Friday 20 September 2013

வினாயகர் ஊர்வலம் விதிமுறை மீறல் சம்மந்தமாக தவ்ஹிட்ஜமாத் கொடுத்த புகார்மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறை மனுரசீது வழங்கியது

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை ஒருங்கினைந்த கிளை சார்பாக காவல்துறையில் புகார் கொடுத்த விபரத்தை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்

இன்று புகாரை ஏற்றுகொண்ட காவல்துறை பெற்றுக்கொண்டதற்க்கு ஆதரமாக மனுரஷீதை நம்மிடம் வழங்கியது

முத்துப்பேட்டையில் முந்தைய காலங்களில் பிரச்சனைகள் அதிகமாகி வீட்டைவிட்டே வெளியே வர பயந்து அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடந்த போது தைரியமாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தது தவ்ஹித்ஜமாத்தான்

அந்த அசாதரமான சூழ்நிலையில் தவ்ஹித்ஜமாத்தை தொடர்பு கொண்ட ஜமாத் தலைவர்கள்  நீங்களே பொருப்பேற்று செய்யுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் தருகிறோம் என வாக்குறுதி கொடுத்ததும்

ஊரில் கடுமையான சூழ்நிலை மாறி இயல்பு நிலை திரும்பியதும் நீங்கள் ஒதுங்கிகொள்ளுங்கள் இதுவரை நீங்கள் எவ்வளவு பனம் சிலவு செய்துள்ளீர்களோ அதை நாங்கள் தந்துவிடுகிறோம் என சொல்லி அப்படியே மாறிகொண்ட நிகழ்வுகளையும் தவ்ஹித்ஜமாத் சந்தித்ததுண்டு.

ஊர்வல பாதை மாற்றுவது சம்மந்தமாக ஆரம்பத்தில் இருந்து களப்பனி ஆற்றியது தவ்ஹித்ஜமாத்தான் ஆனால் ஊரில் எந்த களப்பனியும் செய்யாமல்  ஒரு துரும்பை கூட அசைக்காமல் கோர்ட்டில் கேஸ் போட்டதால்தான் பாதை மாறியது என கூறி அதற்க்காக அப்பாவி செல்வந்தர்களிடம் பனம் வசூல் செய்து அதற்க்கு இதுவரை எந்த கனக்கும் காட்டாமல் இருப்பவர்களையும் நாம் பார்த்துதான் வருகிறோம்

இதையல்லாம் நாம் குறிப்பிடகாரனம் அதே போல மறுபடியும் யாரும் வந்து நாங்கள்தான் செய்தோம் என ஊரை ஏமாத்தி பனம் வசூல் செய்துவிடகூடாது என்பதால்தான்

ஒவ்வொரு நாளும் நாம் என்ன என்ன செய்துவருகிறோம் என்பதை ஆதாரத்தொடு மக்களிடம் தெறிவித்து வருகிறோம்
ஒரு சில நடவடிக்கைகளை பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி ரகசியமாக வைத்திருந்தாலும் காலம் வரும்போது இன்ஸா அல்லாஹ் ஆதாரத்தோடு வெளியிடுவோம்