Tuesday 19 March 2013

பண்டாரவடை ஜமாத்தின் மனிதநேயமற்ற போக்கு தொடர்கதையாகிரது



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக ஆதர்வற்ற முதியோர்களை கவனித்து பரமரிப்பதற்க்காக ராஜகிரி பண்டாரவடையில் ஒரு முதிய்யொர் இல்லம் செயல்பட்டுவருகிரது இதில் சுமார் 20 ஆதரவற்ற முதியவர்கள் தங்கி தங்களது காலத்தை மகிழ்ச்சியாக கழித்துவருகிறார்கள்

இதை பொன்ற பனிகளில் போட்டிபோட்டு கொண்டு நாமும் செய்வோம் என களமிரங்க வேண்டிய பண்டாரவடை முஸ்லிம் ஜமாத் நமக்கு எந்தவித உதவியோ ஒத்துழைப்போ கொடுப்பதில்லை ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை அந்த முதியோர் இல்லத்தில் நோய்வாய்பட்டு இறந்துபோகும் நபர்களின் ஜனாசாவை கூட பொது மையவாடியில் அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை இவர்களும் முஸ்லிகள் என சொல்லிகொல்கிறார்கள்

நேற்ரு முதியோர் இல்லத்தில் ஒரு பெரியவர் மௌத்தாகிவிட்டார்கள் [இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹிராஜியூன்] வழக்கம்போல அடக்கம் செய்ய பண்டாரவடை ஜமாத் அனுமதிதராததால் குறிஞ்சிமலை ரோட்டு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதை பார்த்தாவது வருங்காலங்களில் பண்டாரவடை ஜமாத் பாடம் கற்றுகொள்வார்களா? அல்லஹ்விடம் துவா செய்வோம்