Wednesday 14 August 2013

தர்ஹாடிரஸ்ட்டியும் தமுமுக தலைவரும் சந்தித்து பேசியது என்ன? ஓர் விளக்கம்

தமுமுக தலைவர் ரிபாயி மற்றும் முத்துப்பேட்டை தர்ஹா டிரஸ்ட்டி சந்திப்பு சம்மந்தமாக நாம் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம் அதற்க்கு நாம் எதிர்பார்த்த அளவு வாத பிரதி வாதங்களும் ,நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பனியும் நடந்தது அல்ஹம்துலில்லாஹ்

தமுமுக தலைவரும் தர்ஹா டிரஸ்ட்டியும் என்ன பேசினார்கள் என்பது நமக்கு தெறியாது என்பது உன்மைதான்  ஆனால்அவர்கள் சந்தித்து பேசுவதற்க்கு முதல்நாள் முத்துப்பேட்டயில் கந்தூரிவிழா நடைபெற்றது அந்த இனைவைப்பு கந்தூரியில் இருந்து மக்களை காப்பாற்ற தவ்ஹித் ஜமாத்தை தவிர  தமுமுக உள்படஎந்த ஒரு இயக்கமும் சிறிய முயற்ச்சியும் செய்யவில்லை ஆதரவாகத்தான் இருந்தார்கள்

 தவ்ஹித் ஜமாத்தோடு சேர்ந்து செய்யாவிட்டாலும் பாபர் மசூதி பிரச்சனையில் எப்படி தனிதனியாக செய்கிறார்களோ அதை போல  கந்தூரிக்கு எதிராக தமுமுக தனியாகவும் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை தவ்ஹித்ஜமாத் மட்டும்தான் அரசுரீதியாகவும் போஸ்ட்டர் மூலம் மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பலகட்ட முயற்ச்சிகளை செய்தது

இது நடந்த அடுத்த நாளே இது போன்ற கந்தூரிகளுக்கள்ளாம் தலைவரான [தர்ஹாக்கள் கூட்டமைப்பு தலைவர்] தர்ஹா டிரஸ்ட்டியை தமுமுக தலைவர் சந்தித்தது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது

 ஏற்கனவே ஓட்டுக்காக ஆதீனத்திடம் ஆசிவாங்கியது, ஓட்டுக்காக ராமேஸ்வரத்தை இந்துக்களின் புனித பூமியாக்க முதல்வரிடம் பரிந்துரைத்தது இதையல்லாம் வைத்து ஓட்டுக்காக கந்தூரியையும் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்களோ என நினைத்தோம்

உண்மையிலேயே கந்தூரியை ஆதரித்து பேசாமல் எதித்து பேசி இருக்கலாம் அல்லது அதை பற்றி பேசாமல் வேறு செய்தி பேசி இருக்கலாம் என்பதை நாம் மறுக்கவில்லை நாங்கள் சொன்னது சரிதான் என வரட்டுபிடிவாதம் பிடிக்கவும் விரும்பவில்லை

ஆனால் நாங்கள் எழுதியது உண்மையில்லை என்றால் முதலில் தர்ஹாடிரஸ்டியை சந்தித்து பேசிய சகோதரர் ரிபாயி அவர்கள் நான் தர்ஹா டிரஸ்ட்டியிடம் கந்தூரியை ஆதரித்து பேசவில்லை எதிர்த்துதான் பேசினேன் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அறிக்கைவிடவேண்டும் அப்படி ஒரு அறிக்கை விடும் பட்சத்தில் அவர்கள் தர்ஹாவை ஆதரிக்கவில்லை என்பதை ஒத்துகொள்ளலாம்,

 அதுவரை நாங்கள் முதலில் எழுதியதும் நடக்க வாய்ப்பு உள்ளது முற்றிலுமாக அதை ஒதுக்கிவிட இயலாது என்றுதான் அர்த்தமாகும்.சந்தித்து பேசிய ரிபாயி அவர்கள்தான் இந்த அறிக்கையை விட வேண்டுமே தவிற இதில் சம்மந்தமில்லாத  ஜால்ராக்கல் அல்ல என்பதயும் தெளிவாக சொல்லிகொள்கிறோம்

தவ்ஹித்ஜமாத்தை பற்றி எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லாத [ ஜித்தா ஏர்போட்டில் பிஜெ கைது செய்யப்பட்டார் போன்று பல பொய்கள் ]  அவதூறுகளை பரப்பும் ஜால்ராக்களுக்கு போட்டோ ஆதரத்தோடு செய்தி வெளியிட்ட நம்மை கேள்வி கேட்ட எந்த அருகதையும் கிடையாது அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் நமக்கில்லை

இருந்தாலும் நடுநிலையாளர்களுக்காவும் எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருக்கும் நம் ஜமாத் இதிலும் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற நல்ல என்னத்தில்தான் இதை எழுதியுள்ளோம்.

 நாம் எதிர்பார்த்தபடி தமுமுக தலைவரும் தர்ஹாடிரஸ்ட்டியும் சந்தித்த செய்தியை உலம் முலுவதும் கொண்டு சென்ற ஜால்ராக்கலுக்கும் அதற்க்கு வழி வகுத்து கொடுத்த அல்லாஹ்வுக்கும் நன்றியை தெறிவித்து கொள்கிறோம்