்சி தொடங்க சிறிது நேரத்திற்க்கு முன்பாக காற்றுடன்கூடிய கடுமையான மழைகொட்டத்துடங்கியது டிரான்பாமில் மரம்விழுந்து ஊரே இருண்டு போனது இவ்வளவு கடுமையான சூழ்நிலையிலும் பெண்கள் மிகவும் ஆர்வமாக திரண்டுவந்து கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேள்வியாக கேட்டு தெளிவு பெற்று சென்றார்கள்
மர்க்கத்தில் தடுக்கப்பட்ட தர்கா கந்தூரிக்குதான் பெண்கள் ஆர்வமாக செல்வார்கள் என்ற நிலையை மாற்றி நாங்களும் சஹாபாபென்மனிகளை போல மார்கத்தை அறிந்து கொள்ள புயலே அடித்தாலும் வருவோம் என நிறுபித்துள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்
இதில் குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு ஆட்டோ விளம்பரமோ ,நிகழ்ச்சிக்கு வருபவர்களை அழைத்துவர வாகன ஏற்பாடோ செய்யவில்லை என்பது முக்கியமான செய்தியாகும்