Wednesday 18 September 2013

வினாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்வீடு மீது கல்வீச்சு!! நடந்தது என்ன?




செங்கள்களை கொண்டு தாக்கிய அடையாளம்
முத்துப்பேட்டையில் நேற்று நடந்த வினாயகர் ஊர்வலம் மழையால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது என நாம் எழுதியிருந்தோம்

ஆனால் இரவு நமக்கு ஒரு வீடு மீது கல்வீசி தாக்குதக் நடத்தியதாக செய்தி வந்தது நேரில் போய் விசரித்து விட்டு செய்தியை வெளியிடலாம் முடிவு செய்து நம் ஜமாத் நிர்வாகிகள் நேரில் சென்றார்கள்

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல காலதாமதமாக வினாயகர் ஊர்வலம் இரவு நேரத்தில் முத்துப்பேட்டைக்குள் வந்தது கலவரம் செய்யதான் என்பது நிறுபனம் ஆகியுள்ளது. மழை மட்டும் பெய்யாமல் இருந்து இருந்தால் அவர்கள் திட்டம் போட்டு வந்ததை செய்து இருப்பார்கள்.

பங்களாவாசலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள் அந்த இடத்தில் தடை செய்யப்பட்ட வினாயகருக்கு சம்மந்தமில்லாத கோஷங்களையும் எழுப்பி மக்களின் உனர்ச்சியை தூண்டிவிட்டுள்ளார்கள்

நம் நிர்வாகிகளிடம் நடந்தவைகளை வீட்டின் உரிமையாளர் விரிவாக எடுத்துவைத்தார் இது போல மறுபடியும் நடக்காமல் இருக்க ஆவன செய்யுமாறு  கேட்டுகொண்டார்

இதில் நமக்கு எழும் கேள்வி என்ன என்றால் குறித்த நேரத்திற்க்குள் ஊர்வலத்தை முடிக்க போலீஸ் ஏன் நிற்பந்திக்கவில்லை?

கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை ஏன் அந்த இடத்திலேயே கைது செய்ய வில்லை? அவர்கள் கல்வீசும் போது போலீஸ் எங்கு போய் இருந்தது?

முஸ்லிம்கள் கடையை அடைத்து விடுங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் உங்கள் பாதுகாப்பிற்க்குதான் நாங்கள் என உறுதி கொடுத்ததை நம்பிதானே நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்

அவர்கள் எங்கள் பகுதியிலேயே வந்து எங்கள் வீட்டின் மீதே தக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக போக நீங்கள் உதவி செய்துள்ளீர்களே?

இது சம்மந்தமாக தவ்ஹித்ஜமாத்தின்  முத்துப்பேட்டை கிளையின் ஒருங்கினைந்த ஆலோசனை கூட்டம் இன்னும் சிறிது நேரத்தி ஆரம்பமாக உள்ளது அதில் எடுக்கப்படும் முடிவுகள் இன்ஸா அல்லாஹ் விரைவில் வெளியிடப்படும்