Friday 23 August 2013

மோடியின் தகிடுதத்தமும் மீடியாவின் இரட்டை வேடமும்

உலகிலேயே மோடிதான் சிறந்தவர் என்பதை காட்டுவதற்க்காக பனத்தை வாரி இறைத்து தகிடுதத்தம் வேலைகள் செய்வதும் அது காற்று இறங்கிய பலூன் போல புஸ்ஸ்ஸ் என்று போவதும் தினமும் நடக்கும் வாடிக்கையாகிவிட்டது

ஒரு சின்ன பிரச்சனையை கூட ஊதி ஊதி பெறிதாக்கும் இந்த மீடியாக்கள் மோடி வகையராக்கள் செய்யும் இந்த தில்லு முல்லு வேலைகளை ஏதோ உப்புசப்பு இல்லாத செய்தி போல பிரசுரிக்காமல் விடுவதும் அல்லது போகிற போக்கில் சாதரனமாக சொல்லிவிட்டு போவதுமாக வாங்கிய காசுக்கு கூடுதல் விசுவாசமாக நடக்கிரார்கள்

இதில் சமீபத்திய புருடாதான் அமிதாப்பாச்சன் அவர்கள் மோடி பிரதமராக விருப்பம் தெறிவித்தார் என ஒரு வீடியோவை வெளியிட்டார்கள்

இதை பார்த்த அமிதாப்பாச்சன் அவர்கள் ஆடி போய்விட்டார்கள் நாமே நடிகன் நம்மிடமே இந்த வேலை காட்டுகிறார்களே என கோபப்பட்டு பிரசை கூப்பிட்டு கிழிகிழி என கிழித்து காயப்போட்டுவிட்டார்

2007ம் ஆண்டு அமிதாப் பேசிய வீடியோவில் ஆடியோவை எடிட் செய்து மோடிக்கு ஆதரவாக அமிதாப் பேசியதாக வீடியோவை மாற்றி செய்தி வெளியிட்டுள்ளார்கள்

இதில் நம் ஆதங்கம் என்ன என்றால் தமிழ் செய்திதாள்கள் எதுவும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை நியூஸ் சேனல்களும் இதை திரும்ப திரும்ப சொல்லி மோடியை காட்டிகொடுக்கவில்லை அயோக்கியதனம் செய்வதில் எவ்வளவு ஒற்றுமை ?