Monday 12 November 2012

மின்சாரமும் முத்துப்பேட்டையும்


கரண்ட் என்று ஒன்று இருந்ததா என அடுத்த தலைமுறை கேட்கும் அளவிற்க்கு மிசாரப்பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிரது
முத்துப்பேட்டையை பொருத்தவரை காலை 8 மனிக்கு ஆப் செய்யப்படும் கரண்ட் 12 மனிக்கு சப்ளை செய்யப்படும் அடுத்து 15 நிமிடம் அல்லது 30 நிமிடத்தில் கரண்ட் போகும் பின்பு வரும் இப்படியே நிலையில்லாத மின் சப்ளை செய்யப்படும் இது மதியம் இரண்டு மனிவரை தொடரும் பின்பு சரியாக 2 மனிக்கு ஆப் செய்யப்படும் கரண்ட் மாலை 6 மனிவரை சப்ளை இருக்காது பின்பு 6 மனிக்கு கரண்ட் வரும் அதுவும் சிறிது நேரத்தில் வரும் போகும் இதுதான் இன்றைய முத்துப்பேட்டையின் நிலை
இந்த நிலை ஆயுத பூஜையை முன்னிட்டு திடீர் என மாற்றப்பட்டு சுமார் இரண்டுநாள்கள் 24 மனிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது இதே போல பெருநாளைக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா என எதிர்பார்த்தால் மற்ற நாட்களை விட பெருநாள் அன்று கூடுதலாக மின் சப்ளை நிறுத்தப்பட்டது. திபாவளியை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிரது.
மின்சாரம் பற்றாக்குறை அதனால் கரன் சப்ளை 12 மனிநேரம் நிறுத்தப்படுகிரது என்பதயாவது சகித்து கொள்ளலாம் ஆனால் அனைத்து மத மக்களின் பண்டிகைகளை சமமாக கருதாமல் ஒருகன்னில் சுன்னாம்பு என்ற போக்கை வன்மையாக கண்டிக்கனும் அதே நேரத்தில் நாம் செய்யும் போராட்டம் ஜனநாயக அடிப்படையில் பயனுள்ளதாக அமையனும்
ஏதொ பேருக்காக 40 பேரை கூட்டிகொண்டு ஊர்வலம் போனோம் பாதியில் கலைந்து பொனோம் என இருக்ககூடாது இதே போல வீரியமில்லாத போராட்டங்களுக்கு பிறகுதான் கரண்ட் கட் செய்வது இன்னும் அதிகரித்துள்ளது
தமிழ்நாட்டில் சென்னைக்கு மட்டும் 2 மனிநேரம் கரண்ட் கட் செய்வதும் மற்ற பகுதிகளுக்கு 18 மனிநேரம் கரண்ட் கட் செய்யும் பாரபட்ச போக்கை கண்டித்து வீரியமான போராட்டம் நடத்த தவ்ஹித்ஜமாத் தலைமை ஆலோசனை கூறியுள்ளது இதோடு சேர்த்து இந்த பாரபட்ச போக்கையும் காண்டித்து மக்களை திரட்டி மிகபெரிய போராட்டத்தை முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் அறிவிக்கவுள்ளது இன்ஸா அல்லாஹ்
கூடங்குளம் வேண்டாம் ஆனால் மின்சாரம் வேண்டும் என சில ஓட்டு பொருக்கும் அமைப்புகள் சொல்வதுபோல சொல்லவில்லை 200 கோடிக்குமேல் மக்கள் பனத்தை சிலவு செய்து கட்டமைத்த கூடங்குளத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்து மக்களுக்கு தடையில்லா மின்சரம்வழங்கவேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை பொருத்திருந்து பார்ப்போம்