Saturday 14 September 2013

வினாயகர் ஊர்வலம் பீஸ் மீட்டிங்,தும்பைவிட்டு விட்டு வாலை பிடிக்கும் நிலை தொடரும் அவலம்.


இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் வினாயகர் ஊர்வலம் சம்மந்தமாக காவல்துறையும் முஸ்லம்களும் கல்ந்தாய்வு கூட்டம் நடை பெற்றது

அதில் காவல்துறை சார்பாக நாம் ஒத்துழைப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்தார்கள் நம் பகுதி  இளைஞர்களுக்கு நாமே பொருப்பேற்று அமைதியாக வழி நடத்துமாறும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் எதுவாக இருந்தாலும் நேரடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாரும் வேண்டுகோள் வைத்தார்கள்

நம் ஊர் முஸ்லிம்கள் சார்பாகவும் எல்லா வருடமும் வைப்பது போல அமைதிக்காக ஒரு சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது

இதுவல்லாம் வருடவருடம் நடப்பதுதான் என்றாலும் இந்த வருடம் ஒரு விசயம் நம்மை பெறிதும் பாதித்தது அதாவது இந்த வருடம் புதிதாக பேட்டை பகுதியில் இளைஞர்கள் வினாயகர் ஊர்வலம் எடுத்ததாகவும் அப்போது பள்ளிவாசல் முன்புவைத்து வெடி வெடித்ததாகவும் இனி இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என  பேட்டை முஹல்லா தலைவர் எஸ்பியிடம் வேண்டுகோள் வைத்தார்


இது நமக்கு புது செய்தியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது உடனே நம் பிரதிநிதியாக சென்றிருந்த கட்டிநாநா அவர்கள் இது சம்மந்தமாக காவல்துறையில் புகார் கொடுத்தீர்களா என கேட்டார்கள்

அதற்க்கு பேட்டை தலைவர் அவர்கர்கள்  காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை பாக்கர் அலியிடம் சொன்னோம் என்றார்களாம்.
என்ன செய்யனுமோ அதை செய்யாமல் ஏன் பாக்கர் அலியிடம் போய் சொன்னார்கள்? பாக்கர் அலியாவது காவல்துறையில் புகார் கொடுத்து இருக்கலாம் ஏன் செய்யவில்லை?

இது போன்ற நேரங்களில் தவ்ஹித்ஜமாத்தை அனுகினால் இதை உயர் அதிகாரிகள் கவனத்திற்க்கு கொண்டு சென்று இதை ரிகார்டு பூர்வமாக பதிவு செய்து சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவைத்து இனி இதுபோல் நடக்காமல் இருக்க உத்திரவாதம் பெற்றிருக்கலாமே?

இப்படி சாதாரன ஒரு விசயத்தைகூட ஒழுங்காக செய்யவில்லை என்றால் எப்படி? தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பது என ஒரு பழமொழி சொல்வார்களே அதுதான் நம் யாபகத்திற்க்கு வருகிறது