Tuesday 1 October 2013

வினாயகர் ஊர்வல வரம்பு மீரல் சம்மந்தமாக மாவட்ட காவல்துறை கன்கானிப்பாளர் காளிராஜ் மாகேஷ் குமாருடன் நேரில் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை சார்பாக  ஊர்வலத்தில் வரம்பு மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இன்னும் சில கோரிக்கைகளை முன்னிருத்தியும் 28.09.2013 அன்று  திருவாரூர் மாவட்டகாவல்துறை   கன்கானிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமாரை நேரில் சந்தித்து வலியுருத்தப்பட்டது

இது சம்மந்தமாக எஸ்பியை சந்திக்க போன குழுவிற்க்கு தலைமை தாங்கி போன கிளை உதவி தலைவர் கட்டி நாநா அவர்கள் நம்மிடம் எஸ்பியை சந்தித்த போது நடந்தது என்ன என்பதை விளக்கினார்

நாம் போய் எஸ்பியை சந்திந்ததுமே அவர் நம்மிடம் அந்த வரம்பு மீறிய ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டதாக கூறினார்

மேலும் அவர் கூறுகையில் இரவு நேரத்தில் இருட்டில் பிரச்சனை செய்யலாம் என்று திட்டம் போட்டுதான் நேரம் கடந்து வந்திருப்பார்கள் என்பதை ஒத்து கொண்டார்

இந்த நிலை வரும் வருடங்களில் நீடிக்காமல் இருக்க தவ்ஹித்ஜமாத் வலியுறுத்தும் இரண்டு ஆலோசனைகளான 1. மன்னார்குடி ரோடு வழியாக இசிஆர் ரோட்டில் போகவேண்டும் 2. காலை 10 மனிமுதல் பகல் 2 மனிக்குள் ஊர்வலத்தை முடித்துவிட வேண்டும்  என்பதை கூறினோம்

மிகவும் சரியான ஆலோசனை இதை அமல்படுத்தினாலே பெறிய அளவிலான  டென்சன் குரைந்துவிடும் இதை நடை முறை படுத்த முயற்ச்சிப்பதாக வாக்குறுதியளித்தார்

இதுவல்லாமல் இன்னும் சில வேலைகளையும் தவ்ஹித்ஜமாத் சட்டபூர்வமாக செய்துவருகிறது அதன் முழு விபரம் இப்போது கூற இயலாது இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்லபடியாக நடக்கும் நீங்களும் துவா செய்யுங்கள் என்று நமது இனையதளத்திற்க்கு அளித்த பேட்டியில் கூறினார்