Tuesday 18 June 2013

குவைத்தில் தூக்கில் போட இருந்தவர்களை டிரஸ்ட் ஜமாத் காப்பாற்றியதா? ஒரு விரிவான அலசல்

குவைத்தில் முத்துப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கும்பகோனத்தை சேர்ந்த தாஸ் என்பவருக்கும் 18.06.2013 அன்று தூக்குதண்டனை நிறைவேற்றபட இருப்பதாக அறிவிப்பு வெளியானது

இந்த இரண்டுபேரும் ஒரு ஸ்ரீலங்க பென்னோடு சேர்ந்து பாத்திமா என்ற பெண்னை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அது கோர்ட்டில் நிறுபிக்கப்பட்டு ஜெயிலில் வைக்கப்பட்டு இருந்தனர்

இஸ்லாமியசட்டப்படி பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் விடுதலை ஆகிவிடலாம் என்பதால் ஜெயிலில் உள்ளவர்களின் தரப்பில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துபேசினார்கள் 12 லட்சரூபாய் நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டு மன்னித்துவிட அவர்கள் சம்மதம் தெறிவித்த அடிப்படையில் இவர்கள் 12 லட்சம்கொடுத்து சரிசெய்தார்கள்

12 லட்சம் நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டதற்க்கன ஆவனம் முறைப்படி குவைத் அரசாங்கத்திற்க்கு வந்து சேராததால் 18 ம் தேதி தூக்குதண்டனை நிறைவேற்றபட வேண்டிய ஐந்து பேர்களில் இவர்கள் இருவர் பெயரும் இடம் பெற்றது இதை பார்த்து பதரிபோன இருவரின் பெற்றோரும் தொகுதி எம்பி ஏகேஎஸ் விஜயனை பார்த்து நிலைமைய சொன்னார்கள் எம்பி அவர்கள் வயலார் ரவி சல்மான் குர்ஷித் போன்றவர்களை பார்த்து அந்த ஆவனம் உடனே கிடைக்க ஏற்பாடு செய்தார்கள் குவைத்தில் உள்ள தூதரகத்தையும் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கினார்கள்

இவர்களின் துரித முயர்ச்சியால் வெள்ளிகிழமை ஆவனம் குவைத் வந்து சேர்ந்தது உடனே தண்டனை ரத்து செய்யப்பட்டது இதை இந்தியதூதரகம் இந்திய அதிகாரிகளுக்கு ஈமெயில் மூலம் தெறியப்படுத்தியது இதற்க்காக முயற்ச்சி செய்தவர் என்ற அடிப்படையில் எம்பி அவர்களுக்கும் ஒரு ஈமயிலில் ஒரு காப்பி அனுப்பப்பட்டது எம்பி மூலமாக தவல் அறிந்த குடும்பத்தார் நிம்மதியடந்தனர்

இதற்க்கிடையில் டிரஸ்ட்ஜமாத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்தான் தண்டனையை நிறுத்தினோம் என வழக்கம்போல அடுத்தவன் உழைப்பை அறுவடை செய்ய பார்த்தார்கள் யார் முயற்ச்சி செய்தார்கள் என்பதற்க்கு ஆதாரமாக குவைத் தூதரகம் அனுப்பிய கடிதத்தை கீழே இனைத்துள்ளோம் அதில் இந்த கடிதத்தின் நகல் யார் யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடபட்டுள்ளது அதில் டிரஸ்ட் பெயர் இருக்கா என நீங்களும் தேடி பாருங்கள்

நாம் பார்த்தவரை அரசு அதிகார வர்க்கமல்லாமல் ஏகேஎஸ் விஜயனுக்கு மட்டும்தான் தூதரகம் கடிதம் அனுப்பியுள்ளது

ஏகேஸ் விஜயன் திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும் தவ்ஹித்ஜமாத்திற்க்கு சம்மந்தம் இல்லாதவராக இருந்தாலும் நடந்த உண்மை நிலமையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை வெளியிட்டுள்ளோம்