Wednesday 5 June 2013

ஜெனரேட்டர் வாங்க உதவிசெய்த அனைவருக்கும் நன்றி

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகத்தில் இயங்கிவரும் மஸ்ஜித்நூர் பள்ளிவாசலில் ஜெனரேட்டர் இல்லாமல் அங்கு தொழுக வரும் மக்கள் பெரும் கஷ்டப்பட்டார்கள்

இதனால் அங்கு ஜெனரேட்டர் வாங்குவது என முடிவு செய்யப்பட்டு வாங்கப்படும் ஜெனரேட்டர் வருங்காலத்தில் நூர்பள்ளி வளாகத்தில் அமையவிருக்கும் பெண்கள் மதரசவிர்க்கும் பயன்படுமாறு பவர் கூடுதலாக உள்ள ஜெனரேட்டர் வாங்க மக்களிடம் உதவி கோரப்பட்டது இந்த இனையதளம் மூலமாகவும் செய்தி மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது

அல்லாஹ்வின் உதவியால் மக்கள் அதிகமாக உதவி செய்தார்கள் சுமார் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் மதிப்புள்ள  ஒரு ஜெனரேட்டர் ஒரு லட்சரூபாய்க்கு நமது சகோதரர் ஒருவர் மூலமாக விற்பனைக்கு வந்தது அதை வாங்கி மஸ்ஜித்நூரில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தியுள்ளோம்
இதன் தெளிவான கனக்குகள் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியிடபடும்