Wednesday 14 November 2012

சுகாதாரம்கெட்டு குப்பைகிடங்காகவும் பன்றிகளின் பன்னையாகவும் காட்சியளிக்கும் முத்துப்பேட்டை




முத்துப்பேட்டை நகரம் குப்பைமேடாகவும் பன்றிகளின் பன்னையாகவும் மாறிவருகிரது
நீர் ஆதரமாக விளங்கும் குளங்கள் குப்பைமேடாகவும் சாக்கடையாகவும் காட்சியளிக்கிரதுஇதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களினால் ஊர் முழுவதும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருகிரது இதை சீரமைக்க வேண்டிய பஞ்சாயத்து நிர்வாகமோ இது கோயில்குளம்,பக்கத்தில் வசிப்பவர்கள்தான் அசுத்தப்படுத்துகிறார்கள் என பொருப்பற்றகாரனம் கூறி வேடிக்கை பார்த்துவருகிரது
கோயில் குளமாக இருந்தால் அதை சுத்தம் செய்யகூடாது என சட்டமா? அப்படி சுத்தம் செய்வதைதடுத்தால் குளத்தை பஞ்சாயத்து நிர்வாகம் கையகப்படுத்தவெண்டியதுதானே என கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லை
அருகில் வசிப்பவர்கள்தான் அசுத்தப்படுத்துகிறார்கள் என்றால் நிர்வாகம் என்ன செய்யவேண்டும் முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும் பின்பு அதையும் மீறி அசுத்தப்படுத்தினால் தண்டனை கொடுக்கவேண்டும் இதையல்லாம் செய்யாமல் மக்களை கஷ்டப்படுத்தவா மக்கள் உங்களை தேர்தெடுத்தார்கள்?
இதையல்லாம் சுற்றிகாட்டி ஊரை சுத்தப்படுதகூறி தவ்ஹித் ஜமாத் ஏற்கனவே எழுத்துபூர்வமாக அறிவுருத்தியது இதை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் அலட்சியமாகவே நிர்வாகம் இருந்துவருகிரது அதோடுசேர்த்து வெளியூரில் இருந்து லாரியில் பன்றிகளை ஏற்றிவந்து இரவோடு இரவாக முத்துப்பேட்டையில் இறக்கியதாகவும் அதை நேரில் பார்த்த மக்கள் ஆவேசப்படுகிரார்கள்
தவ்ஹித்ஜமாத் இதையல்லாம் சுற்றிகாட்டி இறுதி எச்சரிக்கை செய்துள்ளது இதன்பிறகும் திருந்தாவிட்டால் இன்ஷா அல்லாஹ் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது