Saturday 10 August 2013

அரவியப்பா தர்ஹா கந்தூரியும் தவ்ஹித்ஜமாத்தும் முத்துப்பேட்டையில் நடப்பது என்ன?


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் இந்த உலக வாழ்க்கையை விட மறு உலக வாழ்க்கைதான் முக்கியம் என செயல்படும் ஒரு அமைப்பு என்பது அனைவருக்கும் தெறியும்

எந்த ஒரு நியாயத்திற்க்கும் கட்டுபடாமல் இஸ்லாமியர்களை எதிர்ப்பதே நோக்கம் என ஒருவரோ ஒரு கட்சியோ செயல்படும்போது அதை எதிர்க்கும் போதுகூட இஸ்லாமிய சட்டத்திற்க்கு உட்பட்டு எதிற்க்க வேண்டும்         மனோஇச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாமிய சட்டத்தை புறந்தள்ளிவிடகூடாது

நோன்பு முடிந்த அடுத்த நாள் அரவியப்பா கந்தூரி என்ற பெயரில் நடக்கும் இனைவைப்பு காரியத்தை தவ்ஹித்ஜமாத் பல வருடமாக எதிர்த்து வருகிரது

இந்த வருடமும் இந்த இனையதளம் மூலமே பல விழிப்புனர்வு கட்டுரைகள் எழுதி எச்சரித்து வந்தோம் அதன் தொடர்ச்சியக பெருநாள் உரையிலும் அதன் தீமைகளை சுட்டிகாட்டி அதை தடுப்பது எல்லாரின் கடமை என்பதை குர் ஆன் ஹதீஸ் ஆதாரத்தோடு சொல்லி அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பிஜெபியின் அத்துமீரலால் விரும்பதகாத சம்பவங்கள் முத்துப்பேட்டையில் நடந்துள்ளது இதிலும் பாதிப்பு முஸ்லிம்களுக்குதான் ஏற்பட்டுள்ளது

இந்த நேரத்தில் கந்தூரி மூலம் நாமும் கூட்டத்தை கூட்டி அவன்களுக்கு பதிலடி கொடுக்கனும் தவ்ஹித் ஜமாத் கந்தூரி எடுப்பதை தடுக்ககூடாது என்று நடுநிலையாளர்கள் வெஷம் போடும் சிலர் கூறிவருகிறார்கள் கந்தூரியை எதிர்ப்பது இஸ்லாத்தை எதிர்ப்பது என்பது போல ஒரு மாயையை உருவாக்க முயற்ச்சி செய்கிறார்கள்

நாம் தெளிவாக சொல்கிறோம் கந்தூரி மூலம் கூட்டத்தை கூட்டி காட்டுகூச்சல் போடுவதோ அவன் முழங்கால் வரை வேட்டியை தூக்கிகொண்டு ஆடினால் நாம் தொடைவரை வேட்டியை தூக்கிகொண்டு ஆடுவதோ பதிலடியாகாது

அப்படியே அதுதான் பதிலடி என இருந்தாலும் இஸ்லாத்தை புறந்தள்ளிவிட்டு மனோ இச்சைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இந்த ஜமாத் ஒருகாலும் ஏற்றுக்கொள்ளாது

கந்தூரியை தடுத்து இனைவைப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் முயற்ச்சியில் தவ்ஹித்ஜமாத் இருதிவரை போராடும்

 அதன் தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்புனர்வு செய்யும்வன்னம்  போஸ்ட்டரும் அடித்து ஒட்டப்பட்டது.

இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இந்த மோசடியை தடுத்து நிறுத்த வழியுறுத்தி காவல் துரையில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது

 நரகத்தின் கொள்ளிகட்டையான அந்த அயோக்கியர்களை எதிர்க்கிரேன் என்று நாமும் அவன்களோடு கூட சேர்ந்து நரகத்திற்க்கு போய்விடகூடாது

கந்தூரி நடக்கும் பள்ளிவாசலில் வருடா வருடம் புகாரி சரீபு நடத்தும் தப்லீக் ஜமாத்தார்களே இந்த இனைவைப்பை எதிர்பதில் உங்கள் பங்கு என்ன? இதை எதிர்த்தால் அடுத்தவருடம் புகாரி சரீப் நடத்த இயலாதே என மௌனம் காக்குகிறீர்களா? அல்லது கந்தூரி இஸ்லாத்தில் உள்ளதுதான் என பத்வா கொடுக்கபோகிறீர்களா?

கந்தூரிக்கு பாத்தியா ஓதும் ஆலிம்களே மறுமையை அஞ்சி கொள்ளுங்கள். நடுநிலை என சொல்லிகொண்டு நாங்கள் எதிர்க்கவும் மாட்டோம் ஆதரிக்கவும் மாட்டோம் என்பவர்களே அந்த சனிக்கிழமை மீன் பிடித்த கூட்டதையும் அதை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்த கூட்டத்தையும் அல்லாஹ் ஒரே நிலையில் வைத்து தண்டனை கொடுத்ததை நினைத்து நரக நெருப்பில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் அல்லாஹ் போதுமானவன்.