Thursday 4 July 2013

இனவெறிநாடான ஆஸ்திரேலியாவில் புரட்சி திருகுர் ஆன் கையில் ஏந்தி பதவியேர்த்த அமைச்சர்


திருக்குரான் மீது கையில் வைத்துக்கொண்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஆஸ்திரேலியாவி்ன் முதல் இஸ்லாமிய அமைச்சரை கடுமையாக விமர்சித்து, இனவெறியர்கள் டிவிட்டர், பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 

இனவெறிக்குப் பெயர் போனது ஆஸ்திரேலியா. அங்கு தோலைப் பார்த்து ஆளைப் பார்க்கும் கூட்டம்தான் அதிகம். இந்தியர்கள் இந்த ஆஸ்திரேலியர்களிடம் சிக்கி பட்ட பாடு உலகுக்கே தெரியும். 

இப்படிப்பட்ட இனவெறி பிடித்த ஆஸ்திரேலியாவில், அந்த நாட்டு அமைச்சர் ஒருவரே இனவெறி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

குரான் இல்லாமல் எப்படி பதவியேற்பது :
இது குறித்து ஹூசிக் கூறுகையில், நான் ஒரு முஸ்லீம். எனது நம்பிக்கையை நான் வெளிப்படுத்தினேன். என்னால் பைபிள் மீது கை வைத்து உறுதி ஏற்க முடியாது. நான் யாரோ அதுவாகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறினார் ஹூசிக். (அல்லாஹ் அக்பர்..)

இனவெறி விமர்சனங்கள் :
இதையடுத்து ஹூசிக்கை மிகக் கடுமையாகவும், இனவெறியுடனும் திட்டி ஆன்லைனில் சிலர் கிளம்பி விட்டனர்.
பேஸ்புக்கில் காட்டமான கருத்துக்கள் ஹூசிக்கின் பேஸ்புக்கில் பல இனவெறியர்கள் புகுந்து இது அவமானமாக இருக்கிறது. நீங்கள் முழுமையான ஆஸ்திரேலியர் அல்ல என்றும் இன்ன பிற இனவெறிக் கருத்துக்களைச் சொல்லியும் விமர்சித்தபடி உள்ளனர்.
பிரதமர் கெவின் ரூட் வருத்தம்:
ஹூசிக் மீதான இனவெறி தாக்குதல் குறித்து பிரதமர் கெவின் ரூட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹூசிக்கின் பெற்றோருக்கு அவர் போன் செய்து தனது வருத்தத்தையும் பதிவு செய்தார்.

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்'ஆன்: 61 :08 ) 
நன்றி திருவாரூர்மாவட்ட தவ்ஹித்ஜமாத் இனையதளம்