Wednesday 30 January 2013

கமல் அழுதால் தவறு சரியாகி விடுமா?வியாபாரத்தில் நஷ்டமடைபவர்கள் எல்லாம் இப்படி நடுரோட்டில் நின்று அழுதுகொண்டா இருக்கிறார்கள் ? படத்தில் நடித்தவர் நிஜத்திலும் நடிக்கிறார்

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் வென்னைதிரண்டு வரும்போது சட்டிஉடைந்ததுபோல என்று அதேபோல எல்லாம் நமக்கு சாதகமாக நடந்து வரும்போது சமாதனம் என களமிரங்கி குட்டையை குழப்புகிறார்கள்

ஒரு சேனலில் பேசிய தேசிய லீக் பஷீர் கமலின் 12 மனி பேட்டிக்கு பிறகு நிலமை மாறிவிட்டது தமிழகமே கமல் பக்கம் போய் விட்டது முஸ்லிகள் தனிமையாகி விட்டார்கள் என கூறுகிறார்

இதைதான் ஜால்ரா என்பது கமலின் பேட்டிக்கு பிறகு அவர் கடந்தெடுத்த கோழை என்பதுதான் தமிழகத்துக்கு தெறியவந்தது ஒரு செய்திசேனலும் ஞானி அவர்களும் எவ்வள்வோ உசுப்பேத்திவிட்டும் திரைஉலகினர் யாரும் கமலுக்கு ஆதரவாக களமிரங்கவில்லை வெரும் அறிக்கையோடு ஒதுங்கிகொண்டார்கள்

ஒரு வியாபரம் செய்தால் லாபமும் வரும் நஷ்டமும் வரும் லாபம் வரும்போது அனுபவித்து விட்டு நஸ்டம் வரும்போது நாட்டைவிட்டு ஓடிவிடுவேன் என்பது எல்லாருக்கும் பொருந்துமா?

கார்க்கோ வியாபரத்தில் சில சிக்கல் ஏற்பட்டு எத்தனையோ சகோதரர்கள் வீட்டையல்லாம் வித்தார்கள் தான் அதற்க்காக அரசாங்கம் சிக்கலை ஏற்படுத்திவிட்டது அதனால் நான் நாட்டை விட்டு ஓட பொகிறேன் என்று ஒருவன் சொன்னால் நாம் என்ன சொல்வோம் ஓடுடா அதையேன் சொல்லிகொண்டு இருக்கிறாய் என்போம் அதே பதில்தான் கமலுக்கும்

படத்தில் நடித்து கொண்டு இருந்த கமல் இப்போது நேரிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் அவர் நாயகன் படத்தில் நடிக்கும் போதே கோடிக்கு மேல் சம்பலம் வாங்கியவர் அதன் பிறகு அவர் நடித்த ஒரு படத்திற்க்கு ஒரு வீடு என்றாலும் எத்தனை வீடு இருக்கனும் நீங்களே கனக்கு போட்டு கொள்ளுங்கள் தனி விமானத்தில் வருகிறார் போகிறார் பரதேசியாகிவிட்டதாக நடிக்கிரார்

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள இயலாமல் அனுதாபத்தின் மூலம் கரையேரிவிடலாம் என அழுதுபுழம்புவர்கள் கோழைகள் கமலுக்குதான் தமிழகத்தால் நன்மையே தவிர தமிழகத்திற்க்கு அவரால் ஒரு நன்மையும் கிடையாது

டாம்999,குற்றப்பத்திரிக்கை, ஒரெஒரு கிராமத்திலே ,பயர், போன்ற படம் எடுத்தவர்களுக்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா?

கடைசியாக ஒரு கேள்வி கமல் உன்மையிலேயே நௌநிலவாதியாக இருந்தால் காவி பயங்கரத்தை வைத்து ஒரு படம் எடுக்கதயாரா? ஞானி போன்றவர்கள் அது போன்ற படத்திற்க்கு ஆதரவு கொடுக்க தயாரா?·