Tuesday 4 June 2013

ஸ்வீடன் நாட்டில் முதல்முறையாக பாங்குஓசை வெளியே கேட்டது

ஸ்வீடன் நாட்டில் வெடியா பள்ளிவாசலில் முதல்முறையாக பாங்கொலி வெளியே கேட்டது. சுமார் மூன்று நிமிடங்கள் நகரில் ஒலித்த தொழுகை அழைப்பு முஸ்லிம்களை பரவசப்படுத்தியது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்குத் தெற்கே வெடியா நகரம் உள்ளது.

இந்தப் பள்ளிவாசலில் சுமார் ஏழாயிரம்பேர் தொழுதுவருகிறார்கள். இதுவரை சப்தமிட்டு பாங்கு சொல்வதற்குத் தடை இருந்தது. ஸ்டாக்ஹோம் காவல்துறையினர் இப்போதுதான் அனுமதி வழங்கியுள்ளனர்.

சுவீடன் நாட்டில் சுமார் 200 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் சில பள்ளிவாசல்களில் மட்டுமே பாங்கு மேடை உள்ளது. பெரும்பாலான பள்ளிவாசல்கள் தாற்காலிகக் கட்டடங்களிலேயே இயங்கிவருகின்றன.