Saturday 27 July 2013

ரமலான் முடிந்த அடுத்த நாளே கந்தூரியில் ஆட்டம்போடும் முத்துப்பேட்டை முஸ்லிம்களே ! ரமலானில் நீங்கள் படித்த பாடம்தான் என்ன?


ரமலான் மாதம் முழுவதும் நோன்பு பிடித்து இரவல்லாம் நின்று வனங்கி மறுமைக்காக சம்பாரித்த அனைத்து நல்ல அமல்களையும் பெருநாள் முடிந்த அடுத்த நாள் அரவியப்பா கந்தூரில் பரக்கவிடுவது கைசேதமல்லவா?

தவ்ஹித்ஜமாத்தை எதிர்க்க கச்சை கட்டிகொண்டு களம்கானும் முத்துப்பேட்டை பள்ளிவாசல் இமாம்களே இந்த கந்தூரி பாவமான செயல் என சொல்ல தயக்கம் ஏன்? அதில் போய் நீங்களும் பாதியா ஓதுவது சரியா? அவர்கள் தரும் அர்ப்ப காசு நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் இருந்து உங்களை தடம் புரள செய்துவிட்டதா?

எவனோ விநாயகர் ஊர்வலத்தில் வேட்டியை தூக்கி கொண்டு ஆடுகிரான் என்பதற்க்காக நானும் கந்தூரியில் வேட்டியை தூக்கி கொண்டு ஆடுகிறேன் என சொல்லும் அப்பாவி இளைஞர்களே நரகத்து கொள்ளிகட்டையான அவனும் நீங்களும் ஒன்னா?

முஸ்லிகளை பார்த்து பாடம் படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள பலபேர் இஸ்லாத்தை நோக்கி வரும்போது நீங்கள் அவனை பார்த்து பாடம் படித்து நரகத்தை நோக்கி போவது சரியா?

ஊர்ஜமாத் நிர்வாகிகளே! நடு நிலை வேசம் போடுபவர்களே! அந்த சனிக்கிழமை கூட்டதை நினைத்து பாருங்கள். அநியாயம் செய்தவனும் அநியாயத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்தவனும் அல்லாஹ்வின் பார்வையில் ஒன்னுதான் அந்த முழு ஹதீசையும் உங்கள் பள்ளி இமாமிடம் கேட்டு தெறிந்து கொள்ளுங்கள்

அதிலும் நீங்கள் ஒருபடி மேலே போய் அநியாயத்தை எதிர்க்கும் தவ்ஹித் ஜமாத்தை எதிர்க்கிரீர்கள் .தவ்ஹித்ஜமாத்தை எதிர்பதாக நினைத்து கொண்டு இனைவைப்பிர்க்கு துனை போகிறீர்கள் சிந்தியுங்கள் சகோதரர்களே

நீங்கள் தாகித்து இருப்பதோ பட்டினி கிடப்பதோ அல்லாஹ்வுக்கு தேவையில்லாதது இறையச்சம் ஒன்னுதான் நம்மை கரை சேர்க்கும் அந்த இறையச்சத்தை அதிகம் பெறகூடிய இந்த ரலான் மாதம் முடிந்த அடுத்த நாளே கந்தூரி தேவையா?அதில் போடும் ஆட்டம் தேவையா? அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்