Wednesday 25 December 2013

அல்லாஹ்வின் உதவியால் பலதடைகளை மீறி வீரியமாக நடந்துவரும் தவ்ஹித்மர்கஷ் கட்டிட வேலைகள்




தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 ஆசாத்நகரில் தவ்ஹித்ஜமாத்தின் மர்கஷ் அமைக்கும் வேலைகள் 6 மாதத்திற்க்கு முன்பு தொடங்கியது

நமது சொந்த பட்டா இடத்தில் நாம் மர்கஷ் கட்டுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் எந்த முகந்திரமும் இல்லாமல் தனக்கு உள்ள பிரத்தியோக அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்துவதற்க்கு உத்திரவிட்டார்

எதுவக இருந்தாலும் ஜனநாய வழியில் தீர்வு கான வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நமது ஜமாத் இந்த பிரச்சனையையும் ஜனநாயக வழியில் எதிர்கொள்வது என முடிவு செய்து கட்டிட வேலைகளை நிறுத்திவிட்டு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தது.ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த ஆட்சியரை எதிர்த்து ஆர்பாட்டமும் செய்தது

அல்லாஹ்வின் உதவியால் மாவட்ட ஆட்சியர் போட்ட உத்திரவு செல்லாது கட்டிட வேலைகளை தொடர்ந்து செய்யலாம் என ஐகோர்ட் உத்திரவிட்டது

நமது நாட்டின் மிக பெறிய சக்தியான கோர்ட் தீர்ப்பு சொன்ன பின்பு அந்த தீர்ப்பின் நகல் நம் கைக்கு கிடைத்த பின்பு நாம் மர்கஷ் வேலைகளை தொடங்கினோம்

கூலிக்கு வேலை செய்யும் ஆட்கள் அல்லாமல் நமது சகோதரர்களும் இரவு பகலாக அங்கு வேலை செய்துவருகிரார்கள் மறுபடியும் வேலை ஆரம்பித்து இந்த ஐந்து நாட்களில் அதிகார வர்க்கத்தின் மிரட்டல்களும் அச்சுருத்தல்களும் அதிகமாகவே உள்ளது

நாம் ஜனநாயக ரீதியாக நடந்துவருகிறோம் ஜனநாயகத்தி நிலை நாட்ட வேண்டிய அதிகாரிகள் கோர்ட் உத்திரவைகூட மதிக்காமல் சில தனிப்பட்ட நபர்களை திருப்தி படுத்துவதில் மும்முரமாக இருப்பது வேதனையான தரக்கூடியதாக உள்ளது

நாம் மாநில மாவட்ட தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் சட்டத்திற்க்கு உட்பட்டு நமது பனிகளை செய்துவருகிறோம்.இதற்க்கும் தொடர்ந்து இடையூறு செய்தால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்வதோடு மக்கள் சக்தியை திரட்டி மிக பெறிய போராட்டத்தை செய்ய வேண்டி இருக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிகொள்கிரோம்.