Monday 12 August 2013

கலையிழந்தமுத்துப்பேட்டை கந்தூரி,மீண்டும் புத்துயிர் ஊட்ட முத்துப்பேட்டைக்கு நேரில் வந்து தர்ஹா டிரஸ்ட்டியோடு தமுமுக தலைவர் ஆலோசனை


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத்தின் இடைவிடாத பிரச்சாரத்தால் இந்த வருட கந்தூரி கலையிழந்து போனது, குத்தாட்டம் குறைந்து போனது

ஒரு காலத்தில் நாம் குத்தாட்டம் போடுவதுதான் விநாயகர் சதுர்த்திக்கு கொடுக்கும் பதிலடி என நினைத்து ஆட்டம் போட்ட அப்பாவி இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தவ்ஹிதின் பக்கம் வர ஆரம்பித்துவிட்டார்கள்.

  அப்பாவி இளைஞர்களை இதுதான் விநாயகர் ஊர்வலத்திற்க்கு பதிலடி என மூளை சலவை செய்து ஆட்டம் போடவைத்த தர்ஹாவாதிகள் தவ்ஹித்ஜமாத்தின் பிரச்சாரத்தால் ஆட்டம்கண்டு போய் உள்ளார்கள் என்றால் மிகையாகாது

ஏற்கனவே தவ்ஹிதை சொன்ன இயக்கம் ஆள் பற்றாக்குறையால் ஷிர்க்வாதிகளோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டு வந்தது குத்தாட்டத்தின் கூடாரம் கலகலத்து வருவதால் இப்போது புதிய புரானம் பாட ஆரம்பித்து உள்ளார்கள்

ஒருங்கினைந்த தமுமுகவாக இருக்கும் போது நாங்கள் தர்காவை எதிர்த்தோம் என காமெடி பன்ன ஆரம்பித்துள்ளார்கள் ஒருங்கினைந்த தமுமுகவிலும் தவ்ஹித்ஜமாத்காரன்தான் தர்காவை எதிர்த்தான் இப்போதும் அவன்தான் தர்காவை எதிர்க்கிரான் அமைப்பின் பெயர்தான் மாறியுள்ளது என்பது மக்களுக்கும் அரசாங்கத்திற்க்கும் நன்றாக தெரியும்

நாங்களும் தர்காவை எதிர்க்கிறோம் என சொல்லி கொண்டேஇன்று முத்துப்பேட்டையில்  தர்கா டிரஸ்டியை சந்தித்து  [செல்வாக்கு இழந்த தர்ஹாவுக்கு எப்படி கூட்டத்தை கொண்டுவரலாம் என]  தமுமுக மாநிலதலைவர் ரிபாயி ஆலோசனை நடத்துகிரார்

எத்தனை ஆலோசனை நடந்தாலும் எந்தனை முட்டுக்கட்டை போட்டாலும் ஷிர்க்கை எதிர்ப்பதில் தவ்ஹித்ஜமாத் தனது வீரியத்தை அதிகப்படுத்துமே அல்லாது ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இப்போதைக்கு சொல்லி கொள்கிறோம்