Friday 26 July 2013

டெலிபோன் டவர் மிரட்டலுக்கு காவல்துரையின் பாரபட்சமே காரனம், முத்துப்பேட்டையில் நடக்கும் பலபிரச்சனகளுக்கு காரனம் காவல்துரையின் மெத்தனப்போக்குதான்.

முத்துப்பேட்டையில் டெலிபோன் டவரில் இருந்து தற்கொலை பன்ன போவதாக மிரட்டிய விடுதலை சிறுத்தை கட்சியினர் சம்மந்தமாக எழுதியிருந்தோம்

தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஒரு நிர்வாகி பொது இடத்தில் வைத்து வெட்டபடுகிறார் ஆனால் பல நாட்கள் ஆகியும் வெட்டியவரை காவல்துரை கைது செய்யவில்லை

அநியாயமாக தாக்குதல் நடத்தியவர் சங்பரிவார் கும்பலை சேர்ந்தவர் என்பதால் காவல்துரை வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் கருத்து தெறிவிக்கிறார்கள் இதே சங்பரிவாரை சேர்ந்தவர் வெட்டப்பட்டு இருந்தால் அவர்களை திருப்தி படுத்துவதற்க்காக அப்பாவி முஸ்லிம்களை இரவோடு இரவாக  வீடு புகுந்து கைது செய்து இருப்பார்கள் என்றும்மக்கள் பேசி கொள்கிறார்கள்

சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதில் காட்டும் அக்கரையை ஒரு முஸ்லிமோ தாழ்த்தப்பட்டவனோ  கொலை செய்யப்படும் போதும் காட்டினால் நாடு உறுப்படும்

 தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு ஒழுங்காக இருக்கும்

சங்பரிவாருக்கு மட்டும் சலுகை காட்டுவதால் அவர்கள் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவருகிறார்கள்

 இனியாவது  யாரும் மறுபடியும் டெலிபோன் டவரில் ஏறாமல் முன்கூட்டியே காவல்துரை நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டுமா? பொருத்து இருந்து பார்ப்போம்