Thursday 27 June 2013

கேவலம் ஓட்டுக்காக இஸ்லாத்தையே எதிர்க்கும் போலி இஸ்லாமிய[ஏபிசிடி]அமைப்புகள்

ஆட்டை கடித்து மாட்டைகடித்து கடைசியில் மனிதனையே கடித்த கதை என்பார்கள் அதேபோல இஸ்லாம் ஜிஹாத் என ஆரம்பித்து அது போனியாகாமல் அரசியல் பன்ன ஆரம்பித்த ஏபிசிடிக்கள் ஏதோ விநாயகர் சதுர்திக்கு போஸ்டர் அடித்தோம் கோயில் கும்பாபிஷேகத்திர்க்கு வாழ்த்து தெறிவித்தோம் என்று இருந்தவர்கள் இப்போது இஸ்லாமிய சட்டத்தையே விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள்

மரனதண்டனை ஒரு சித்திரவாதையாம் இதை எதிர்க்கிரார்களாம். தனது மகனையோ தனது தாயையோ ஒருவன் அநியாயமான முறையில் கொலை செய்து இருந்தால் அப்போது அந்த கொலைகாரனுக்கு மரனதண்டனை வழங்கப்பட்டால் அதை சித்திரவாதை என சொல்வார்களா?இந்த பாவிகள்.

அல்லாஹ் அருளிய ஒரு சட்டத்தை அதிலும் இஸ்லாத்தை எதிர்க்கும் அத்வானி போன்றவர்களே இஸ்லாமிய சட்டம்தான் சரியான தீர்வு என சொல்லும் இந்த காலத்தில் கேவலம் ஓட்டுக்காக இஸ்லாத்தையே கேலிகூத்தாக்கும் இவர்கள் மறுமையை நினைத்தாவது திருந்துவார்களா?

இவர்கள்தான் இப்படி என்றால் தவ்ஹித் எங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என தவ்ஹித்வாதிகளை வெளியேற்றிவிட்டு அல்லாஹ்மீது செய்த சத்தியத்தையே முறித்துவிட்டு அரசியலில் இறங்கியவர்கள்
 ஏதோ குவைத்தில் ரோட்டில் போய் கொண்டு இருந்த இரண்டு பேரை பிடித்து தூக்கில் போட முயற்ச்சித்த மாதிரியும் அதை இவர்கள்[ டிரஸ்ட்ஜமாத்,மமக] லட்டர்பேடில் எழுதிய வசனத்தை பார்த்து குவைத் அரசாங்கம் பயந்து தற்காலிகமாக நிறுத்தியமாதிரியும்பின்பு இவர்கள் முத்துப்பேட்டையில் நடத்திய கடையடைப்பால் குவைத் மன்னர் பயந்துபோய் தூக்குதண்டனையை நிரந்தரமாக நிறுத்திவிட்டதாகவும் கதையளந்துகொண்டுள்ளார்கள்

பிரச்சனை என்ன என்றால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வாரிசு கொலை செய்தவர்களிடம் நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டு  இவர்களை மன்னித்துவிட்டார்கள்
நஷ்ட ஈடு கொடுத்த பிறகும் தூக்கில் போடுவது எப்படி நியாயமாகும் என்பதுதான் கேள்வியே தவிற இவர்கள் சொல்வது போல சும்மா ரோட்டில் போய் கொண்டு இருந்தவர்களை பிடித்து தண்டனை கொடுக்கவில்லை

நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டதற்க்கான ஆவனம் குவைத் வந்து சேராததால் குவைத் அரசாங்கம் தண்டனையை நிறைவேற்ற முற்பட்டது
விஜயன் எம்பி யின் முயற்ச்சியால் ஆவனம் வந்ததும் தண்டனை நிறுத்தப்பட்டது
பின்பு ஆவனங்கள் முறையாக சரி பார்க்கப்பட்டு இவர்கள் மீது வேறு எந்த வழக்கும் இல்லை என்றால் விடுதலை செய்வார்கள் இவர்கள் முத்துப்பேட்டையில் நடத்திய கடையடைப்புக்கல்லாம் தண்டனையை நிறுத்துவது என்றால் ஒருத்தருக்கு கூட இங்கு தண்டனை கொடுக்க இயலாது

மக்களை மடையர்களாக ஆக்குவதில் யார் முந்திகொள்வது என போட்டா போட்டி போட்டுகொண்டு பத்தாகுறைக்கு இஸ்லாமிய சட்டத்தையும் முஸ்லிம் நாடுகளையும் கேவலப்படுத்திகொண்டு திறிகிறார்கள் அந்த இரண்டு பேருக்கு தண்டனை நிறைவேற்றுவதாக இருந்த அதே நாளில்தான் குவைத் நாட்டு பெண்ணையே தூக்கில்போட்டு தண்டனை கொடுத்தார்கள்