Sunday 15 September 2013

அதிகடெசிபல் அதிர்வேட்டு!! அதிர்ச்சியில் உடல் நிலை பாதிப்பு!! நடந்தது என்ன?

முத்துப்பேட்டை பேங்குதெருவில் அமைந்துள்ளது திருமன மண்டபம் இங்கு கல்யானம் புக் ஆகிவிட்டது என்றாலே அந்த பகுதி மக்கள் வீட்டை காலி பன்னிகொண்டு வேறு இடம் போய்விட வேண்டியதுதான் அவ்வளவு தொந்தரவுகள்.

மண்டபத்திற்க்கு வெளியே அதிக சத்தம்வாய்ந்த ஸ்பீக்கர்களை வைத்து இரவு முழுவதும் பாட்டு மேள தாளங்களை ஒலிபரப்பி அனைத்து மக்களின் இரவு நிம்மதியை கெடுத்துவிடுவார்கள்

கல்யான மண்டபத்தில் கல்யானம் என்றால் ஏன் மண்டபத்திற்க்கு வெளியே ஸ்பீக்கர்  வைக்கனும்.உள்ளே வைத்து கொண்டால் போதாதா?யார் கேள்வி கேட்பது என எல்லாரும் இருந்து விட்டதால் அவர்கள் இஷ்டப்படி எதை பற்றியும் கவலைபடாமல் செய்து வந்தார்கள்

இதன் உச்சக்கட்டமாக கடந்த ஆண்டு 12 வது மாதம் பிஜெபியில் ஒருவருக்கு பதவி கிடைத்ததை கொண்டாடுகிரேன் என்ற பெயாரில் எவ்வளவோ மண்டபங்கள் இருந்தும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள இந்த மண்டபத்தை தேர்வு செய்து விழா நடத்தினார்கள்

அதில் அதிக டெசிபல் சத்தம் உண்டாக்கும் வேட்டுகளை வெடித்தார்கள் அப்போது வீடுகள் அதிர்ந்தது சில வீடுகளில் ஜன்னல் கன்னாடிகள் உடைந்தது

 அந்த வெடி சத்தத்தில்தான்  மண்டபத்திற்க்கு மிக அருகில் வசித்துவரும் சமூக சேவகர் சஜாத்ஹைதர் அவர்களின் மனைவி பெரிதும் பாதிக்கப்பட்டு உடனடியாக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நலமடைந்து வருகிரார்கள்

இந்த சம்பவத்திற்க்கு பிறகு சகோதரர் சஜாத் அவர்கள் மண்டப நிர்வாகியை பார்த்து மக்கள் அனுபவித்துவரும் கஷ்டங்களை விளக்கமாக சொல்லி தன் மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பையும் விளக்கி வரும் காலங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்து கொள்ளுங்கள் என கேட்டுகொண்டார்

அதன் பிறகும் அவர்களின் போக்கில் எந்த மாறுதலும் இல்லை வழக்கம்போல ஸ்பீக்கர்கள் வெளியே வைக்கப்பட்டு மேலதாளம் பாட்டு கச்சேரி  என மக்களின் நிம்மதியை கெடுத்து வந்தார்கள்

நேற்று இதே போல ஒரு கல்யானத்தில் ஸ்பீக்கரை வெளியே வைத்து அதிக சத்தத்தில்பாட்டுக்களை ஒலிபரப்பியது பத்தாது என்று அதிர் வேட்டுகளையும் வெடிக்க ஆரம்பித்தார்கள்

ஒரு ஒரு வெடி வெடிக்கும்போதும் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் செத்து செத்து பிழைத்தார்கள் என்று சொல்லலாம்
இதில் ஏற்கனவே பதிக்கப்பட்டு தற்போது குனமாகிவரும் சஜாத் அவர்களின் மனைவிக்கு அதிர்சி அதிகமாகி மயக்க நிலைக்கு போய்விட்டார்கள் மறுபடியும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்

இனியும் இதை தொடரவிட கூடாது என முடிவு செய்து சகோதரர் சஜாத் அவர்கள் தவ்ஹித்ஜமாத்தை தொடர்[பு கொண்டார்கள் உடனே சம்பவ இடத்திற்க்கு போன நிர்வாகிகளிடம் அந்த பகுதி மக்கள் அனைவரும் இதற்க்கு ஒரு தீர்வு கானும்படி வற்புறுத்தினார்கள்

எந்த ஒரு பிரச்சனையையும் முறைப்படி அனுகவேண்டும் என்பதை கொள்கையாக வைத்துள்ள தவ்ஹித்ஜமாத் பெரும் பாதிப்புக்குள்ளான சஜாத் அவர்களை ஒரு புகார் கடிதம் எழுத சொல்லி அந்த புகார் கடிதத்தை எடுத்து கொண்டு அவரையும் அழைத்து கொண்டு காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார்கள்

நம் கோரிக்கையை முழுவதுவதுமாக கேட்ட போலீஸ்அதிகாரி இனிமேல் நடக்காமல் நான் நடவடிக்கை எடுக்கிறேன் இனிமேல் போலீஸ் அனுமதி இல்லாமல் வெடி வெடிக்ககூடாது என மண்டப நிர்வாகத்திற்க்கு உத்திரவு போட்டுவிடுகிறேன் வரும் 17ம் தேதி வினாயகர் ஊர்வலம் இருப்பதால் 18ம் தேதி மீண்டும் வாருங்கள் நான் நல்ல ஒரு முடிவை சொல்கிறேன் என உறுதி கூறினார்

இன்ஸா அல்லாஹ் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவோம் .இந்த பிரச்சனக்கு முற்றுப்புள்ளிவைத்து மக்கள் நிம்மதியாக வாழ வகை செய்யாவிட்டால் தவ்ஹித்ஜமாத்தின்  மாநில மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலில் மிகபெறிய போராட்டத்தை அறிவிக்க வேண்டிவரும் என்பதை மட்டும்  இப்போதைக்கு சொல்லி கொள்கிறோம்

.