Thursday 18 July 2013

அகல ரயில்பாதைதிட்டமும் அநியாயமாக வஞ்சிக்கப்படும் முத்துப்பேட்டையும்


ரயில்வேதுறை இந்தியாவில் உள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகளையல்லாம் பிராட்கேஜ் அதாவது அகல ரயில் பாதையாக மாற்றவேண்டும் என திட்டம் போட்டு அதற்க்காக நிதி ஒதுக்கி பல வருடங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிரது

இந்தியாவிலே கிட்டத்தட்ட அனைத்து குருகிய ரயில் பாதைகளும் அகலரயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன ஆனால் இந்த திருவாரூர் முதல் பட்டுக்கோட்டைவரை உள்ள ரயில் பாதை மட்டும் கிடப்பிலே  போடப்பட்டு வருகிறது

மீட்டர்கேஜ் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றும் அதே நேரத்தில் புதிதாக பல இடங்களில் ரயில் பாதைகளும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது அதே நேரத்தில் ஏற்க்கனவே உள்ள மீட்டர்கேஜை பிராட்கேஜாக மாற்றதான்முதலில் முன்னுரிமை கொடுக்கனும் என்றும் அறிவுறுத்தப்பட்டது

ஆனால் அதற்க்கு நேர் மாற்றமாக திருவாரூர் முதல் வேளாக்கன்னி மற்றும் திருவரூர் முதல் மன்னார்குடி போன்ற புதிய ரயில் பாதைக்கு முன்னுரிமை கொடுத்து பழைய ரயிபாதையை கேட்பாரற்று கிடப்பில் போட்டுவிட்டார்கள்

இதற்க்காக போராட்டம் நடத்த முத்துப்பேட்டையில் ஒரு குழு அமைக்கப்பட்டது ஒரு குழு அமைத்து ஏதொ செய்ய முயற்ச்சி செய்யும் போது நாம் குறுக்குசால் ஓட்ட கூடாது என தவ்ஹித்ஜமாத் அமைதிகாத்தது

அந்த குழுவுக்கு தலைவராக போட்டவரை பார்த்ததுமே இது விளங்காது என நமக்கு புறிந்தது ஏன் என்றால் சில வருடத்திற்க்கு முன்பு வினாயகர் ஊர்வல பிரச்சனையில் இந்த நபர் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என ஊரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் கையழுத்து போட்டு இவரை நீக்கினார்கள்

 தவ்ஹித் ஜமாத் மட்டும்தான் இவர் தவ்ஹித்ஜமாத்துக்கு நேர் எதிரியாக இருந்தும் இவர் துரோகம் செய்ததற்க்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே இவரை நீக்கும் பிரச்சனையில் உடன்படுவோம் என எழுதி கையெழுத்து போட்டது

அப்படி நீக்கிய ஒருத்தருக்கு ரீ இண்டரி கொடுத்து இந்த குழுவுக்கு தலைவராக போட்டு போராட்டம் எல்லாம் நடத்தினார்கள் எதுவுமே வீரியமிக்கதாக அரசாங்கத்தை ஆட்டம்கான வைக்கும் வகையில் அமையவில்லை

திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரை இந்த ரயில் போகும் வழியில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லிம்மக்களும்தான் இதனால்தான் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது

சென்றவருடம் திடீர் என்று இரண்டு லோடு இரும்பு தண்டவாளங்கள் வந்து இறங்கியது ஏன் எதற்க்கு என்று தெறியும் முன்பே நம் ஊரில் உள்ள ஒரு கட்சியினர் சுவீட் வாங்கி சென்று அங்குள்ளவர்களுக்கள்ளாம் கொடுத்து ஏதோ பிராட்கேஜ் போட்டு ரயில் விட்டு விட்ட மாதிரி கொண்டாடினார்கள் இரும்புதண்டவாளம் வந்து இறங்கியதற்க்கு சுவீட் கொடுத்து கொண்டாடிய ஊர் உலகத்திலேயே முத்துப்பேட்டையாகதான் இருக்கும்

இப்படியே போனால் இதற்க்கு என்னதான் தீர்வு? ஒரு காலத்தில் ரயில் முத்துப்பேட்டைக்கு வந்தது என நம் சந்ததிகள் சொல்லும் நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்களோ ?என்ற என்னம் அனைத்து மக்களிடமும் எழுந்துள்ளது

 நோன்பு முடிந்தும் இதே நிலை நீடித்தால் தவ்ஹித் ஜமாத் மாநில தலைமையோடு ஆலோசனை செய்து இதற்க்கு ஆவன செய்யலாம் என முடிவு செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்