Saturday 17 August 2013

நபிவழிஜனாசா நல்லடக்கம் அடியக்காமங்களத்தில் நடந்தது என்ன?

அடியக்காமங்களத்தில் நபிவழிபடி ஒரு குழந்தையின் ஜனாசவை நல்லடக்கம் செய்யவிடாமல் தடுத்து நாம் நினைத்தை சாதித்து விடலாம் என நினைத்தவர்களுக்கு தவ்ஹித்ஜமாத்தின் முயற்ச்சியால் மரன அடி விழுந்தது அல்ஹம்துலில்லாஹ்

ஒரு ஜனாசாவை எந்த முறையில் அடக்கம் செய்வது என்பதை தீர்மானிப்பது அந்த ஜனாசாவின் வாரிசுகளே அல்லாமல் ஊரில் இருக்கும் புரம்போக்குகள் அல்ல என்பதை காவல்துரை முதலில் புறிந்துகொள்ளவேண்டும்

ஜனாசாவுக்கு சம்மந்தம் இல்லாதவன் நீ இப்படிதான் அடக்கனும் அப்படிதான் அடக்கனும் என கட்டுப்பாடுகள் போட்டு ஜனாச அடக்குவதை தடுத்தால் அவனை முட்டிக்கு முட்டிதட்டி உள்ளே போடுவதை விட்டு விட்டு அவனோடு பேச்சுவார்த்தை நடத்துவது கேவலமான ஒரு செயலாகும்

அவன்வீட்டு எல்லையிலோ அல்லது அவன் வீட்டு ஜனாசாவையோ நாம் அடக்கம் செய்ய போனால் அவன் தடுப்பதில் நியாயம் உள்ளது ஊருக்கு பொது மையவாடியில் ஜனாசாவுக்கு சொந்தகாரன் அவன் எதை சரி என நினைக்கிறானோ அதன்படி அடக்கம் செய்வதற்க்கு எதிர்ப்பு தெறிவிப்பதும் அதை காவல்துறை வேடிக்கை பார்ப்பதும் நியாயமாகாது

இதே போலதான் அடியக்காமங்களத்தில்வபாத்தான கைகுழந்தையை அந்த குழந்தையை பெற்றெடுத்தவர்கள் நபிவழிபடி அடக்கம் செய்வதை தவ்ஹித்பெயரை சொல்லி பனம் வசூல் செய்து அதில் பள்ளிவாசல் கட்டி பின்பு அதை தவ்ஹிதிற்க்கு எதிராக பயன்படுத்தி வரும் சுமையா டிரஸ்ட்டை சேர்ந்த ஒருத்தர் அடக்கம் செய்யவிடமல் பிரச்சனை செய்தாராம்

அவரை தூக்கி ஜாமினில் வெளிவரமுடியாத கேசில் உள்ளேதள்ளி நொங்கு எடுப்பதை விட்டு விட்டு காவல்துரை பேச்சுவர்த்தை நடத்தியதாம்

பொருத்து பொருத்து பார்த்த தவ்ஹித்ஜமாத் இனிமேல் பேச்சுவார்த்தையும் கிடையாது ஒன்னும் கிடையாது அடக்கம் செய்ய போகிறோம் உங்களால் என்ன செய்ய இயலுமோ செய்து கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு ஜனாசவை எடுத்து கொண்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மையவாடி நோக்கி சென்றார்கள்

உடனே போலி வீரம் பேசியவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மன் ஒட்டவில்லை என்ரு ஒரு பழமொழி சொல்வார்கள் அதே போல நாங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கிறோம் என சொல்லி மன்னுக்கு மட்டும் 320 ரூபாய் பனம் தாருங்கள் என்றார்களாம் இது 2013ம் ஆண்டில் மிகப்பெரிய நகைச்சுவை என சொல்லி ஊரில் உள்ள நடுநிலையாளர்கள் சிரிக்கிறார்களாம்

இதை ஆரம்பத்திலேயே சொன்னால் 320 என்ன 520 ரூபாயாக தந்து இருப்போமே இதுக்கா இவ்வளவு கூத்து என கேள்விபட்டவர்கள் எல்லாம் காரிதுப்பாத குறையாக ஆதங்கப்படுகிறார்களாம் அடிக்கிரவகையில் அடித்தால் அம்மியும் ஆடும் என்பது இதன்மூலம் புறிகிறது