Thursday 19 September 2013

வினாயகர் ஊர்வல பாதையை மாற்றுவதுதான் நிறந்தர அமைதிக்கு ஒரே தீர்வு! தவ்ஹித்ஜமாத் காவல்துறையிடம் மனு

நேற்று நடந்த  வினாயகர் ஊர்வலத்தின் போது விஷமிகள் ஒரு வீட்டின்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது சம்மந்தமாகவும்

ஊர்வல்த்திற்க்கு அனுமதி கொடுத்த நேரத்தில் வராமல் வேண்டுமென்றே இரவு வேளையில் ஊர்வலம் வந்தது சம்மந்தமாகவும்

இதே நிலை வருங்காலங்களில் தொடராமல் இருக்க என்ன செய்யலாம் என முடிவு எடுக்க முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் கிளைகளின் ஒருங்கினைந்த கூட்டம் ரஹ்மத் பள்ளிவாசலில் நடந்தது

பல வருடங்களாக இந்த பிரச்சனை நீடித்துவர காரனம் இந்துக்கள் அதிகமக வாழும் பகுதிக்குள் ஊர்வல பாதையை அமைத்து கொள்ளாமல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிக்குள் பிரச்சனை செய்ய என்றே ஊர்வலம் வருவதுதான் காரனம் என்பது தெளிவாக தெறிகிரது

நாளைக்கு முஸ்லிம்கள் எதாவது ஒரு ஊர்வலம் எனும் பேரில் இந்து பகுதிக்குள்தான் போவோம் என சொன்னால் எப்படி சட்டம் ஒழுங்கை காரனம் காட்டி அனுமதி கொடுக்க மாட்டார்களோ அதே போல இவர்கள் வினாயகரை தூக்கிகொண்டு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்குள் வர அனுமதிக்ககூடாது

எத்தனையோ தடவை எத்தனையோ வாக்குறுதிகள் அவர்களிடம் பெற்றுகொண்டு அனுமதி கொடுத்தும் அதை அவர்கள் கொஞ்சம்கூட மதிக்காமல் மீறியே வருகிறார்கள்

காவல்துறையும் இதற்க்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இனி அடுத்தவருடம் நடக்காது என நம்மை சமாதனபடுத்துவதுதான் வாடிக்கையாகி விட்டது

இதனால் இனிவரும் காலங்களில் மக்கள் அமைதியாக வாழ  ஊர்வல பாதையை மாற்றி அமைப்பதுதான் ஒரே வழி என கருதுகிறோம்

ஊர்வல நேரத்தை காலை 10 மனிமுதல் பகல் 2 மனிக்குள்ளாகவும்  மன்னார்குடி ரோடு வழியாக ECR ரோட்டில் போக பாதையை மாற்றி அனுமதி கொடுக்கும்படியும்,நேற்று தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் மனு கொடுக்கப்பட்டது

இந்த புகாரின் நகல்  டிஎஸ்பி,  எஸ்பி,  டிஐஜி, ஐஜி,  இன்னும் முதலமைச்சரின் தனிபிறிவு அதிகாரி ஆகியோருக்கும் தவ்ஹித்ஜமாத்  மாவட்ட,  மாநில தலமைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது