Friday, 31 May 2013

பூட்டிகிடந்த வீடு நள்ளிரவில் எரிந்தது முத்துப்பேட்டையில் பரபரப்பு

முத்துப்பேட்டை அகாஷ்தோட்டவளாகத்தில் உள்ள மண்டகட்டி ஜஹபர் அலி அவர்கள் வீடு இன்று அதிகாலை 2 மனியளவில் எரிந்துநாசமானது
அவர்கள்வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிரோ காரும் இரண்டு பைக்குகளும் எரிந்து நாசமானது

இந்த தீவிபத்திர்க்கு நாசவேலை கரனமா அல்லது வெயிலின்கடுமையால் நடந்ததா என காவல்துரை புலன்விசாரனை செய்துவருகிரது
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் சம்பவம் நடந்த இரவு கடுமையான மழை பெய்தது குறுப்பிடதக்கது இதனால் இந்த தீ விபத்திர்க்கு நாசவேலைகாரனமாக இருக்குமோ என்ற கோனத்திலும் கவல்துரை விசாரித்து வருகிரது
சம்பவம் நடந்த அன்றைய இரவு வீட்டில் யாரும் இல்லை வீடு பூட்டிகிடந்தது என்பது கூடுதல் தகவலாகும்

Thursday, 30 May 2013

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை மாபெரும் விளக்க பொதுக்கூட்டம்

 ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் இன்றைய சூழ்நிலையை விளக்கி குரும்பட ஆதாரத்துடன் இன்ஸா அல்லாஹ் வரும் 07.06.2013 வெள்ளி கிழமை  மாபெரும் உள்அரங்கு நிகழ்ச்சி குவைத்  தஸ்மா டீச்சர் சொசட்டியில் நடைபெற உள்ளது

 இந்த நிகழ்ச்சி இன்ஸா அல்லாஹ் www.tntjkuwait.com  இனையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

Monday, 27 May 2013

தொழுகைக்கும் தொப்பிக்கும் தொடர்பில்லை மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.05.2013 அன்று மச்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாடி மிசால் அவர்கள் தொழுகைக்கும் தொப்பிக்கும் தொடர்பில்லை என்ற தலைப்பில் பயான் செய்தார்கள் ஏராளமானோர்கலந்து கொண்டு பயனடந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 26 May 2013

அரக்காசு அம்மாள் தர்காவில் அதிரடி தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.05.2013 அன்று முத்துப்பேட்டையில் பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள அரக்காசு அம்மாள் தர்காவிர்க்கு சென்று அதன் டிரஸ்ட்டியும் தன்னை ஜோதிடர் என சொல்லிகொள்பவருமான ஷேக்ஜி என்ற ஷேக்தாவுது அவர்களை அவர் தர்காவிலேயே சந்தித்துதாவா செய்யப்பட்டது
 இது தவறு   தர்கா என்பது இஸ்லாத்திற்க்கு விரோதமானது   இது நிரந்தர நரகத்திர்க்கு கொண்டுபோய் சேர்க்கும்   என அறிவுப்பூர்வமாக தாயி மிசால் அவர்களால் எடுத்து சொல்லப்பட்டு தர்ஹா வழிகேடு என்ற பிரசுரமும் வழங்கப்பட்டது

கிராமத்தை நோக்கி மானவரனியினர் தாவா பயனம்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக வாரம் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து தாவா செய்து வருவதின் தொடர்ச்சியாக இந்தவாரம் 26.05.2013 அன்று மாணவரனி சார்பில் அதன் தலைவர் ராசிக் தலைமையில் நமது ஜமாத் ஆலங்காடு கிராமத்தில் களமிரங்கியது
மன்பாண்டங்கள் செய்து விற்பனை செய்துவருபவர்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்தில் தாயி மிசால் அவர்கள் தாவாசெய்ய மானவரனியினர் கிராமம் முழுவதும் பிரசுரங்களை வினியோகித்தனர்
பிரசுரங்களை படித்துவிட்டு ஆர்வத்துடன் சந்தேகங்களை கேட்டவர்களுக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமாக பதிலலித்தார்கள் ஏராளமான மானவர்கள் ராசிக் தலைமையில் ஆர்வத்துடன் பங்கேற்றர்கல் அல்ஹம்துலில்லாஹ்


இனையதளத்தில் இளைய சமுதாயம் என்ற தலைப்பில் மஸ்ஜித்நூரில் மர்க்க சொற்பொழிவு

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிலை 1 சார்பாக 26.05.2013 அன்று மஸ்ஜித் நுரில்பயான் நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் இனையதளத்தில் இளைய சமுதாயம் என்ற தலைப்பில் உரையாற்றினார் ஏராளமான மானவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 25 May 2013

மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு மாமனிதர் புக் இலவசமாக வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.05.2013 அன்று ஒரு மாற்றுமத சகோதரருக்கும் ஒரு மாற்றுமத சகோதரிக்கும் மாமனிதர் நபிகள் நாயகம் புக் இரண்டு இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது

ஏழை சகோதரருக்கு மருத்த நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.05.2013 அன்று நோயால் பாதிக்கப்பட்ட பக்கீர்வாடி பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 2400 [இரண்டாயிரத்து நானூறு] மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது

வேளாங்கன்னிசெல்லும் கிருஸ்த்தவர்களுக்கு பிரசுரம் கொடுத்து தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.05.2013 அன்று வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு நடை பயனமாக செல்லும் கிருஸ்த்துவர்களுக்கு கர்த்தர்கூறுமறிவுரை என்ற பிரசுரம் வழங்கி தாவா செய்யப்பட்டது

தர்ஹாவழிபாடு ஒரு வழிகேடு பிரசுரம் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 மானவரனி சார்பாக 25.05.2013 அன்று கடைகடையாக சென்று தர்காவினால் ஏற்படும் கேடுகளை விளக்கி தர்ஹாவழிபாடு ஒரு வழிகேடு என்ற பிரசுரம் வினியோகிக்கப்பட்டது

முத்துப்பேட்டையில் புதிய தவ்ஹித்மர்கஸ் அமைப்பது சம்மந்தமாக ஆலோசனை


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டையில் தவ்ஹிதிர்க்காக ஏற்கனவே உறுவாக்கிய மர்க்கசை ஜாக்கிடம் கொடுத்துவிட்டு நாம் வெளியேறினாலும் அதன் பிறகு முத்துப்பேட்டையில் ஏற்பட்ட தவ்ஹித் எழுச்சியின் காரனமாக புதிதாக இரண்டு மர்கஸ்கள் அமைக்கப்பட்டு ஜும்மா மற்றும் மார்க்க சமுதாய பணிகள் நடந்து வருகிறது

நாளுக்கு நாள் மக்கள் தவ்ஹிதை விளங்கி குர் ஆன் ஹதீஸ்தான் இஸ்லாம் என்பதை புறிந்து அதிகமான மக்கள் தவ்ஹிதின் பக்கம் வருவதால் முத்துப்பேட்டையில் மேலும் இரண்டு மர்கஸ்கள் அமைப்பது சம்மந்தமாக ஆலோசனை செய்வதற்காக முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளார்கள்

முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் 24.05.2013 அன்று துபாயில் வாழும் முத்துப்பேட்டை மக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள் ஆலோசனை பலனுல்லதாக அமைந்து இருந்தது அல்ஹம்துலில்லாஹ் 

வாரம் ஒரு குர் ஆன் வசனம் மஸ்ஜித்நூரில் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.05.2013 அன்று மஸ்ஜித் நூரில் சுபுஹுதொழுகைக்கு பின்பு வாரம் ஒரு குர் ஆன் வசனத்தை அறிந்துகொள்வோம் பயான் நடைபெற்றது
இதில் இந்த வாரம் பயான் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போம் என்ற தலைப்பில் குர் ஆன் வசனம் விளக்கத்தோடு நடைபெற்றது தாயி மிசால் அவர்கள் மிக தெளிவாக விளக்கமளித்து உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 22 May 2013

மஸ்ஜித்நூரில் மானவ மானவிகளுக்கு கோடைகால பயிற்ச்சிமுகாம்





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கோடைகால பயிற்ச்சி முகாம் ஆன்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக 11.05.2013 முதல் 21.05.2013 வரை 10 நாட்கள் நடைபெற்றது

இதில் மானவர்கள் 64 பேரும் மானவிகள் 68 பேரும் கலந்து கொண்டனர் காலை 9 மனிமுதல் மதியம் 1மனிவரை நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவர்களுக்குதாயி மிசால் ஆலிம் அவர்களும் தாயி கட்டிநாநா அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள்

இதில் கலந்துகொண்ட மானவிகளுக்கு பஜிலா பேகம் ஆலிமா அவர்களும் மதுகார் பீவி ஆலிமா அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள்

21.05.2013 அன்று மானவ மானவிகளுக்கு தேர்வு நடத்திமுடிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இனையதளத்தில் சீரழியும் இளம் பெண்கள் மஸ்ஜித்நூர் பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  22.05.2013 இஷா தொழுகைக்கு பின்பு மஸ்ஜித் நூரில்  மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது

இதில் தாயி மிசால் அவர்கள் இனையதளத்தில் சீரழியும் இளம்பெண்கள் என்றதலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

அமெரிக்காவை அலரவைத்த ஈரானின் மின்னல்வேக ஏவுகனை


அமெரிக்காவே மிரண்டு போயிருக்கும் ஈரானின் புதிய கண்டுபிடிப்பு..!
எந்த ரேடாருக்கும் அகப்படாமல் இலக்குகளை தாக்கிவிட்டு
பாதுகாப்பாக திரும்பக் கூடிய,
கடல் நீருக்குள்ளிருந்து வெளிப்படும் பாரிய யுத்த விமானம்


Saturday, 18 May 2013

தர்ஹாவழிபாடு சரியா என்ற தலைப்பில் மஸ்ஜித் நூரில் மார்க்க சொர்பொழிவு


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கடந்த 16-5-2013 அன்று மஸ்ஜித் நூரில் மார்க்க சொற்ப் பொழிவு நடைபெற்றது.

இதில் இமாம் அப்துல்லாஹ் அவர்கள் தர்ஹா வழிபாடு சரியா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


Monday, 13 May 2013

தாவா பணிக்காக பெண்களின் பங்களிப்பு

முத்துபேட்டை கிளை 1ல் நடந்து வரும் தாவா பனி மேலும் சிறக்க உதவி செய்யும்மாறு ஜும்ஆவில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெண்கள் சார்பாக ரூபாய் 2200 கிளை நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டது   அல்ஹம்துலில்லாஹ் 

அல்லாஹ்வின் ஆலயம் அமைய நிதி உதவி


முத்துபேட்டை கிளை 1 சார்பாக 10/05/2013 அன்று திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையில் அல்லாஹ்வின் ஆலயம் அமைய நிதி உதவி  ரூபாய் 2100 வழங்கப்பட்டது 

தாவா பணிகள் பார்வைக்கு வைக்கபட்டது


கடந்த மாதம் நடந்த தாவா பணிகளில் சிலது மட்டும் ஜும்ஆ பார்வைக்காக வைக்கபட்டது  

தினமும் ஒரு ஹதீஸ்

 தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 முதல் மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி



8/5/2013 அன்று  பிறந்த நாள் கொண்டாடலாமா என்றதலைப்பில் பேசபட்டது



 9/5/2013 அன்று   தஸ்பிஹ் ஓர் ஆய்வு  என்றதலைப்பில் பேசபட்டது


10/5/2013 அன்று ஜும்ஆவிற்க்கு எத்தனை பாங்கு    என்றதலைப்பில் பேசபட்டது.




Sunday, 12 May 2013

நோட்டிஸ் வினியோகம்

 இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய மே 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் மெகா 24 தொலைக்காட்சியில் தினந்தோறும் இந்திய நேரப்படி இரவு 10மணி முதல் 11மணி வரை ஒளிபரப்பாக உள்ளது என்பதை தெரிவிக்கும் விதமாக முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 400 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.

Wednesday, 8 May 2013

தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி மஸ்ஜித்நூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது




தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 முதல் மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது

இதன் மூலம் தினமும் இஷா தொழுகைக்கு பிறகு ஒரு ஹதீசை எடுத்து கொண்டு அதை பற்ரிய முழு விபரங்களையும் கூறி அதன் நன்மைகளையும் எடுத்து சொல்லப்பட்டு வருகிறது இந்த பயான் நிகழ்ச்சியை தாயி மிசால் அவர்கள் அனைவரும் எளிதில் புறிந்து கொள்ளும்விதமாக சிறப்பாக செய்துவருகிறார்கள் மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்று வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 5 May 2013

மார்ச் மாதம் அதிக தாவா செய்து திருவாரூர் மவட்டத்திலேயே முதலிடத்தை முத்துப்பேட்டை கிளை 1 பிடித்துள்ளது




திருவாரூர் மாவட்ட பொதுக்குழு 05.05.2013 அன்று திருவாரூரில் நடை பெற்றது அதில் மாவட்டத்தில் சிறப்பாக தாவா செய்த கிளை பட்டியல் வெளியிட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது

இதில் மார்ச் மாதம் அதிகமாக தாவா செய்ததில் மாவட்டத்திலேயே முதலிடத்தில் முத்துப்பேட்டை கிளை 1 வந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்

ஏப்ரல் மாதம் அதிகமாக தாவா செய்ததில் மாவட்டத்திலேயே இரண்டாவது இடத்தில் முத்துப்பேட்டை கிளை 1 வந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்

கடந்த வருடம் முழுவதும் அதிக அளவில் தாவா செய்ததில் மாவட்டத்திலேயே ஐந்தாவது இடத்தில் முத்துப்பேட்டை கிளை1 வந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்

பேட்டை பகுதியில் நடமாடும் நூலகம் மற்றும் மெகா மைக்ரோபோன் தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று பேட்டை பகுதியில் நடமாடும் நூலகம் அமைத்து அதன் அருகே மெகா மைக்ரோபோன் மூலம் தாவா செய்யப்பட்டது

இலவசமாக புக் வழங்கி மஸ்ஜித்நூரில் தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று மஸ்ஜித் நூரில் மறுமை சம்மந்தமாகவும் கியாமத் நாள் சம்மந்தமகவும் விளக்கம்கேட்ட சகோதரருக்கு விளக்கமளித்து தாவா செய்து கியாமத்து நாளின் அடையாளங்கள் புக் இலவசமாக வழங்கப்பட்டது

Saturday, 4 May 2013

தர்ஹாபடமும் கோயில் படமும் ஒன்றுதான் தீமையை விளக்கி தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று தர்ஹா படத்தால் நல்லது நடக்கும் என நம்பி அதை வீட்டில் மாட்டிவைத்து இருந்தவரிடம் தர்ஹா படமும் கோயில் படமும் ஒன்றுதான் உங்கள் வீட்டில் கோயில் படத்தை மாட்டிவைப்பீர்களா என கேட்டு அதன் தீமைகளை விளக்கி தாவா செய்யப்பட்டது அந்த தர்ஹா படத்தின் தீமைகளை உனர்ந்த அவர்களின் அனுமதியோடு தர்ஹா படம் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

போலி கிதாபை அடையாளம் காட்டி திருஷ்ட்டி பொருள் அகற்றம்


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டில் திருஷ்ட்டிக்காக திருஷ்ட்டிப்பொருள் தொங்கவிடப்பட்டு இருந்ததை சுட்டிகாட்டி அதன் உரிமையாளரிடம் அதந்திமையை விளக்கி அதை அகற்ற வழியுருத்தி தாவா செய்யப்பட்டது

அதற்க்கு அவர் இப்படி திருஷ்ட்டிக்காக கட்டிவைக்க குர் ஆனிலேயே அனுமதியுள்ளது அதனால்தான் கட்டிவைத்துள்ளோம் என வாதிட்டு அதை அகற்ற மறுத்தார் நாம் அப்படி எதுவும் கிடையாது இது உங்களை நரகத்தில் கொண்டுபோய் சேர்க்கும் என எடுத்து சொல்லிவிட்டு வந்துவிட்டோம்

சுமர் ஒரு மனிநேரம் கழித்து ஹிஸ்னுல் முஸ்லிம் என்ற புக்கை எடுத்து வந்து அதில் இருப்பதாக காட்டினார் நாம் அதன் தரத்தையும் அதன் மொழிபெயர்பாளரின் தரத்தையும் அதில் உள்ள ஹதீஸ் பல்கீனம் என்பதையும் விளக்கினோம் உடனே அதில் திருப்திஅடைந்தவராக அந்த கந்திருஷ்ட்டி பொருளை அகற்றினார் அல்ஹம்துலில்லாஹ்