Friday 9 August 2013

பெருநாள் தினத்தன்று தடியடி ,கைது, பரப்பான சூழலில் முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் பிஜெபி மாநில செயளாளரின் பிறந்த நாளை முன்னிட்டு மான்னார்குடி ரோட்டில் உள்ள ஒரு திருமன மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

அந்த நிகழ்ச்சிக்கு சென்ற பிஜெபிகாரர்கள் முஸ்லிம்கள் ஏரியாவில்  முஸ்லிம்களை வெறியேத்தும் விதமாக காட்டுகூச்சலும் கோசமும்போட்டு சென்றுள்ளார்கள் அதோடு பழைய பேருந்து நிலையத்திலும் புதிய பேருந்து நிலையத்திலும் அதிர் வேட்டுகளை வெடிக்கசெய்துள்ளார்கள்

இது நடந்த உடனேயே கவல்துரை தேவையில்லாமல் கூச்சல் போட்டவர்களை கைது செய்து உள்ளே தள்ளியிருந்தால் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து இருக்கும் இதை செய்யாமல் காவல்துறை வேடிக்கைபார்த்துள்ளது

பெருநாள் தினத்தன்று நம் ஏரியாவிலேயே கூச்சல் போடுவதா என ஆவேசப்பட்ட மற்றொரு பிரிவு இளைஞர்கள் இவர்களும் கோஷம் போட்டு கொண்டு போய் பேருந்து நிலையங்களில் வெடியும் வெடித்துள்ளனர்

அதோடு மன்னார்குடி ரோடு நோக்கி செல்ல முயன்றவர்களை போலீஸ் தடுத்துள்ளது இதோடு பிஜெபி யை சேர்ந்தவர்களும் இவர்களை நோக்கி வந்துள்ளனர் இருபிரிவினருக்கும் இடையே கல்வீச்சுகளும் நடந்துள்ளது

நிலமை கட்டுமீறி போவதை கண்ட காவல்துரை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளது மேலும் சில பேரை கைதும் செய்துள்ளார்கள் சந்தோஷமாக பெருநாளை கொண்டாட வேண்டிய இந்த நாளில் இது போன்ற பிரச்சனைகள் செய்து முஸ்லிம்களின் நிம்மதியை கெடுப்பது நியாயமா? ஒரு சாராரின் பண்டிகை நாளில் மற்றொறு சாரர் இவர்கள் வசிக்கும் பகுதியில் வந்து கோஷம் போடும்போது காவல்துரை ஏன் வேடிக்கை பார்த்தது ? என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்

நிலமையை தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் உன்னிப்பாக கன்கானித்து வருகிரது தவறு செய்தவர்கள் யாரா இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும் நமக்கு ஆட்சேபனை கிடையாது ஆனால் தவறு செய்தவர்களை விட்டு விட்டு அப்பாவிகள் மீது கைவைத்தால் தவ்ஹித்ஜமாத் களத்தில் இறங்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி கொள்கிறோம்